மும்பையில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 97 பேர் பலி

Updated : ஜூன் 12, 2020 | Added : ஜூன் 12, 2020
Share
Advertisement

மும்பை : மஹாராஷ்டிராவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகளால் மும்பையில் மட்டும் இன்று(ஜூன் 12) 97 பேர் பலியாகியுள்ளனர்.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. அதிலும் மஹாராஷ்டிரா மாநிலம் தான் அதிக பாதிப்புகளுடன் முன்னிலையில் உள்ளது. மஹா.,வை பொறுத்தவரை பல்வேறு நகரங்களில் நோய் பரவினாலும் மும்பையில் அதிக பாதிப்பு பதிவு செய்யப்படுகிறது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 1,418 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மும்பையில் மொத்தமாக பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 54,085 ஆக உள்ளது.


latest tamil news



இதை தொடர்ந்து நோய் பாதிப்புக்கு நகரத்தில் புதிதாக ஒரே நாளில் 97 பேர் பலியாகினர். பலியானவர்களில் 63 பேர் ஆண் மற்றும் 34 பேர் பெண் என தெரியவந்துள்ளது. இதனால் மொத்தமாக பலியானவர்களின் எண்ணிக்கை 1,954 ஆக உயர்ந்துள்ளது.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X