தமிழ்நாடு

வெளியூர்களில் இருந்து வருவோரால் திணறும் கோவை: கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு

Updated : ஜூன் 12, 2020 | Added : ஜூன் 12, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
கொரோனா ,பாதிப்பு, தொடர்ந்து அதிகரிப்பு,திணறும்,கோவை

கோவை: சென்னை மற்றும் டில்லியில் இருந்து கோவை வந்த இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த, 52 வயது நபர், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு இறுதி சடங்கு ஒன்றில் பங்கேற்பதற்காக, கார் மூலம் கோவை வந்தார். சோதனைச்சாவடியில் அவருக்கு பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. நேற்று முன்தினம் டில்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியாகின. அதில், 29 வயது இளைஞருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் கோவை, இ.எஸ்.ஐ.,மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், கோவை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 173 ஆக உயர்ந்துள்ளது.


latest tamil news





மேலும் 7 பேருக்கு பாதிப்பு!



கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரமேஷ்குமார் கூறுகையில், ''சென்னையில் இருந்து கோவை வந்த 31 வயது பெண், 6 மாத குழந்தை மற்றும் ரயில் மூலம் வந்த 35 வயது பெண், 11 வயது சிறுவன், 31 வயது பெண் மற்றும் 24 வயது ஆண் ஆகியோருக்கும், டில்லியில் இருந்து தனி வாகனம் மூலம் கோவை வந்த 23 வயது நபருக்கும் கொரோனா தொற்று இன்று கண்டறியப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள், இ.எஸ்.ஐ., மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். தற்போது வெளியாகும் கொரோனா பட்டியல் குறித்து பலருக்கும் சந்தேகமும் குழப்பமும் ஏற்படுவதாகத் தெரிவிக்கின்றனர். வெளியூரில் இருந்து கோவை வருவோருக்கு, கொரோனா பரிசோதனை செய்து, பாதிப்பு உறுதி செய்யப்படும் பட்சத்தில், அந்த நபர்கள் முதலில் கோவை கணக்கில்தான் சேர்க்கப்படுவார். அதன் பின்னர்தான் எந்தப் பகுதியில் இருந்து வந்தனரோ அந்த ஊர் கொரோனா பட்டியலில் அவர்கள் சேர்க்கப்படுவர்,'' என்றார்

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
13-ஜூன்-202000:48:49 IST Report Abuse
மலரின் மகள் சென்னையில் இருந்து டில்லியில் வருபவர்கள் கொரானாவை கொண்டு வருகிறார்கள் என்பது போன்ற ஒருவித போக்கு தேவையற்றது. அவரவர்கள் வாழ்ந்த பகுதி உறவினர்கள் உற்றவர்கள் பகுதிக்கு வரவேண்டிய கட்டாயம் இருக்கிறது அதனால் தானே பல மடங்கு கட்டணம் செலுத்தி அல்லலுக்கு உள்ளாகி ரிஸ்க் எடுத்து காரிலும் விமானத்திலும் வருகிறார்கள். கருணையோடும் அனுசரணையோடும் அவர்களை பார்ப்போம் நாம். நமது அன்பும் அரவணைப்பும் கருணை உள்ளமும் அவர்களுக்கு நோயை எதிர்த்து போராடி வென்று வருவதற்கு மனதளவிலும் உடல்வலிமையும் பெற்று தருவோம். முகம் தெரியாத அந்த சகோதர சகோதரி சொந்தங்கள் நலம் பெறட்டும். ஆயிரம் கண்ணுடையால் மலை போல் வந்த வினைகளை பனிபோல் தீர்த்து விடுவாள். நலம் பெறட்டும்.
Rate this:
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
12-ஜூன்-202022:21:02 IST Report Abuse
Siva எங்கள் கிராமத்தில் காய்கறிகள் விற்பவர்கள் பார்த்தல் பயமாக இருக்கிறது.. அவனும் மாஸ்க் போடலே... நானும் ..... அப்புறம் எப்படி ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X