எச்1பி விசாக்களை நிறுத்திவைக்க அமெரிக்கா பரிசீலனை

Updated : ஜூன் 12, 2020 | Added : ஜூன் 12, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

வாஷிங்டன் : அமெரிக்காவில் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக எச்1 பி, எல் 1 மற்றும் ஜே 1 விசாக்கள் வழங்குவது குறித்து அந்நாட்டு அரசு பரிசீலனை செய்து வருகிறது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து அதிக பாதிப்புகளுடன் அமெரிக்கா முன்னிலையில் உள்ளது. நோய் பாதிப்புகளையொட்டி நாட்டில் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் குடியுரிமை பெறாமல் அங்கு தங்கி பணிபுரியும் பிறநாட்டவர்களுக்கு எச்1 பி விசா வழங்கப்படும். இந்த விசாக்கள் பொதுவாக 3 ஆண்டுகள் வரை நிர்ணயித்து வழங்கப்படும். அதே போல் 'எச்1 பி' விசா மூலம் நீண்டகாலம் அங்கு பணியாற்றும் வெளிநாட்டினர் கிரீன் கார்டு பெற்று அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமையை பெறுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 'எச்1 பி' விசாவை நீட்டிக்கவும், கிரீன் கார்டு பெறுவதற்கும் லட்சக்கணக்கான விண்ணப்பங்கள் குவிந்து வருவதாக கூறப்படுகிறது.


latest tamil news



கொரோனா பாதிப்புகளால் அமெரிக்காவின் பொருளாதாரம் நிலைகுழைந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதை மீட்க அந்நாட்டு அரசு பல்வேறு முயற்சி எடுத்து வருகிறது. இதனால் ஏப்.,24 முதல் 60 நாட்களுக்கு குடியேற்ற உரிமை இல்லாதவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டது. இந்த தடை வரும் 22 முதல் முடிகிறது, இதனால் அமெரிக்காவில் வெளிநாட்டவர் பணிபுரிவதற்கான 'எச்1 பி' விசாக்கள் வழங்குவதை அக்டோபர் 1 முதல் ஓராண்டுக்கு நிறுத்தி வைப்பது பற்றி டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருகிறது. அது மட்டுமல்லாமல்' எல் 1, ஜே 1 'விசாக்களையும் நிறுத்தி வைக்கப் பரிசீலித்து வருகிறது.


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
13-ஜூன்-202001:07:06 IST Report Abuse
தல புராணம் ரொம்ப நல்லது. மோடியின் அயராத உழைப்பால் இந்தியாவிலே இவர்கள் அனைவருக்கும் சீக்கிரம் வேலை கிடைக்கும். டீ கிளாஸ் கழுவுறதில் ஆரம்பிச்சு பிரதமர் ஆவது எப்படின்னு ஒரு திட்ட வரைமுறையைவே வெச்சிருக்காரு.
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
12-ஜூன்-202023:34:32 IST Report Abuse
தமிழ்வேல் போன் போட்டா சரியாயிடும்.
Rate this:
Cancel
12-ஜூன்-202022:13:55 IST Report Abuse
நக்கல் அமெரிக்கா செல்லும் கம்ப்யூட்டர் நிபுணர்களின் பொற்காலம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது.... திரும்பி வருபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X