சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிணற்றில் விழுந்த வளர்ப்பு பூனைக்காக தன் உயிரை பணயம் வைத்த முதியவர்

Updated : ஜூன் 12, 2020 | Added : ஜூன் 12, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement

சென்னை: தான் ஆசையாய் வளர்த்த பூனை கிணற்றில் விழுந்து தத்தளித்த போது தன் உயிரை பணயம் வைத்து முதியவர் காப்பாற்றி உள்ளார்.

சென்னை அமைந்தகரை அய்யாவு காலனியில் வசித்து வருபவர் பி.என்.டயர்ஸ் (80) இவர் லயோலா கல்லூரியில் 40 ஆண்டு காலம் ஆங்கில பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.latest tamil newsஇவருக்கு வளர்ப்பு பிராணிகள் மீது கொள்ளை பிரியம். வளர்ப்பு பிராணிகள் மட்டுமில்லாமல் தன் தெருவில் உள்ள மற்ற நாய்கள், பூனைகளுக்கும் உணவளிக்கும் உயர்ந்த அன்புள்ளம் கொண்டவர். தன் வீட்டின் முதல் தளத்தில் மகனுடன் வசித்து வரும் நிலையில், தான் உணவளிக்கும் மற்ற நாய்கள் பூனைகள் தங்குவதற்கு தன் வீட்டின் தரை தளத்தில் இடமளித்துள்ள அதிசய மனிதர்.

இந்நிலையில் அவர் வளர்த்து வந்த பூனை ஒன்று நிலைதடுமாறி வீட்டின் பின்புறம் உள்ள 30 அடி ஆழ கிணற்றில் விழுந்தது. இதனைக் கண்ட டயர்ஸ் யாரும் உதவிக்கு இல்லாத நிலையில் தானே பூனையை காப்பாற்ற முயன்றுள்ளார். அருகிலிருந்த சிறிய ஏணியை எடுத்து கொண்டு கயிறு மூலம் கிணற்றுக்குள் இறங்கி பூனையை காப்பாற்றி விட்டார்.

ஆனால், டயர்ஸ் கிணற்றில் இருந்து வெளியே வர முயற்சித்த போது நிலைதடுமாறி கிணற்றுக்குள் விழுந்து விட்டார். அப்போது அவருடைய அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் காப்பாற்ற முயற்சி செய்தனர். யாராலும் அவரை காப்பாற்ற முடியவில்லை. உடனே தீயணைப்பு துறையினருக்கு போன் செய்து தகவல் தெரிவித்தனர்.


latest tamil newsசம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் 5 பேர் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு லேசான காயங்களுடன் டயர்ஸை மீ்ட்டனர். தன் உயிரை காப்பாற்றிய தீயணைப்பு வீரர்களுக்கு டயர்ஸ் தன் நன்றியினை தெரிவித்தார். வாயில்லா ஜீவன் உயிருக்கு போராடிய நிலையில், தன் முதுமை பற்றி கூட கவலைப்படாமல் உயிரை பணையம் வைத்து தானே கிணற்றுக்குள் இறங்கி பூனையை காப்பாற்றிய அவரது துணிச்சனை தீயணைப்பு வீரர்கள் பாராட்டினர்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
00000 - 00000,இந்தியா
13-ஜூன்-202008:29:21 IST Report Abuse
00000 தன்னால் இயன்றமட்டும் தான் வளர்த்த உயிரைக் காத்து கடமையாற்றியுள்ள அதேநேரம் இவ்வளவு பிராணிகள் வளர்ப்பவர் முன்யோசனையாக கிணற்றுக்கு மூடி (சாதாரண மூங்கில் தட்டிபோதும்) இட்டிருந்தால் தன்னுயிரை பணயம் வைக்க வேண்டியிராது.இனியாவது அவ்வாறு ஆபத்தான பகுதிகளை தகுந்த தடைகொண்டு பிராணிகள் மற்றும் சிறுகுழந்தை அணுகாமல் செய்ய யாவருமே தங்களைச்சுற்றி பார்த்து நிளைவேற்ற பெரியவர் டயர்ஸ் அனுபவபாடத்தை கற்றுக்கொடுத்திக்கிறார் ஓய்வு பெற்று 20ஆண்டுகள் கழிந்தும்
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
13-ஜூன்-202001:46:58 IST Report Abuse
தமிழ்வேல் தயிரியமும் தன் நம்பிக்கையும் அவருக்கு உதவியாக இருந்தன.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
12-ஜூன்-202023:35:01 IST Report Abuse
தல புராணம் Love to all beings is divine of course. But don't think that will translate into love for your neighbor or even your siblings. பூனை நேயம், மனித அன்பாக வெளிப்படும் என்று சொல்லமுடியாது.. "இந்த கிழவனுக்கு வேலையில்லை" என்று யாரோ சொன்னது காதில் விழுந்ததாக பக்கத்துவீட்டுக்கார அல்போன்ஸ் சொன்னார். அன்பின் வெளிப்பாடு அதீத சிக்கலான ஒரு எண்ணக்கோர்வை.. பூனையை காப்பாற்றிய சந்தோஷத்தில் ஒரு எக்ஸ்டரா சிக்கன் பீஸை அந்த பூனைக்கு கொடுத்து மகிழ்ந்தாராம். Sorry sir, உங்களை வெச்சி கதை பின்னியதற்கு .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X