சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

புரோக்கர் கட்டுப்பாட்டில் போலீஸ் ஸ்டேஷன்!

Added : ஜூன் 12, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
புரோக்கர் கட்டுப்பாட்டில் போலீஸ் ஸ்டேஷன்!''பத்து லட்சம் ரூபாய் பாழாப் போயிட்டுல்லா...'' என்றபடியே, அரட்டையை ஆரம்பித்தார், பெரியசாமி அண்ணாச்சி.''எங்க ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.''சென்னை அடுத்த வண்டலுார் உயிரியல் பூங்காவுக்கு, 800க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை, ஆந்திர மாநிலம், ராஜமுந்திரியில வாங்கிட்டு வந்தாவ... இவற்றை, பூங்காவுல பல பகுதிகள்ல நட்டாவ
  புரோக்கர் கட்டுப்பாட்டில் போலீஸ் ஸ்டேஷன்!

புரோக்கர் கட்டுப்பாட்டில் போலீஸ் ஸ்டேஷன்!

''பத்து லட்சம் ரூபாய் பாழாப் போயிட்டுல்லா...'' என்றபடியே, அரட்டையை ஆரம்பித்தார்,
பெரியசாமி அண்ணாச்சி.
''எங்க ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''சென்னை அடுத்த வண்டலுார் உயிரியல் பூங்காவுக்கு, 800க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை, ஆந்திர மாநிலம், ராஜமுந்திரியில வாங்கிட்டு வந்தாவ... இவற்றை, பூங்காவுல பல பகுதிகள்ல நட்டாவ வே...
''பூங்காவுல இருக்கிற ஓட்டேரி ஏரிக்குள்ள மட்டும், 700 மரக்கன்றுகளை நட்டதா, அதிகாரிகள் சொல்லுதாவ... ஒரு மரக்கன்றின் விலை, 500 ரூபாய்... அதை நடவு செய்ய ஆன செலவு, 1,000 ரூபாய்னு கணக்கு காட்டியிருக்காவ வே...
''இப்படி, 700 மரக்கன்றுகளை நட, 10.50 லட்சம் ரூபாய் செலவாகியிருக்கு... 2019ம் வருஷம் நட்ட இந்த மரக்கன்றுகள், மழையால ஏரி நிரம்பி, தண்ணியில மூழ்கி அழுகி போயிட்டு வே...
''இதே மரக்கன்றுகளை, பக்கத்துல இருக்கிற வன உயிரின ஆராய்ச்சி மையத்துல, 40ல இருந்து, 100 ரூபாய்க்குள்ள வாங்கியிருக்கலாம்...
''கமிஷனுக்கு ஆசைப்பட்டு, ராஜமுந்திரியில வாங்கி, அதுலயும் கூடுதல் தொகையை கணக்
கெழுதி, 10 லட்சத்தை பதம் பார்த்துட்டாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
உடனே, ''தாறுமாறா லஞ்சம் வாங்கி குவிக்கறார் ஓய்...'' என, புதிய விஷயத்திற்கு வந்தார் குப்பண்ணா.''யாருங்க அது...'' எனக் கேட்டார்,
அந்தோணிசாமி.
''கடலுார் மாவட்டம், சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரி ஒருத்தர், கடலுார், விருத்தாசலம், நெய்வேலி அலுவலகங்களை, கூடுதல் பொறுப்பா கவனிச்சுண்டு இருக்கார்...
''மற்ற அலுவலகங்களுக்கு அப்பப்ப போறவர், பைல்களை மட்டும், சிதம்பரம் அலுவலகத்துக்கு எடுத்துண்டு வரச் சொல்லிடறார் ஓய்...
''மத்தவா, வழக்கமா வாங்கற லஞ்சத்தை விட, அதிகமா கேட்கறதால, தனியார் பஸ் உரிமையாளர்கள் அதிர்ச்சியில இருக்கா... பஸ்சுக்கு வரி கட்டி, 'கிளியரன்ஸ்' வாங்கணும்னா கூட, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்கறார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''இவங்களை மாதிரியானவங்களை, அந்த முக்கண்ணன் சிவபெருமான் தான் கேட்கணும்...'' என்ற அண்ணாச்சி கருத்தை கேட்டு சிரித்தபடியே, ''ஒட்டுமொத்த போலீஸ் ஸ்டேஷனும், புரோக்கர் பிடியில இருக்குது பா...'' என, கடைசி விஷயத்தை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
''விளக்கமா சொல்லும்...'' என்றார், அண்ணாச்சி.
''பெரம்பலுார் மாவட்டம், அரும்பாவூர் போலீஸ் ஸ்டேஷன்ல பணம் இல்லாம, ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியாது... புகார் குடுத்தவங்க, பாதிக்கப்பட்டவங்கன்னு, ரெண்டு தரப்பிடமும் பேரம் பேசி, போலீசாருக்கு பணம் வாங்கி குடுக்கவே, இங்க ஒரு புரோக்கர் இருக்காரு பா...
''போலீஸ் அதிகாரிகள் ரோந்து போறப்ப, அவங்க வாகனங்கள்லயே, காக்கி பேன்ட், வெள்ளை சட்டை போட்டு, கூடவே போறாரு... ''போலீசாருக்கு டீ, காபி, டிபன், சாப்பாடு எல்லாம் இவர் தான்
ஏற்பாடு பண்றாரு... காலையில, 9:00 மணிக்கு ஸ்டேஷனுக்கு வர்றவர், ராத்திரி தான் வீட்டுக்கு போறாரு பா...'' என, முடித்தார் அன்வர்பாய்.
கடைக்குள் நுழைந்தவரைப் பார்த்த குப்பண்ணா, ''ரவி, சானிடைசர் போட்டு கையை அலம்பும்...'' என்றபடியே எழ, மற்றவர்களும் நடையைக் கட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
yezhai thamizhan - Rio,பிரேசில்
13-அக்-202123:18:19 IST Report Abuse
yezhai thamizhan இந்த அதிகாரி இப்ப டிரான்ஸ்பர் ஆகிட்டார்.
Rate this:
Cancel
Raj - Chennai ,இந்தியா
14-ஜூன்-202001:11:16 IST Report Abuse
Raj வண்டலூர் பூங்காவில் வடிவேல் வெட்டிய கிணரை காணோம். 😍
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
13-ஜூன்-202008:15:25 IST Report Abuse
VENKATASUBRAMANIAN Becayse of politician's intervention most if the officials are corrupted. It is like cancer , it will spread to all. Who will bell the cat?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X