நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இனிப்பு வகைகள் ; கோல்கட்டாவில் அறிமுகம்

Updated : ஜூன் 12, 2020 | Added : ஜூன் 12, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

கோல்கட்டா : கோல்கட்டாவில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் மூலிகை பொருட்களுடன் கலந்த இனிப்பு வகைகள் தயார் செய்யப்படுவதாக ஸ்வீட் ஸ்டால் உரிமையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.latest tamil newsகொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டு பலியாகி வருகின்றனர். இந்நிலையில் நோய் தடுப்புக்கு உரிய மருந்துகள் ஏதும் இல்லாததால், நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிரிக்கும் மருந்து மாத்திரைகள், மற்றும் பிற வைரசை குணப்படுத்தும் மருந்துகளின் கூட்டு மருந்துகள் மூலம் குணப்படுத்துகின்றனர். நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டவர்களிடம் பெரிதளவில் பாதிப்பு பரவியதாக அறியப்படவில்லை. எனவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாத்திரைகள், மருந்துகள், கபசுரக்குடிநீர் மற்றும் நிலவேம்பு கஷாயம் போன்ற பல்வேறு மூலிகை மருந்துகளும் பரிந்துரைக்கப்படுகிறது.


latest tamil newsஇந்நிலையில், மேற்கு வங்கத்தில், கோல்கட்டாவை சேர்ந்த ஸ்வீட் ஸ்டால் நடத்தும் உரிமையாளர் ஒருவர், தனது வாடிக்கையாளர்களின் நலனை கருத்திற்கொண்டு, உயிர்காக்கும் மூலிகையால் தயாரிக்கப்பட்ட பொருட்களுடன் கூடிய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இனிப்புகளை தயாரித்து கொடுக்கிறார்.


latest tamil newsஇது தொடர்பாக அவர் கூறுகையில், கொரோனாவை எதிர்த்து போராடுவதற்கு நோய் எதிர்ப்பு சக்தி மட்டுமே ஒரே வழியாக கருதப்படுகிறது. மருந்து எதுவும் இதுவரை இல்லாத நிலையில், நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் வகையில், 15 வெவ்வேறு மசாலாப் பொருட்களை கலந்து இந்த இனிப்பு வகைகளை தயாரித்துள்ளோம். ஒவ்வொரு இனிப்பும் 25 ரூபாய் என விற்பனை செய்கிறோம். இவ்வாறு கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
13-ஜூன்-202005:06:27 IST Report Abuse
J.V. Iyer கொரோனாவினால் சாவதைவிட, சர்க்கரை வியாதியால் சாவது மேல் என்று நினைப்பவர்கள் இதை நிறைய சாப்பிடலாம். இப்போது சிகரெட்டில், மதுவில் கொரோனா எதிர்ப்பு மருந்தை சேர்க்கலாம். ஹா..ஹா..
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
12-ஜூன்-202023:30:08 IST Report Abuse
தமிழ்வேல் அதுக்குன்னு டயாபடீஸை குடுத்துடாதீங்க.
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
12-ஜூன்-202021:48:53 IST Report Abuse
sundarsvpr நோய் எதிர்ப்பு என்ற சாக்கில் இனிப்பு சாப்பிடுவது சரியான மாற்று ஆகாது. இது வியாபார யுக்தி. இந்த சமயத்தில் உணவு முறையில் மாற்றம் அவசியம். காபி தேநீர் சாப்பிடுவதை நிறுத்தலாம். பதில் பானகம் அருந்தலாம். வேக வைக்காமல் பச்சடிகள் உண்ணலாம்.சாதத்தை குறைத்து காய்கறி பழங்கள் (ஜூஸ் கூடாது) அதிகம் எடுத்துக்கொள்ளலாம். பிஸ்கட் ரொட்டி தவிர்க்கலாம். தயிரை தவிர்த்து மோர் கொள்ளலாம் முக்கியமாய் என்னை உப்பு அதிகம் உள்ள ஊறுகாய் தவிர்த்தல் நல்லது.
Rate this:
Natarajan Ramasamy - Chennai,இந்தியா
13-ஜூன்-202003:32:58 IST Report Abuse
Natarajan RamasamyWe have people who need sugar to take ts Hotels should serve kabasura kudineer....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X