பொது செய்தி

தமிழ்நாடு

'ஆன்லைன்' வகுப்புக்கு கட்டணமா?: தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை!

Updated : ஜூன் 14, 2020 | Added : ஜூன் 12, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
'ஆன்லைன்' வகுப்புக்கு கட்டணமா?: தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை!

சென்னை : 'ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதற்கு, கல்வி கட்டணம் வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரித்துள்ளது.கொரோனா வைரஸ் பிரச்னையால், பள்ளி, கல்லுாரிகள் இன்னும் திறக்கப்படவில்லை. பள்ளிகள் திறப்பு குறித்து, ஜூலையில் முடிவு செய்யலாம் என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஆலோசனை வழங்கியுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் பல தனியார் பள்ளிகள், ஆன்லைன் வழியில் வகுப்புகளை நடத்த துவங்கியுள்ளன. ஜூன், 1 முதல் இந்த வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அத்துடன், ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதற்கு, தனியாக கல்வி கட்டணம் கேட்டு, பள்ளிகள், எஸ்.எம்.எஸ்., அனுப்புவதாக, பெற்றோர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுஉள்ளது.அதனால், பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்து, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:கொரோனா வைரஸ் பிரச்னையால், ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்த கால கட்டத்தில், முந்தைய கல்வி ஆண்டுக்கான நிலுவை கட்டணம் மற்றும் புதிய கல்வி ஆண்டுக்கான கட்டணம் கேட்டு, பெற்றோரை நிர்பந்தம் செய்யக்கூடாது என, திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனாலும், சில மெட்ரிக் பள்ளிகளில், ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடத்த, கல்வி கட்டணம் செலுத்துமாறு, பெற் றோரை நிர்பந்தம் செய்வதாக புகார் பெறப்பட்டுஉள்ளது. அரசாணையை மீறி, கல்வி கட்டணம் கேட்டு வற்புறுத்தும் பள்ளிகள் மீது, விதிகளின் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Varun Ramesh - Chennai,இந்தியா
13-ஜூன்-202013:04:52 IST Report Abuse
Varun Ramesh ஆசிரியர், உபகரணம், நேரம், அனைத்துமே தேவைதான். அதற்காகத்தான் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டால், என்ன கட்டணம் செலுத்தப்பட்ட வேண்டுமோ அதை செலுத்துகிறோமே
Rate this:
Cancel
SIVA G india - chennai,இந்தியா
13-ஜூன்-202012:12:42 IST Report Abuse
SIVA G  india பல பள்ளி நிர்வாகங்கள் பெற்றோர்களிடம், வங்கிகளில் கடன் வாங்கி கட்டணத்தை கட்டி விட்டு மாதா மாதம் EMI கட்டிகொள்ள சொல்கிறார்கள். மக்கள் மாதா மாதம் சம்பளம் வாங்குவதால் இனி கொரானா காலம் முடியும் வரை மாத மாதம் கட்டணம் வாங்கி கொள்ளலாமே. எல்லா பெற்றோரும் முடிவு செய்தால் எந்த கல்வி நிறுவனத்தில் படித்தாலும் எல்லோருக்கும் கட்டாய இலவச கல்வி .மற்றும் இனி எல்லோருக்கும் எல்லா மருத்துவ செலவுகளும் இலவசமாக்க வேண்டும். அதிக பட்சம் இரண்டு குழந்தைகளின் கல்வி செலவுகளுக்கா இலவச அரிசி, இலவச மின்சாரம், மானியங்கள் எல்லாவற்றையும் ரத்து செய்ய வேண்டும்
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
13-ஜூன்-202010:22:03 IST Report Abuse
blocked user ஆண்லைன் என்றால் ஆசிரியர் தேவையில்லையா அல்லது உபகரணம் தேவையில்லையா, இல்லை நேரம்தான் தேவையில்லையா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X