கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மத பிரசாரம் செய்த வழக்கில் வெளிநாட்டினருக்கு ஜாமின்

Added : ஜூன் 12, 2020
Share
Advertisement



மதுரை:ஊரடங்கில், மதப் பிரசாரத்தில் ஈடுபட்டதாக பதிவான வழக்கில், வங்கதேசம், இந்தோனேஷியாவைச் சேர்ந்த, 31 பேருக்கு நிபந்தனையுடன், உயர் நீதிமன்ற மதுரை கிளை ஜாமின் அனுமதித்தது.

வங்கதேசத்தைச் சேர்ந்த, 11 பேர், இந்தோனேஷியாவைச் சேர்ந்த, 20 பேர், திண்டுக்கல், ராமநாதபுரம், தஞ்சை மாவட்டங்களில், ஊரடங்கை மீறி, மதப் பிரசாரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் ஜாமின் கோரி, உயர் நீதிமன்ற கிளையில் மனு செய்தனர். தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுப்படி, மனுதாரர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு:சுற்றுலா விசா விதிகளை மீறி, இந்தியாவில் மத பிரசாரத்தில் ஈடுபட்டதற்கு வருத்தம் தெரிவிக்கிறோம். எங்கள் நாடுகளுக்கு செல்ல அனுமதிக்கும் பட்சத்தில், 10 ஆண்டுகளுக்கு இந்தியா வரமாட்டோம் என உறுதியளிக்கிறோம்.

எங்கள் நாடுகளுக்கு செல்வதற்கான செலவை, நாங்களே ஏற்க, தூதரகங்கள் மூலம் நடவடிக்கை எடுப்போம். ஜாமின் அனுமதித்த பின், எங்கள் நாடுகளுக்கு செல்லும் வரை சென்னை, வண்ணாரப்பேட்டை அரபிக் கல்லூரியில் தங்கியிருப்போம்.சென்னையை விட்டு, சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டின் அனுமதியின்றி வெளியில் செல்ல மாட்டோம்.இவ்வாறு, உத்தரவாதம் அளிக்கப்பட்டது.இதை பதிவு செய்த நீதிபதி, ஜாமின் அனுமதித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X