'கொரோனா மன அழுத்தத்திலிருந்து விடுபட யோகா உதவும்'

Updated : ஜூன் 13, 2020 | Added : ஜூன் 13, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
நியூயார்க் : உலகம் முழுவதும், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வரும், 21ம் தேதி, ஆறாவது சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட உள்ளது.இந்நிலையில் யோகா தினத்தில் மேற்கொள்ள வேண்டிய பயிற்சிகள் பற்றிய தொகுப்பை, ஐ.நா.,வுக்கான இந்திய துாதரகம் வழங்கியுள்ளது. 'உடல் நலத்துக்கான யோகா; வீட்டிலேயே யோகா' என்ற தலைப்பில், இந்த பயிற்சி திட்டம் வழங்கப்பட்டுள்ளது.இது பற்றி,
yoga, yoga day, India, UN, International Day of Yoga, coronavirus, covid 19, coronavirus outbreak,
யோகா, இந்தியா

நியூயார்க் : உலகம் முழுவதும், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வரும், 21ம் தேதி, ஆறாவது சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் யோகா தினத்தில் மேற்கொள்ள வேண்டிய பயிற்சிகள் பற்றிய தொகுப்பை, ஐ.நா.,வுக்கான இந்திய துாதரகம் வழங்கியுள்ளது. 'உடல் நலத்துக்கான யோகா; வீட்டிலேயே யோகா' என்ற தலைப்பில், இந்த பயிற்சி திட்டம் வழங்கப்பட்டுள்ளது.

இது பற்றி, ஐ.நா.,வுக்கான இந்திய துாதரக அதிகாரி ஒருவர் கூறியதாவது: இதில், உடல் நலத்தை மேம்படுத்தும், அனைத்து வயதினருக்கும் ஏற்ற யோகா பயிற்சிகள் இடம் பெற்றுள்ளன. இதை அனைவரும், வீட்டிலேயே செய்ய முடியும். எளிமையாக யோகாசனங்கள், மூச்சு பயிற்சி, தியானம் ஆகியவை இதில் இடம் பெற்றுள்ளன.


latest tamil news



வைரஸ் பரவல் காரணமாக, உலகளவில், மக்கள் பெரும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, யோகா பயிற்சி பயனுள்ளதாக இருக்கும். இதில், யோகாவின் பயன்கள் பற்றி, சத்குரு, ஜக்கி வாசுதேவ் உட்பட யோகா குருக்கள் பலர் பேசும், 'வீடியோ' பதிவுகளும் இடம் பெற்றுள்ளன. இந்த யோகா பயிற்சி, ஐ.நா.,வின் இணையதளத்தில், 19ம் தேதி ஒளிபரப்பாகும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Abbavi Tamilan - Riyadh,சவுதி அரேபியா
13-ஜூன்-202014:38:52 IST Report Abuse
Abbavi Tamilan அதிகமா அழுத்தம் தர்றது இவங்க செய்கின்ற ஊரடங்கு விதிமுறைகள்
Rate this:
Cancel
G.S.KRISHNAMURTHI - chennai,இந்தியா
13-ஜூன்-202013:47:55 IST Report Abuse
G.S.KRISHNAMURTHI கண்டிப்பா யோகாவால் பலன் உண்டு வியாதி வராமல் தடுக்க முடியும் ஏழை பணக்காரன் கிடையாது உலகமே யோகா செய்ய போறாங்க கடந்த ஆண்டு யோகா தினத்தன்று நான் ஹூஸ்டன் அமெரிக்காவில் இருந்தேன் ஏக கூட்டம் மோடிஜி மோடிஜிதான்
Rate this:
Cancel
Raman - kottambatti,இந்தியா
13-ஜூன்-202008:15:28 IST Report Abuse
Raman யோகா செய்தால் சாப்பிட வேண்டியது இல்லை என்று கதை சொல்ல வேண்டியதுதானே ? அப்புறம் ஏழை மக்களை யோகா செய்ய சொல்லலாமே சாப்பிட வேண்டியது இல்லை..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X