சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

வீட்டுக்குள் தனிமைப்படுத்தப்பட்ட விஜயகாந்த்!

Added : ஜூன் 13, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
வீட்டுக்குள் தனிமைப்படுத்தப்பட்ட விஜயகாந்த்!''ரேட் பிக்ஸ் பண்ணிட்டாங்க...'' என, பெஞ்ச் அரட்டையை ஆரம்பித்தார், அந்தோணிசாமி.டீக்கு ஆர்டர் தந்தபடியே, ''எந்த வேலைக்கு ஓய்...'' என, 'பட்'டென கேட்டார், குப்பண்ணா.''புது பணி நியமனங்களுக்கு தடை இருந்தாலும், கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள்ல, காலியா இருக்கிற அலுவலக உதவியாளர், டிரைவர் பதவிகளுக்கு ஆட்களை தேர்வு
 வீட்டுக்குள் தனிமைப்படுத்தப்பட்ட விஜயகாந்த்!

வீட்டுக்குள் தனிமைப்படுத்தப்பட்ட விஜயகாந்த்!
''ரேட் பிக்ஸ் பண்ணிட்டாங்க...'' என, பெஞ்ச் அரட்டையை ஆரம்பித்தார்,
அந்தோணிசாமி.
டீக்கு ஆர்டர் தந்தபடியே, ''எந்த வேலைக்கு ஓய்...'' என, 'பட்'டென கேட்டார், குப்பண்ணா.
''புது பணி நியமனங்களுக்கு தடை இருந்தாலும், கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள்ல, காலியா இருக்கிற அலுவலக உதவியாளர், டிரைவர் பதவிகளுக்கு ஆட்களை தேர்வு செய்யப் போறாங்க...
''இதுக்கு விண்ணப்பங்கள் வாங்கி, முறையா எழுத்து தேர்வு நடத்தி, பணி நியமனம் போட்டா, வேலையில்லாத இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமுங்க...
''ஆனா, கூட்டுறவு விதிகளை தங்களுக்கு சாதகமா பயன்படுத்தி, நேர்காணல் மட்டும் நடத்தி, தங்களுக்கு வேண்டியவங்களை, வேலைக்கு தேர்வு செய்ய, ஆளுங்கட்சி புள்ளிகள்
தயாராகிட்டாங்க...''அதுவும் இல்லாம, கொரோனாவால, நிர்வாக செலவுகளை குறைக்க, பொது இடமாறுதல்களை தவிர்க்கும்படி, அரசாங்கம் அறிவுறுத்தி இருக்கு... ஆனா, 'வசூல்' பாதிக்கும்கிறதால, கூட்டுறவு துறையில, பொது இடமாறுதலுக்கும் தயாராகிட்டு இருக்காங்க...'' என்றார்,
அந்தோணிசாமி.''அடிக்கல் நாட்டு விழாவால, அக்கப் போராயிடுத்து ஓய்...'' என, அடுத்த தகவலை ஆரம்பித்தார்,
குப்பண்ணா.''எந்த ஊருல பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாலுகாவுல, உள்ளிக்கோட்டை சார் - பதிவாளர் அலுவலகம் இருக்கு... இதுக்கு சொந்த கட்டடம் கட்ட, அரசு இடம் ஒதுக்கிடுத்து ஓய்...
''ஆனா, திட்ட மதிப்பீடு எல்லாம் இன்னும் முடிவாகலை... அதுக்குள்ள, மாவட்டத்தைச் சேர்ந்த உணவுத் துறை அமைச்சர் காமராஜ், சார் - பதிவாளர் மற்றும் உள்ளூர் அரசியல் பிரமுகர்களை வச்சு, அடிக்கல் நாட்டு விழாவை நடத்திட்டார் ஓய்...
''இதுல என்ன வேடிக்கைன்னா, பதிவுத்துறையின் மாவட்ட, மண்டல அதிகாரிகளுக்குக் கூட, இது பத்தி தகவல் தரலை... 'இதெல்லாம் அமைச்சருக்கு தெரியாதா'ன்னு அவா புலம்பிண்டு இருக்கா ஓய்...''
என்றார், குப்பண்ணா.''வீட்டுக்குள்ளயே தனிமைப்படுத்தி வச்சிட்டாங்க பா...'' என, கடைசி தகவலுக்கு மாறினார்,
அன்வர்பாய்.
''யாருக்காவது, கொரோனா பாதிப்பு வந்துட்டா வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
''அதெல்லாம் இல்லை... தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கு, 68 வயசாகுது... உடம்பு சரியில்லாம, ஏற்கனவே ஓய்வுல தான் இருக்காரு பா...
''இப்ப, சென்னையில கொரோனா தீவிரமா பரவிட்டு இருக்கிறதால, விஜயகாந்தை யாரும் நெருங்க விடாம, தனிமைப்படுத்திட்டாங்க... கட்சி நிர்வாகிகள், நண்பர்கள்னு யாரும் வீட்டுக்கு வரக் கூடாதுன்னு தடை போட்டிருக்காங்க பா...
''தனியறையில இருக்கிற விஜயகாந்துக்கு, உணவு, மருந்துகளை அவரது மனைவி பிரேமலதா தான் எடுத்துட்டு போறாங்க... வேலைக்காரங்க யாரும், அந்த அறைக்கு போக வேண்டாம்னும் சொல்லிட்டாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
அரட்டை முடிய, நண்பர்கள் வட்டம் கலைந்தது.
எதுக்கு இந்த போலி விளம்பரம்?
''எம்.எல்.ஏ.,க்களுக்கு, நம்ம மேல், எவ்வளவு அக்கறை ஓய்...'' என்றபடியே, டீக்கடை பெஞ்சில் அமர்ந்தார்,
குப்பண்ணா.''என்ன காமெடி பண்ணுறீங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''நடப்பு நிதியாண்டுல, எம்.எல்.ஏ.,க்களின் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு, 3 கோடி ரூபாய், அரசு ஒதுக்கீடு செய்யணும்... அதுல, 1 கோடி ரூபாயை, கொரோனா நிதி ஒதுக்கீடுக்குன்னு அறிவிச்சா ஓய்...
''மீதமுள்ள, 2 கோடி ரூபாய்க்கான வளர்ச்சி பணி திட்டங்களுக்கு, நிதி ஒதுக்கீடு செய்ய, இன்னும் அரசாணை பிறப்பிக்காம வைச்சிருக்கா...
''அதனால,
எம்.எல்.ஏ.,க்கள், தங்கள் தொகுதியில, வளர்ச்சி பணி திட்டங்களை நிறைவேத்த முடியலைன்னு புலம்பறாளாம் ஓய்...'' என்றார் குப்பண்ணா.
அன்வர்பாய், ''ஆட்டை போட இன்னும் வாய்ப்பு கிடைக்கலைன்னு சொல்லுங்க...'' என்று சிரித்த அந்தோணிசாமி, ''டிப்ளமாவும், ஐ.ஏ.எஸ்., படிப்பும் ஒண்ணாயிருச்சு பாருங்க...'' என, அடுத்த தகவலுக்கு, அச்சாரம் போட்டார்.
''அட, இதென்ன புதுக் கதையா இருக்கு ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''போக்குவரத்து துறையில, மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமா படிச்சுட்டு, மோட்டார் வாகன ஆய்வாளரா வேலைக்குச் சேருவாங்க...
''அவங்களுக்கு, ஆர்.டி.ஓ., உதவியாளர், ஆர்.டி.ஓ., துணை போக்குவரத்து கமிஷனர், இணை போக்குவரத்து கமிஷனர்ங்கற பதவி உயர்வு கிடைக்குமுங்க...
''போக்குவரத்து கமிஷனரா, ஐ.ஏ.எஸ்., படிச்சவரு தான் இருப்பாரு... துறை அமைச்சருக்கும், கமிஷனருக்கும் முட்டிக்கிச்சுன்னா, கமிஷனரை, 'டம்மி' பண்ண, இணை போக்குவரத்து கமிஷனர் ஒருவருக்கு, உதவி போக்குவரத்து கமிஷனருங்கிற பதவி கொடுத்துருவாங்க...
''இப்போ, 'எனக்கு உதவ, ஆள் தேவை இல்லை'ன்னு, கமிஷனர் சொல்லிட்டாருங்க... ஆனால், டிப்ளமா படிச்ச ஒருவரை, உதவி கமிஷனரா நியமிச்சிக்காங்க... துறையில நடக்குற விஷயத்துல எல்லாம், ரெண்டு பேருக்கும் சரிசமமா பங்கு உண்டாம்... அப்போ, ஐ.ஏ.எஸ்.,சும், டிப்ளமாவும் ஒண்ணு தானேங்க...'' என விளக்கினார்,
அந்தோணிசாமி.''எதுக்கு, இந்த போலி விளம்பரம் பா...'' என, கடைசி தகவலுக்கு வந்தார்,
அன்வர்பாய்
''என்ன விஷயமுன்னு சொல்லும் வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.''வேலுார் மாவட்டம், அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்துல, அத்தியாவசிய பணிகளை நிறைவேற்றாததைக் கண்டிச்சு, தி.மு.க., சார்புல, உள்ளிருப்பு போராட்டம் நடத்தினாங்க பா...
''இதுல பங்கேற்ற, எம்.எல்.ஏ.,க்கள் உட்பட, 135 பேரை, போலீசார் கைது செஞ்சாங்க... எம்.பி., கதிர் ஆனந்த் கைதாகவில்லை... அவரு போலீசாரிடம்,
எஸ்.பி.,யிடம் அனுமதி வாங்கிட்டேன்னு சொல்லி, 'எஸ்கேப்' ஆகிட்டாரு பா...
''ஆனா, அன்னைக்கு சாயங்காலம், கதிர் ஆனந்த், தன், 'பேஸ்புக்'குல, 'முக்கிய செய்தி... அணைக்கட்டு போராட்டத்துல, தி.மு.க., - எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் கைது-'ன்னு, பதிவு போட்டாரு பா...
''இதைப் பார்த்த அக்கட்சியினர், 'எம்.பி.,யா இருக்குறவரு, இப்படி, போலியாக விளம்பரம் பண்ணிக்கலாமா'ன்னு, 'பீல்' பண்ணுறாங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்.
சிரித்தபடியே நண்பர்கள் கிளம்ப, திண்ணை அமைதியானது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
14-ஜூன்-202006:29:58 IST Report Abuse
D.Ambujavalli கொள்ளுக்கு வாய் திறக்கணும், கடிவாளத்துக்கு இழுத்து மூடனும் என்பது கூட தெரியாமல் இருப்பாரா, அரசியலில் ஐம்பதாண்டு வாழ்ந்தவரின் மகன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X