எக்ஸ்குளுசிவ் செய்தி

இந்தியா

'கொரோனா' கால அரசியலில் அடித்து ஆடும் அமித் ஷா - ராகுல்

Updated : ஜூன் 13, 2020 | Added : ஜூன் 13, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement
'கொரோனா' கால அரசியல், அடித்து ,ஆடும் அமித் ஷா - ராகுல்

கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில், அமைதி காத்து வந்த, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் காங்., - எம்.பி., ராகுல் ஆகியோர், கடந்த சில நாட்களாக, தங்கள் பேச்சுகளிலும், அரசியல் நகர்வுகளிலும், அதிரடி காட்ட துவங்கி இருப்பதாக, அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

மத்தியில், பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி, இரு முறை மாபெரும் வெற்றி பெற்றதற்கு, முக்கிய பங்காற்றிய தலைவர்களில் ஒருவராக, அமித் ஷா கருதப்படுகிறார்.கடந்த, 2014ல் ஆட்சி அமைந்தபோது, பா.ஜ.,வின், தேசிய தலைவராக பதவி வகித்தவர், அடுத்த வெற்றியில், மத்திய உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.இரண்டாம் முறை ஆட்சி அமைந்த ஓராண்டுக்குள், ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து, முத்தலாக் சட்டத்துக்கு முற்றுப்புள்ளி, குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றியது என, அடுத்தடுத்து அதிரடி காட்டினார்.



திட்டமிடுதல்



கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நேரத்தில், அமித் ஷா, பொதுவெளி யில் தென்படவில்லை என்ற கருத்து நிலவியது. அப்போது, ஊரடங்கு திட்டமிடுதலிலும், செயல்படுத்துவதிலும், மாற்றங்கள், திருத்தங்கள் செய்வதிலுமே, அவர் முழு கவனம் செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது.அந்த நேரத்தில், மக்களிடம் உரையாற்றுவது, மாநில முதல்வர்களுடன் கலந்தாலோசிக்கும் பணிகளை, பிரதமர் நரேந்திர மோடி கவனித்து வந்தார். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட இரண்டு மாதத்திற்கு பிறகே, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பொது வெளியில் தென்பட துவங்கினார். ஊரடங்கு தளர்வுகள் குறித்து, மாநில முதல்வர்களுடன், கடந்த மே, 28ல், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக கலந்துரையாடினார்.இந்த புள்ளியில் இருந்து தான், அமித் ஷாவின் அதிரடி அரசியல், மீண்டும் சூடு பிடிக்க துவங்கியதாக, அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.


குற்றச்சாட்டு



வரும் அக்டோபரில், பீஹாருக்கும்; அடுத்த ஆண்டு மே மாதம், மேற்கு வங்கத்துக்கும், சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளன. இவற்றை மனதில் கொண்டே, தன் அரசியல் சதுரங்கத்தில், அமித் ஷா காய்களை நகர்த்த துவங்கி இருப்பதாக, பா.ஜ., தலைவர்கள் உற்சாகமடைந்து உள்ளனர்.கொரோனா தடுப்பு நடவடிக்கையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தோல்வி அடைந்துவிட்டதாக குற்றச்சாட்டை முன்வைத்து, தன் அரசியல் ஆட்டத்தை, அமித் ஷா ஆட துவங்கினார்.அடுத்ததாக, பீஹார், ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில், ஜூன் 7, 8, 9 என, அடுத்தடுத்த நாட்களில், 'ஆன்லைன்' வாயிலாக பொதுக்கூட்டம் நடத்தினார்.அதில், 'கடந்த, 70 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்கள், கிழக்கு மாநிலங்களை புறக்கணித்த காரணத்தால் தான், இன்றைக்கு லட்சக்கணக்கான தொழிலாளர்கள், அங்கிருந்து புலம்பெயர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்' என்ற, அதிரடி குற்றச்சாட்டை முன் வைத்தார்.அமித் ஷாவின் இந்த அடுத்தடுத்த அதிரடிகள், அவரை மீண்டும் அரசியல் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளதாக, அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.


நடவடிக்கை



அதே நேரத்தில், கொரோனா காலகட்டத்தில், காங்., - எம்.பி., ராகுல், புதிய வேகம் காட்ட துவங்கி இருப்பதாக, டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரது அடுத்தடுத்த நடவடிக்கைகளே, இதை உறுதிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளன.நாட்டில் ஊரடங்கு அறிவிப்பதற்கு ஒரு மாதம் முன்னரே, அதாவது, கடந்த பிப்ரவரி, 12ல், 'கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில், இப்போதே கவனம் செலுத்த வேண்டியது அவசியம்' என, மத்திய அரசிடம், ராகுல் வலியுறுத்தினார்.

ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்னரும், வைரஸ் தடுப்பு நடவடிக்கையில், மத்திய அரசின் முடிவுகள் குறித்து, கேள்விகளை எழுப்பி வந்தார்.வெளிமாநில தொழிலாளர்கள், சாலைகளில் நடைபயணமாக புறப்பட்டது குறித்து, ஏப்., 16ல், தன் கண்டனத்தை பதிவு செய்தார். நாட்டின் பொருளாதார நிலை குறித்து, ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி ஆகியோருடன், உரையாடல்களை நடத்தினார்.இதன் மூலம், கொரோனா காலகட்டத்தில், எதிர்க்கட்சியின் முகமாக ராகுல் செயல்பட்டதாக, அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.'காங்., தலைவர் பதவியில், நீண்ட நாட்கள் நீடிக்க விரும்பவில்லை' என, மூத்த தலைவர்களிடம் சோனியா தெரிவித்ததாக கூறப்படுகிறது. அந்த இடத்துக்கு, ராகுலை கொண்டு வந்து அமரச் செய்யவே, மக்கள் மத்தியில் அவரது அரசியல் பிம்பத்தை உயரச் செய்யும் உத்தியில், காங்., மும்முரம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.- - நமது சிறப்பு நிருபர் -



Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
15-ஜூன்-202000:25:24 IST Report Abuse
தல புராணம் முன்னெச்சரிக்கை வேலைகளை எடுக்க வேண்டிய நேரத்தில் கடந்த பிப்ரவரி, 24-25 ல், லட்சம் பேரை டிரம்புடன் கூட்டிவைத்து கூத்தடித்தவர் தான் நம் பிரதமர். நோய்தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டிய அந்த நேரத்தில் மார்ச் 10ல் இருநூறு கோடி லஞ்சம் கொடுத்து ஜோதிராதித்யா சிந்தியாவை, மந்திரி பதவி ஆசை காட்டி வாங்கி மத்தியபிரதேச ஆட்சியை எப்படி கவிழ்க்கலாம் என்று சாணிக்கியம் பண்ணவர் தான் இந்த உள்துறை மந்தீரி .. ஆனால் பிப்ரவரி, 12 ல் பார்லிமெண்டில் 'கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில், இப்போதே கவனம் செலுத்த வேண்டியது அவசியம்' என, மத்திய அரசிடம் சொன்னவர் தான் ராகுல் காந்தி. அவரை இட்டாலி, பப்புன்னு கிண்டலடித்த மூர்க்கர்கள் தான் இந்த சங்கி கூட்டம்..
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
14-ஜூன்-202022:32:20 IST Report Abuse
Rajas தண்ணீர் தண்ணீர் படத்தில் ஒரு காட்சி வரும். ஊரில் பல வருடங்களாக கடுமையான குடிநீர் பஞ்சம். அரசியல்வாதிகள் அதிகாரிகளிடம் கேட்டும் பயன் இருக்காது. ஒரு நாள் அரசு ஊழியர்கள் திடீரெனெ ரோட்டில் தண்ணீர் பம்பு அமைக்க குழி தூண்டுவார்கள். எல்லோரும் என்னவென்று பார்வையாலே கேட்பார்கள். தேர்தல் அறிவிப்பு வரும்.
Rate this:
Cancel
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
14-ஜூன்-202022:08:38 IST Report Abuse
தங்கை ராஜா எதிரியை கட்டிப்போட்டு வைத்து விட்டு வீரத்தை காட்டும் பயந்தாங்கொள்ளி. நேருக்கு நேர் நின்று ஜெயிப்பவன் தான் ஆண்மகன். அது பரிவார் சரித்திரத்தில் இல்லாத ஒன்று
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X