விதிமீறிய கடைகளுக்கு அபராதம்

Added : ஜூன் 13, 2020 | |
Advertisement
நங்கநல்லுார் : நங்கநல்லுாரில், கொரோனா விதிமுறை கடைப்பிடிக்காத கடை உரிமையாளர்களுக்கு, அபராதம் விதிக்கப்பட்டது.ஆலந்துார் மண்டலத்தில், நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக, மக்கள் நெரிசல் அதிகமுள்ள பகுதிகளில், கடைகள் ஒரு வாரத்திற்கு அடைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில்,

நங்கநல்லுார் : நங்கநல்லுாரில், கொரோனா விதிமுறை கடைப்பிடிக்காத கடை உரிமையாளர்களுக்கு, அபராதம் விதிக்கப்பட்டது.

ஆலந்துார் மண்டலத்தில், நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக, மக்கள் நெரிசல் அதிகமுள்ள பகுதிகளில், கடைகள் ஒரு வாரத்திற்கு அடைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மண்டல உதவிக் கமிஷனர் முருகன் உத்தரவுபடி, நங்கநல்லுார், 100 அடி சாலை, எம்.ஜி.ஆர்., சாலைகளில் உள்ள கடைகளில், மாநகராட்சியினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.இதில், முக கவசம், சமூக இடைவெளி, கிருமி நாசனி உள்ளிட்ட கொரோனா விதிமுறை கடைப்பிடிக்காத கடை உரிமையாளர்களிடம் இருந்து, 7,500 ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டது.

 அதேபோல், பம்மல் நகராட்சியில், நாகல்கேணி, எம்.ஜி.ஆர்., சாலையில் உள்ள ஒரு கடையில் பணிபுரியும், நான்கு ஊழியர்களுக்கு, சில நாட்களுக்கு முன், வைரஸ் தொற்று உறுதியானது.அதேநேரத்தில், இந்த கடையில், முக கவசம் அணிதல், கிருமி நாசினி தெளித்தல், சமூக இடைவெளி பின்பற்றுதல் போன்ற எந்த ஒரு விதிமுறையும் பின்பற்றப்படவில்லை. இதையடுத்து, பம்மல் நகராட்சி கமிஷனர் மாரிச்செல்வி மற்றும் அதிகாரிகள், நேற்று காலை, அந்த கடைக்கு, 'சீல்' வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X