பகவத் கீதையில் அமைதியை காணலாம்: அமெரிக்க ஹிந்து எம்.பி., பேச்சு

Updated : ஜூன் 14, 2020 | Added : ஜூன் 14, 2020 | கருத்துகள் (38)
Share
Advertisement
bhagavath gita, peace, america, mp, speech, us lawmaker, washington, பகவத்கீதா, அமைதி, அமெரிக்கா, எம்.பி., பேச்சு

வாஷிங்டன்; 'இந்த குழப்பமான நேரத்தில், நம்மால், பகவத் கீதையில், உறுதி, வலிமை மற்றும் அமைதியை காண முடியும்' என, அமெரிக்க ஹிந்து எம்.பி., துளசி கப்பார்ட் கூறியுள்ளார்.

அமெரிக்காவில், கறுப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்டை கொலை செய்த போலீசாருக்கு கண்டனம் தெரிவித்து நடக்கும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. மறுபுறம், கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுத்து வருகிறது.இந்நிலையில், 7ம் தேதி, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், அமெரிக்காவின் முதல் ஹிந்து எம்.பி.,யான துளசி கப்பார்டு, ஹிந்து மாணவர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:இது ஒரு குழப்பமான நேரமாகும். நாளை எப்படி இருக்கும் என, யாராலும் கூற முடியாது. ஆனால், பகவத் கீதையில், கிருஷ்ணர் நமக்கு கற்பித்த பக்தி யோகா மற்றும் கர்ம யோகா நடைமுறை மூலம், உறுதி, வலிமை மற்றும் அமைதியை நம்மால் காண முடியும். இந்நேரத்தில், வாழ்க்கையில் நம் நோக்கம் என்ன என்பதை, உங்களிடமே கேட்டுக்கொள்ளுங்கள். அது ஒரு ஆழமான கேள்வி.


latest tamil news


கடவுளுக்கும், கடவுளின் குழந்தைகளுக்கும், சேவை செய்வதே உங்கள் நோக்கம் என்பதை நீங்கள் உணர்ந்துவிட்டால், நீங்கள் உண்மையிலேயே வெற்றிகரமான வாழ்க்கையை வாழ முடியும்.வெற்றி என்பது, ஆபரணங்கள், ஆடம்பர பொருட்கள் அல்லது சாதனைகளால் வரையறுக்கப்படுவதில்லை. சேவையை மையமாகக் கொண்டு அமையும், மகிழ்ச்சியான வாழ்க்கை தான் வெற்றியை தீர்மானிக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
14-ஜூன்-202016:52:20 IST Report Abuse
Rasheel விவேகானந்தர் கூறியது - இந்த நாடு அரேபியனிடம், துருக்கி, ஆப்கானி மற்றும் ஆங்கிலேய காட்டுமிராண்டிகளிடம் அரசாட்சி மூலமாக, அவர்கள் மதம் மூலமாக அடிமைப்பட்டது காரணம் - சமாதானம் பேசு சண்டை போடாதே என்று சிலர் போதித்ததனால் தான்
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
14-ஜூன்-202016:42:22 IST Report Abuse
Rasheel கிருஷ்ணன் அழிக்க சொன்னது, பேராசை பிடித்த ஒரு குண்டூசி நிலம் கூட தராத உறவுக்காரனை. பெண்ணின் மானம் காக்க தவறிய பெரியவர்கள் போன்ற போர்வையில் உள்ள அழிவு கூட்டத்தை. ஆனால் அப்ரஹாமிய வேதா நூல்களில், சொல்லப்படும் வன்முறையும் அசிங்கம்களும் வாயால் சொல்ல முடியாது. அமெரிக்காவில் நடக்கும் கறுப்பர் இனத்திற்கு எதிரான வன்முறையே அதற்கு சாட்சி.
Rate this:
Cancel
14-ஜூன்-202013:52:27 IST Report Abuse
ஆரூர் ரங் போரிட்டு தன் மக்களைக் காப்பது சத்ரிய தர்மம். இதில் உறவுமுறைகளைகூடப் பார்க்கக்கூடாது என்பது கீதை. தானே சமாதானத் தூதுபோயும் இறங்கி வராமல் போருக்கு வந்த கவுரவர்களை போர்தான் வழிக்குக் கொண்டுவரும் என்பதால்தான் வாழ்வாதாரத்துக்குப் போரிடத் தயங்காதே என்று பாண்டவருக்கு தர்மம் உபதேசித்தார் கண்ணன். போரைத் தூண்டினார் என்பது அபத்தம். மாடுமேய்க்கும் குலத்தில் பிறந்த அவர் எப்படி சாதீயத்தை உயர்த்தியிருப்பார்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X