டில்லியில் கொரோனா தீவிரம்: அமித்ஷா - கெஜ்ரிவால் ஆலோசனை

Updated : ஜூன் 14, 2020 | Added : ஜூன் 14, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
Covid-19 cases, Delhi, Amit Shah, Arvind Kejriwal, delhi cm, home minister, kejriwal

புதுடில்லி :டில்லியில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து, அதை கட்டுப்படுத்துவது குறித்து, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை நிலை கவர்னர் அனில் பைஜால் ஆகியோருடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று(ஜூன் 14) ஆலோசனை நடத்தினார்.


படுக்கை வசதி இல்லை
latest tamil news
டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.இங்கு, 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, 1,200க்கும் அதிகமானோர் கொரோனா தாக்குதலுக்கு பலியாகி உள்ளனர். இதையடுத்து, வைரஸ் பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் கெஜ்ரிவால், டில்லி துணை நிலை கவர்னர் அனில் பைஜால் ஆகியோருடன், மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித் ஷா, இன்று ஆலோசனை நடத்த்தினார். .மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்த்தனும் இந்த ஆலோசனையில் பங்கேற்றார்.

இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:நாட்டிலேயே, மஹாராஷ்டிரா, தமிழகம் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தபடியாக டில்லியில் தான் அதிக பாதிப்பு உள்ளது.
மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு போதிய படுக்கை வசதி இல்லை என்றும் பலரும் தெரிவிக்கின்றனர். கொரோனா நோயாளிகள் மோசமாக நடத்தப்படுவதாக உச்ச நீதி
மன்றமும் தெரிவித்துஉள்ளது. இதையடுத்து, உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, டில்லி முதல்வர், கவர்னருடன், மத்திய உள்துறை அமைச்சர் ஆலோசனை நடத்ததவுள்ளார். இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது.இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


தற்காலிக மருத்துவமனைகொரோனா தொடர்பான ஒரு வழக்கை நேற்று விசாரித்த டில்லி உயர் நீதிமன்றம், 'கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனைகளில் படுக்கை வசதியை அதிகரிக்க வேண்டும். 'செயற்கை சுவாசம் அளிக்கும் கருவிகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும்' என, டில்லி அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.பல்வேறு தரப்பினரிடமிருந்தும் புகார்கள் வருவதை அடுத்து, டில்லியில், 10 ஆயிரம் படுக்கைகள் உடைய தற்காலிக மருத்துவமனையை அமைப்பதற்கான நடவடிக்கைகளில் மாநில அரசு இறங்கியுள்ளது. கூடாரங்களை அமைத்து, அவற்றில் படுக்கை வசதி, செயற்கை சுவாச கருவி ஆகியவற்றை அமைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
15-ஜூன்-202000:50:11 IST Report Abuse
மலரின் மகள் ஆட்சி செய்த விதம் சரியல்ல என்று இயற்கை நினைக்கிறதோ என்னவோ?
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
14-ஜூன்-202013:55:59 IST Report Abuse
J.Isaac ஆட்டுத்தோல் போர்த்திய குள்ளநரி.
Rate this:
Cancel
Abbavi Tamilan - Riyadh,சவுதி அரேபியா
14-ஜூன்-202012:36:50 IST Report Abuse
Abbavi Tamilan பல கோடி செலவில் இரயில் பெட்டிகளை கொரோனா வார்ட்டாக மாற்றி இருக்கிறோம் என்கிறார்களே யாரும் பார்த்திங்களா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X