பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு

Updated : ஜூன் 14, 2020 | Added : ஜூன் 14, 2020 | கருத்துகள் (37)
Share
Advertisement
chennai lockdown, e pass, district, Covid-19 in tn, corona, coronavirus, covid-19, corona deaths, corona update, coronavirus update, coronavirus death count, corona toll, corona cases in TN, corona crisis, covid 19 pandemic, tamil nadu, chennai, curfew, சென்னை, இ-பாஸ், விண்ணப்பம்,

தமிழகத்தில், 'இ - பாஸ்' நடைமுறையால், பெரும்பாலானோர், சொந்த மாவட்டத்திற்கு செல்ல முடியாமல், தவித்து வருகின்றனர். பெரும்பாலான மாவட்ட நிர்வாகங்கள், சென்னையிலிருந்து விண்ணப்பித்தால், உடனடியாக மனுவை நிராகரிக்கின்றன.

தமிழகத்தில், ஜூன், 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனால், பல்வேறு தளர்வுகளை, அரசு அறிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் தவிர, மற்ற மாவட்டங்களில், பஸ்கள் இயக்கப்படுகின்றன.அனுமதிசென்னை உள்ளிட்ட, நான்கு மாவட்டங்கள் தவிர்த்து, பிற மாவட்டங்கள், ஆறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

மண்டலத்திற்குள் செல்வதற்கு, 'இ - பாஸ்' தேவையில்லை. ஒரு மண்டலத்தில் இருந்து, மற்றொரு மண்டலத்திற்கு செல்ல, 'இ- - பாஸ்' அவசியம்.இதைப்பெற, அரசு இணையதளத்தில், முறையாக விண்ணப்பிக்க வேண்டும். தற்போது, அரசு உத்தரவின்படி, திருமணம், இறப்பு, மருத்துவ சிகிச்சை போன்றவற்றுக்கு மட்டுமே, ஒரு மண்டலத்திலிருந்து, மற்றொரு மண்டலத்திற்கு செல்ல, அனுமதி அளிக்கப்படுகிறது.மற்ற காரணங்கள் எதுவாக இருந்தாலும், 'இ- -பாஸ்' வழங்கப்படுவதில்லை. ஆனால், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள் ஆகியோரின் உறவினர்களாக, தெரிந்தவர்களாக இருந்தால், எளிதாக, 'இ- - பாஸ்' பெற்று விடுகின்றனர்; மற்றவர்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது.அதிலும் குறிப்பாக, சென்னை மாவட்டத்தில் இருந்து விண்ணப்பித்தால், பெரும்பாலான மாவட்ட நிர்வாகங்கள், அந்த விண்ணப்பங்களை, உடனடியாக நிராகரித்து விடுகின்றன. இ -- பாஸ் கிடைக்காததால், பலர் இரு சக்கர வாகனங்களில் செல்கின்றனர். அவர்களை, போலீசார் மடக்கினால், கொடுக்க வேண்டியதை கொடுத்து விட்டு செல்கின்றனர்; சில போலீசார் திருப்பி அனுப்புகின்றனர்.


latest tamil news


அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் செயல்பட துவங்கி விட்டன. தனியார் நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களை பணியில் சேரும்படி உத்தரவிட்டுள்ளன. அவ்வாறு பணியில் சேர வேண்டியவர்கள், ஒரு மண்டலத்தில் இருந்து, அடுத்த மண்டலத்திற்கு செல்ல, 'இ- பாஸ்' கிடைக்காததால், பணியில் சேர முடியாமல் தவிக்கின்றனர்.


விதிமுறை


சென்னையிலிருந்து பலர், சொந்த மாவட்டத்திற்கு செல்ல விரும்பி, 'இ - -பாஸ்' பெற விண்ணப்பித்துள்ளனர். ஆனால், அனுமதி கிடைக்காமல் உள்ளது. பல முறை விண்ணப்பித்தும், அவர்களின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.வெளி மாநில தொழிலாளர்களை, சொந்த மாநிலம் செல்ல அனுமதிக்கும் அரசு, சொந்த மாநில மக்கள், தங்கள் சொந்த மாவட்டத்திற்கு செல்ல, அனுமதி மறுக்கிறது. இதனால், ஏராளமானோர் பாதிக்கப்பட்டுஉள்ளனர்.அவர்கள் நலன் கருதி, சொந்த மாவட்டத்திற்கு செல்ல விரும்புவோர், வேலையில் சேர விரும்புவோர் போன்றவர்களுக்கு, 'இ- பாஸ்' வழங்க, அரசு அனுமதிக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, அவர்களை பரிசோதனைக்கு பின், அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தலாம். இதற்கு, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-- நமது நிருபர்- -

Advertisement
வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R chandar - chennai,இந்தியா
14-ஜூன்-202019:58:24 IST Report Abuse
R chandar Government can permit person based on their address mentioned in Aadhar card and consider that as native place, and any person wants to come to any other place for employment those persons can be permitted based on id card of the company or a letter from the company , government should give some relaxation in this rule to get it through , here most of the corona cases are A symptematic and now WHO also recently announcing they are not the carriers of the diesease , govenment should interfere and clear this type diesease person to move out from the existing place to their native place based on aadhar card . Government should consult with medical team and take decision fast for the sake of public
Rate this:
Cancel
Ramakrishnan - Coimbatore,இந்தியா
14-ஜூன்-202017:46:48 IST Report Abuse
Ramakrishnan I have applied for epass to go to my house at Coimbatore from Chennai several times. But I couldn't get it. I am struggling in Chennai for the past three months. I don't know when will I get it. Staying in another person's house for this long is stressful. God only can save us from this situation.
Rate this:
Cancel
Covaxin - Bharat Hindustan,இந்தியா
14-ஜூன்-202017:12:37 IST Report Abuse
Covaxin அரசியல் செல்வாக்குள்ளவர்களுக்கு இ-பாஸ் சர்வசாதாரணம்... சாதாரண மக்களுக்கு அசாதாரணம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X