மதுரையில் டூவீலர்கள் திருடிய பாதிரியார் கைது

Added : ஜூன் 14, 2020 | கருத்துகள் (8) | |
Advertisement
மதுரை:மதுரையில் டூவீலர்களை திருடி அடமானம் வைத்த பாதிரியார் விஜயன் என்ற சாமுவேல் 36, கைது செய்யப்பட்டார். ஊழியம் செய்வதற்கான நிதி கிடைக்காததால் திருடியதாக கூறியுள்ளார்.மதுரை சுப்பிரமணியபுரம், எஸ்.எஸ்.காலனி, திருமங்கலத்தில் அடுத்தடுத்து டூவீலர்கள் திருடுபோயின. இதுதொடர்பாக தனக்கன்குளம் திருவள்ளுவர் நகர், கிறிஸ்டின் பிரதர்ஸ் அசெம்பளி சர்ச் பாதிரியார் சாமுவேலை
 மதுரையில் டூவீலர்கள் திருடிய பாதிரியார் கைது

மதுரை:மதுரையில் டூவீலர்களை திருடி அடமானம் வைத்த பாதிரியார் விஜயன் என்ற சாமுவேல் 36, கைது செய்யப்பட்டார். ஊழியம் செய்வதற்கான நிதி கிடைக்காததால் திருடியதாக கூறியுள்ளார்.

மதுரை சுப்பிரமணியபுரம், எஸ்.எஸ்.காலனி, திருமங்கலத்தில் அடுத்தடுத்து டூவீலர்கள் திருடுபோயின. இதுதொடர்பாக தனக்கன்குளம் திருவள்ளுவர் நகர், கிறிஸ்டின் பிரதர்ஸ் அசெம்பளி சர்ச் பாதிரியார் சாமுவேலை சுப்பிரமணியபுரம் போலீசார் கைது செய்து 11 டூவீலர்களை பறிமுதல் செய்தனர்.

போலீசார் கூறியதாவது:தேனி மாவட்டம் கம்பத்தில் பாதிரியாருக்கான படிப்பை முடித்த சாமுவேல், தனக்கன்குளத்தில் ஊழியம் செய்து வந்தார். இதற்காக வெளிநாடுகளில் இருந்து தரப்பட்ட நிதி திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் டூவீலர்களை திருடி தலா ரூ.10 ஆயிரத்திற்கு அடமானம் வைத்து வந்துள்ளார்.சில நாட்களுக்கு முன் டூவீலர் ஒன்றை பைபாஸ் ரோடு மெக்கானிக்கிடம் சர்வீஸ் செய்ய கொடுத்துள்ளார். அப்போது சாமுவேலின் அலைபேசி எண், ஆதார் அட்டை நகலை மெக்கானிக் வாங்கிக்கொண்டார்.டூவீலரில் இருந்த ஆவணங்களை மெக்கானிக் பார்த்தபோது, அது வேறு ஒருவடையது எனத்தெரிந்தது. அதில் இருந்த அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவித்தார். டூவீலர் உரிமையாளர் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து சாமுவேல் கைது செய்யப்பட்டார். இவ்வாறு போலீசார் கூறினர்.

சாமுவேலை கைது செய்த சுப்பிரமணியபுரம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிரியா, எஸ்.ஐ., ஜெய்சங்கர் தலைமையிலான போலீசாரை கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் பாராட்டினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-ஜூன்-202022:44:03 IST Report Abuse
kulandhai Kannan அங்கங்கே காளான்களாக முளைக்கும் ஜெபவீடுகளுக்கு ஏதேனும் கட்டுப்பாடுகள் கொணர்ந்தால் நல்லது. ஆனால் தொலைநோக்குப் பார்வை இல்லாத தமிழக அரசுகளிடம் அதை எதிர்பார்க்க முடியாது.
Rate this:
Cancel
14-ஜூன்-202019:20:29 IST Report Abuse
அருணா பாவமன்னிப்பு கேட்டு தன்னை பரிசுத்தமாக்கிக் கொள்வார்.
Rate this:
Cancel
14-ஜூன்-202016:04:32 IST Report Abuse
ஆரூர் ரங் இதுபோல தனியாக இவஞ்சலிஸ்ட் ஜெபவீடு சர்ச் என வணிகம் செய்வோர் பெருகிவிட்டனர். மோதிஜி அன்னிய மதமாற்ற என ஜி ஒ க்களுக்கு அன்னிய நிதி வருவதைத் தடுத்ததால் இதுவும் ஆரம்பித்துவிட்டது. செஞ்சிட்டு பாவமன்னிப்பு கேட்டாப் போச்சு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X