தவமாய் தவமிருந்த தந்தை: நல்லெண்ண தூதர் நேத்ரா நெகிழ்ச்சி

Added : ஜூன் 14, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
இருப்பதை இல்லாதவர்களுக்கு கொடுக்கும் எண்ணம் எல்லோருக்கும் இல்லை. கொரோனா கோரத்தாண்டவமாடும் ஊரடங்கில் இப்படி எண்ணம் வர வேண்டும் என்றால் வறுமையின் வலி தெரிந்திருக்க வேண்டும். ஊரடங்கில், பொருளாதார சிக்கலில் சிக்கி தவித்த ஏழை, எளிய மக்களின் வறுமை வலி தெரிந்து உதவிய மதுரை மாணவி நேத்ரா தமிழனின் பெருமையை உலகறிய செய்திருக்கிறார். பிரதமர் மோடியின் பாராட்டுக்கு பின்
 தவமாய் தவமிருந்த தந்தை: நல்லெண்ண தூதர் நேத்ரா நெகிழ்ச்சி

இருப்பதை இல்லாதவர்களுக்கு கொடுக்கும் எண்ணம் எல்லோருக்கும் இல்லை. கொரோனா கோரத்தாண்டவமாடும் ஊரடங்கில் இப்படி எண்ணம் வர வேண்டும் என்றால் வறுமையின் வலி தெரிந்திருக்க வேண்டும். ஊரடங்கில், பொருளாதார சிக்கலில் சிக்கி தவித்த ஏழை, எளிய மக்களின் வறுமை வலி தெரிந்து உதவிய மதுரை மாணவி நேத்ரா தமிழனின் பெருமையை உலகறிய செய்திருக்கிறார். பிரதமர் மோடியின் பாராட்டுக்கு பின் சர்வதேச அமைப்பால், ஏழைகளுக்கான நல்லெண்ண தூதராக அறிவிக்கப்பட்டுள்ள நேத்ரா பேசுகிறார்....

ராமநாதபுரம் மேலசிறுபோது கிராமத்தில் விவசாயியாக இருந்த தந்தை மோகன், அம்மா பாண்டிச்செல்வி 2001ல் மதுரை வந்தோம். பாட்டி கனகம்மாள் மேலமடையில் தந்தைக்கு சலுான் கடை வைத்து கொடுத்தார்.

அப்பகுதி மக்கள் எங்கள் குடும்பத்தில் ஒருவராக பழகுவார்கள். தந்தை தன்னால் முடிந்த சிறு உதவிகளை செய்வது வழக்கம். இந்நிலையில் தான் கொரோனா தீவிரமாகி ஊரடங்கு வந்தது. இதனால் மேலமடை, நாங்கள் வசிக்கும் தாசில்தார் நகர் பகுதியில் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களில் சிலர் உதவி கேட்டு எங்கள் வீட்டு கதவை தட்டினர். 'நம்மை நம்பி வந்தவர்களுக்கு உதவ வேண்டும். என் படிப்பிற்காக சேமித்த ரூ.5 லட்சத்தை வங்கியில் இருந்து எடுத்து கஷ்டபடுபவர்களுக்கு நிவாரணமாக கொடுங்கள்'என தந்தையிடம் கூறினேன். முதலில் தயங்கிய தந்தை, நான் விரும்பி நிர்ப்பந்தித்ததால் சம்மதித்தார். அத்தியாவசிய பொருட்களின்றி தவித்த 1500 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி, பலசரக்கு வழங்கினோம்.

சென்னை ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.35 ஆயிரம் வழங்கினோம்.இந்த தகவல் நண்பர்கள் மூலம் வெளியே தெரிய துவங்கி பிரதமர் மோடி வரை சென்றது. 'மன் கீ பாத்'தில் பேசிய பிரதமர் எங்கள் சேவையை பாராட்டினார். அதற்கு பின் உலகளவில் இந்த சேவை தெரிய வந்தது. இதன் பலனாக 'யுனைடட் நேஷன்ஸ் டெவலப்மென்ட் புரோகிராம்' என்ற சர்வதேச அமைப்பு என்னை ஏழைகளுக்கான நல்லெண்ண துாதராக்கியது.

நியூயார்க், ஜெனிவாவில் நடக்கும் கூட்டத்தில் பேசவும் அழைத்தது.தற்போது 9ம் வகுப்பு செல்லும் எனக்கு ஐ.ஏ.எஸ்., ஆவது தான் லட்சியம். வறுமை இல்லாத உலகை உருவாக்க உழைக்க போகிறேன். சர்வதேச கூட்டத்தில் பேச ஆங்கிலம், ஹிந்தி பேச்சு பயிற்சி பெறுகிறேன். என் படிப்பிற்காக தவமாய் தவமிருந்து பணம் சேர்ந்த தந்தை, வருங்கால படிப்பு செலவை ஏற்பதாக கூறிய இயக்குனர் பார்த்திபன் உட்பட அனைவருக்கும் நன்றி, என்றார்.
nethramohan 769@gmail.com

- ஸ்ரீனி
- தீப்சி

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anandh Babu - Chennai,இந்தியா
07-ஆக-202016:06:32 IST Report Abuse
Anandh Babu சர்வதேச அளவில் பேச ஹிந்தி வேணுமா ? ஆங்கிலம் மற்றும் தமிழ் இருந்தா போதாதா
Rate this:
Cancel
Anand K - chennai,இந்தியா
08-ஜூலை-202013:06:31 IST Report Abuse
Anand K இருப்பதை இல்லாதவர்களுக்கு கொடுக்கும் எண்ணம் எல்லோருக்கும் இல்லை. கொரோனா கோரத்தாண்டவமாடும் ஊரடங்கில் இப்படி எண்ணம் வர வேண்டும் தமிழக அரசு 3 மாதங்களுக்கு வீட்டு வாடகை வசூலிக்கக் கூடாது தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தற்போது வரை நீடித்து வருகிறது. இந்த ஊரடங்கால் பல தொழில்கள் முடங்கியுள்ள நிலையில், மக்கள் வேலைகளுக்கு செல்ல முடியாமலும் வருமானமில்லாமலும் தவித்து வருகின்றனர். இந்த இக்கட்டான சூழலில் மக்களுக்கு உதவ தமிழக அரசு 3 மாதங்களுக்கு வீட்டு வாடகை வசூலிக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளன ஆனால் நன்றியை இல்லாத வீட்டு உரிமையாளர்கள் அவர்கள் வீட்டில் வாடகை இருக்கும் வாடகைதாரர் க்கு இந்த இன்னல் காலத்தில் மாத வாடகையை தள்ளுபடி செய்யவில்லை இவர்கள் இந்த வாடகைதாரர்கள் மூலம் பல ஆண்டுகள் மாதம் மாதம் பல்லாயிரம் என லட்சக்கணக்கில் பெற்று வாழ்க்கை ஆடம்பரமாக வாழ்ந்துள்ளனர் சென்னையில் மழை வெள்ளம் புயல் பாதிக்கப்பட்ட காலத்தில் சென்னையில் உள்ள மக்களுக்கு அறிமுகமற்ற பலர் எந்த எதிர்பார்ப்புமின்றி சென்னையில் உள்ள மக்களுக்கு பல்வேறு வழிகளில் பல ஆயிரக்கணக்கில் பணமாகவும் பொருளாகவும் அனைவருக்கும் உதவினர் ஆனால் நன்றியை இல்லாத வீட்டு உரிமையாளர்கள் அவர்கள் வீட்டில் வாடகை இருக்கும் வாடகைதாரர் க்கு இந்த இன்னல் காலத்தில் மாத வாடகையை தள்ளுபடி செய்யவில்லை இவர்கள் இந்த வாடகைதாரர்கள் மூலம் பல ஆண்டுகள் மாதம் மாதம் பல்லாயிரம் என லட்சக்கணக்கில் பெற்று வாழ்க்கை ஆடம்பரமாக வாழ்ந்துள்ளனர் ஆனால் யாரோ தெரியாத மக்கள் மழை புயல் வெள்ளம் குரானா ஊரடங்கு காலத்தில் எந்த எதிர்பார்ப்புமின்றி உதவி வரும் போது வாடகைதாரர்கள் மாதம் மாதம் வாடகை என்ற பெயரில் அரசு நிர்ணயித்த வாடகை விட பல மடங்கு வாங்கி இத்துடன் மின்கட்டணம் அரசு நிர்ணயித்த மின் கட்டணத்தை விட அதிகமாக பெற்று மாதம் மாதம் பராமரிப்பு செலவு என வாடகைதாரர் இடம் முன்பணம் எனும் பெயரில் வாடகைதாரர் இடம் வீட்டு வாடகைக்கு முன்பணமாக இரண்டு மாதம் மட்டுமே தமிழக அரசு வாங்க வேண்டும் எனச் சொல்லியும் பத்து மாதம் வாடகையை முன்பணமாக வாங்கி வாடகை கார் இடம் கொள்ளையடித்த வீட்டு உரிமையாளர் இந்தப் பேரிடர் காலத்தில் வாடகையை தள்ளுபடி செய்யாத நன்றி கெட்ட வீட்டு உரிமையாளர் கடவுள் கட்டாயம் தண்டனை அளிப்பார் அந்த வீட்டு உரிமையாளர்களுக்கு வாரிசுகள் இருக்காது இருந்தாலும் குறைபாடு இருக்கும் இல்லை என்றாலும் அந்த வாரிசுகள் வயதில் விபத்தில் அழிந்து விடுவர் இல்லையெனில் கெட்ட பழக்கவழக்கங்களால் சீரழிந்து விடுவர் ஆண் வாரிசு இல்லாமல் இருக்கும் பெண் வாரிசுகள் இருந்தால் அவர்கள் வீட்டிற்கு விதவையாக வந்து அவர்களுக்கும் அந்த வீட்டு உரிமையாளர் கொல்லி வைக்கவேண்டிய கட்டாய சூழலில் தான் வாழ வேண்டி வரும் இது காலத்தின் கட்டாயம் ஏனெனில் வீட்டு உரிமையாளர்கள் அனைவரும் அரசு நிர்ணயித்த வாடகை விட பல மடங்கு மாதம்தோறும் வாடகையை வாடகைதாரர் இடம் மூட்டை பூச்சியை நசுக்குவது போல் நசுக்கி பல ஆண்டுகள் வந்துள்ளனர் அந்த வீட்டு உரிமையாளர்களே கடைகளில் சென்று பொருள்கள் வாங்கும்போது அரசு நிர்ணயித்த விலையை விட அதிகமாக விற்றால் என்ன கேள்வி கேட்கிறார்கள் ஆனால் அவர்களோ அரசு நிர்ணயித்த வாடகை விட பல மடங்கு வாடகை பெற்று வருகின்றனர் ஆனால் சென்னையில் அரசு கட்டிய குடியிருப்புகளுக்கு மாத வாடகை 500 வசூலிக்கின்றனர் ஆனால் அதே அளவு உள்ள வீடுகளுக்கு வீட்டு உரிமையாளர் பத்தாயிரம் வரை வசூலிக்கின்றனர் சென்னையில் இருந்து கொத்து கொத்தாய் காலி செய்யும் குடும்பங்கள் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் பல சிறு தொழில்கள் செய்து வருபவர்கள் வேலை இன்றி வருமானம் இன்றி உள்ளனர். எனவே அவர்கள் வாடகை மற்றும் இதர செலவுகளை சமாளிக்க முடியாததால் சென்னையை விட்டு சென்று கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது ஏற்கனவே சென்னையை விட்டு பலர் கொத்துக்கொத்தாக சொந்த ஊரை நோக்கி சென்றுள்ள நிலையில் தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஏற்பட்டவுடன் பலர் சென்னையை காலி செய்து கொண்டு சொந்த ஊரை நோக்கி செல்கின்றனர் சென்னையில் குறைந்தபட்ச வீட்டு வாடகை 7000 முதல் 10000 வரை இருப்பதாகவும் அதனை அடுத்து குடும்பச் செலவுகள் ஆகியவை சேர்த்து குறைந்த பட்சம் 20 முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை மாதம் தேவை என்றும் ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அந்த பணத்தை சம்பாதிப்பது என்பது இயலாத ஒன்றாக இருப்பதால் சென்னையை விட்டு காலி செய்வதாக தெரிவிக்கின்றனர் சொந்த ஊருக்கு சென்றால் 500 முதல் 1,000 ரூபாய் வாடகைக்கு வீடு கிடைக்கும் என்றும் மாதம் 10ஆயிரம் ரூபாய் இருந்தால் வீட்டுச் செலவை சமாளித்து விடலாம் என்றும் பலர் தெரிவித்து வருகின்றனர் மேலும் சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவிக் கொண்டே வருவதால் எப்போது இயல்பு நிலை திரும்பும் என்று தெரியவில்லை என்பதால் இதற்கு மேல் தங்களால் சமாளிக்க முடியாது என்று கூறி பலர் சென்னையை விட்டு காலி செய்து சென்றுகொண்டிருக்கின்றனர் இதன் காரணமாக சென்னை புறநகர் பகுதியில் பல வீடுகள் காலியாக இருப்பதாகவும் இதனால் வீட்டின் உரிமையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. சென்னையில் ஒரு காலத்தில் வீடு வாடகைக்கு கிடைக்காமல் இருந்த நிலை மாறி தற்போது ஏகப்பட்ட வீடுகள் காலியாக இருப்பது பெரும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளித்துள்ளது
Rate this:
Cancel
Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா
08-ஜூலை-202010:23:40 IST Report Abuse
Bala Murugan தற்பெருமைக்காக செய்த செயல். உண்மையில் இவருடைய அம்மாவுக்கும் அப்பாவுக்கும் செலவு பண்ண மனமில்லை. பிறகு பின்னால் என்ன நடக்கும் என்று பலவாறு யோசித்து செய்த செயல். உண்மையில் இவர்களுக்கு எந்த நல்லெண்ணமும் இல்லை என்பதை அடித்து சொல்வேன்.
Rate this:
vijay - coimbatore,இந்தியா
07-ஆக-202011:33:16 IST Report Abuse
vijayதம்பி பாலமுருகரே, மக்கள் வரி பணத்தை வைத்தே தொகுதி நிதி என்று வழங்கிவிட்டு நான்தான் மக்களுக்கு செஞ்சேன், என் கட்சிதான் செஞ்சது என்று மேடையில் முழங்கி மீண்டும் பதவிக்கு வரும் அரசியல்வாதிகளை விட தன்னுடைய சொந்த சேமிப்பு பணத்தை எடுத்து செலவிட்டு மிக்க நல்ல செயல்தான். சொந்த பணத்தை செலவிட்டு விட்டால் நிச்சயமாக தெரிந்தவர் ஒருவர் வெளியே சொல்லத்தான் போகிறார், பிறகு அந்த குடும்பம் என்ன ரோட்டில் பிட்சை எடுக்க வேண்டுமா பாலமுருகரே? தானமாக பணம் உதவி செஞ்சா அதிகாரபூர்வமாக வருமானவரி விலக்கே கொடுக்கறாங்க. சினிமாக்காரர்களுக்கு டிக்கெட் என்று கொட்டிக் கொடுப்பதை விட நல்ல காரியத்திற்கு கொடுப்பது நல்லதுதான்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X