பொது செய்தி

இந்தியா

கொரோனா ரத்தத்தின் மூலம் பரவாத நிலையிலும் ரத்தத்திற்கு தட்டுப்பாடு!

Updated : ஜூன் 14, 2020 | Added : ஜூன் 14, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
கொரோனா, ரத்தம், ரத்தத்திற்கு தட்டுப்பாடு,  Health experts, safe blood donation, world blood donor day, delhi, india, blood, coronavirus, corona, covid-19, coronavirus outbreak, covid-19 pandemic, Covid-19 crisis, healthcare, World Blood Donor Day, 'Safe blood saves lives'

புதுடில்லி : ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டுள்ளதால் ரத்தத்திற்கான தேவை அதிகரித்துள்ளது. தானம் அளிக்கப்பட்ட ரத்தத்தின் மூலம் கொரோனா பரவாது எனினும் பழையபடி ரத்த தானம் பெறுவதில் சிக்கல்கள் நீடிக்கின்றன.

இன்றைக்கு உலக ரத்த தான தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகளவில், ரத்த வங்கிகள் தங்கள் தேவைகளுக்கு தன்னார்வ ரத்த தானம் செய்பவர்களை சார்ந்துள்ளது. ஊரடங்கு காலத்தில், விபத்துகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் குறைந்ததால் ரத்த தானம் மற்றும் பயன்பாடு இரண்டும் குறைந்தது. ஊரடங்கு பல்வேறு கட்டங்களாக நீக்கப்பட்டுள்ளதால், தற்போது ரத்தத்தின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் தன்னார்வலர்கள் ரத்த தானம் செய்ய தயக்கம் காட்டுவதால் கடுமையான ரத்த பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.


latest tamil news


ரத்தம் சேகரிப்பதற்கான வழிகாட்டுதலை சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் வெளிநாடு பயண வரலாறு கொண்டவர்கள், கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கொரோனா நோயாளிகளுடன் தொடர்பு கொண்டவர்கள் ஆகியோரிடமிருந்து ரத்தம் பெறக்கூடாது என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

தானம் செய்யப்பட்ட ரத்தத்தின் மூலம் கொரோனா பரவவில்லை என்றாலும், ரத்த தானம் நடைபெறும் போது தானம் செய்பவர் அதை சுகாதாரப் பணியாளர்களுக்கு பரப்பலாம். இல்லையென்றால் தானம் செய்பவர் மருத்துவமனையில் இருக்கும் கொரோனா நோயாளியிடமிருந்து நோய்த்தொற்றுக்கு ஆளாக நேரிடும் என்பதால் இவற்றை தடுக்க இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுவாக ரத்த தான முகாம்கள் வழியாக ரத்த வங்கிகள் தங்கள் தேவைகளை உருவாக்கும். இந்த காலங்களில், ரத்த தான முகாமை ஏற்பாடு செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். அங்கு பொருத்தமான சமூக விலகல் கவனிக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kundalakesi - Coimbatore,இந்தியா
15-ஜூன்-202000:32:43 IST Report Abuse
Kundalakesi Hospitals which collects free blood from us does charge a good sum of money from clients or patients. It is cruel thing in the world. They should charge only for the facilities they provide but they charge a lot.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X