பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 45 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு; இதுவரை 435 பேர் பலி

Updated : ஜூன் 14, 2020 | Added : ஜூன் 14, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
CoronaVirus, CoronaCases, Tamilnadu, Discharge, TN_CoronaUpdates, TN_Health, TN_FightsCorona, Corona, TNGovt, Covid-19, PositiveCases, தமிழகம், கொரோனா, வைரஸ், பாதிப்பு, உயிரிழப்பு, டிஸ்சார்ஜ்

சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூன் 14) ஒரே நாளில் 1,974 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 44,661 ஆகவும், பலி எண்ணிக்கை 435 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று மேலும் 1,974 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 33 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். மொத்த பாதிப்பு 44,661 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமுள்ள 79 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 18,782 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்றைய தேதி வரையில் தமிழகத்தில் 7,10,599 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்று சென்னையில் 31 பேரும், காஞ்சிபுரம், திருவள்ளூர், விருதுநகர், விழுப்புரம், மதுரை, செங்கல்பட்டு, திருவண்ணாமலையில் தலா ஒருவரும் என மொத்தம் 38 பேர் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 435 ஆக அதிகரித்துள்ளது.


latest tamil news


இன்றைய உயிரிழப்புகளில் 22 பேர் அரசு மருத்துவமனையிலும், 16 பேர் தனியார் மருத்துவமனையிலும் பலியாகியுள்ளனர். இன்று ஒரே நாளில் 1,138 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 24,547 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 19,676 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் மொத்த பாதிப்புகளில் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 2,270 பேரும், 13 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 37,252 பேரும், 60 வயதை கடந்தவர்கள் 5,139 பேரும் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
svs - yaadum oore,இந்தியா
15-ஜூன்-202007:03:55 IST Report Abuse
svs காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீண்டும் கூட்டம் ...அங்குள்ள பலமான மந்திரி என்ன செய்கிறார் என்று தெரியவில்லை ....இங்கு இறப்புகள் அதிகமாகுது ...இறப்பவர்கள் வயதும் முன்பு இருந்ததை விட குறைவு ....மருத்துவ வசதிகள் போதவில்லை என்பதையே இது எடுத்துக்காட்டுவது .....பாதிக்கப்பட்டவர் தொகை அதிகரித்துக்கொண்டே போனால் மருத்துவம் செய்ய இயலாது ..இங்குள்ளவர்களுக்கு அது புரிய வேண்டும்....
Rate this:
Cancel
Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ
15-ஜூன்-202002:59:04 IST Report Abuse
Dr.C.S.Rangarajan காரோண நோய் பரவும் காலத்தில் மத்திய, மாநில அரசுகள் நோய் தடுப்பு முழு முயற்சியிலும் நிறைகளை விட்டு குறைகளை காணும் எதிர் கட்சிகளுக்கு , மஹாகவி பாரதியின் காக்கை சிறகினிலே என்று தொடங்கும் பாடலில் 'தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா, நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதையே நந்தலாலா' என்ற வரியில் 'தீண்டும்' என்ற சொல்லை நீக்கி 'சீண்டும்' என்று மாற்றினால் (பாரதியார் மன்னிக்க) பொருத்தமாய் இருக்குமோ?
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
14-ஜூன்-202019:38:17 IST Report Abuse
Tamilnesan முதலில் மனித உயிர்களை கொரநா தொற்றில் இருந்து காப்பாற்றுங்கள். அணைத்து ப்ரிச்சனைகளை விட மனித உயிர் மிக முக்கியம் என்று உலக நாடுகளுக்கு இந்தியா மூலம் சொல்ல வையுங்கள். அதற்கு கொரநா பிரச்னையை சரி செய்யுங்கள். மனிதன் உயிரோடு இருந்தால் தான் பொருளாதாரம், உரிமை மற்றவை எல்லாம். பல ஆயிரக்கணக்கில் மனிதன் மாண்டு போன பின்பு மற்றவை இருந்து என்ன பயன்? குறைந்த பட்சம் தமிழ்நாட்டில் கொரநா வேகமாக பரவும் நான்கு வட மாவட்டங்களில் இரண்டு வாரங்கள் கடுமையான ஊரடங்கு அறிவித்து, ராணுவம் மூலம் கொரநாவை கட்டுக்குள் கொண்டு வாருங்கள். ஜெய் ஹிந்த்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X