சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டூவிலர் திருட்டில் 6 பேர் கைது: 20 வாகனங்கள் பறிமுதல்

Added : ஜூன் 14, 2020
Share
Advertisement



கோவை: கோவையில், வாகன திருட்டில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.கோவையில், பெட்ரோல் பங்க்கில் காசாளராக பணிபுரியும் சிரஞ்சீவிகுமார் என்பவர், தனது யமஹா ஆர்எக்ஸ் 100 டூவிலரில், பெரியநாயக்கன்பாளையம் மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஏடிஎம் மையம் முன்பு நிறுத்தி விட்டு, ஏடிஎம் சென்றுவிட்டு திரும்பிய போது வாகனம் காணவில்லை. இது குறித்து அவர், மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.இந்நிலையில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்தின் பேரில், டூவிலரில் வந்த மேட்டுப்பாளையத்தை சேர்ந்த மொய்தீன்(24) என்பவரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, அந்த வாகனம் சிரஞ்சீவிகுமாருக்கு சொந்தமானது என தெரியவந்தது. இதனையடுத்து, அவரை கைது போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின் பேரில் அபுதாகிர் என்பவரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள்அளித்த தகவலின் பேரில் மேலும் 4 பேரை கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்த திருட்டு டூவிலர்கள் 20க்கும் மேற்பட்டவற்றை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட டூவிலர்களின் மதிப்பு ரூ.7.25 லட்சம் என போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X