கொரோனாவிற்கு விரைவில் தடுப்பு மருந்து ; நிதின் கட்கரி நம்பிக்கை| Corona crisis will not last long, we'll get vaccine soon: Nitin Gadkari | Dinamalar

கொரோனாவிற்கு விரைவில் தடுப்பு மருந்து ; நிதின் கட்கரி நம்பிக்கை

Updated : ஜூன் 14, 2020 | Added : ஜூன் 14, 2020 | கருத்துகள் (2)
Share

புதுடில்லி : அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளுக்கு விஞ்ஞானிகள் விரைவில் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.latest tamil newsகொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து பாதிப்புகளை அதிகரித்து வருகிறது. நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த ஊரடங்கு விதிமுறைகளுடன் பல்வேறு கட்ட நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. ஊரடங்கு விதிமுறைகளால் தொழில் நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் படிப்படியாக தளர்வுகளுடன் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


latest tamil newsஇந்நிலையில் குஜராத்தில் நடந்த பா.ஜ கூட்டத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலமாக பங்கேற்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், நாட்டில் கொரோனா தொற்றால் எண்ணற்றவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் கொரோனா தொற்று நீண்ட காலமாக நீடிக்காது. இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளும் தொற்று நோய்க்கு எதிராக போராடி கொண்டிருக்கின்றன. நோயை தடுக்கும் மருந்தை கண்டுபிடிக்கும் சோதனை முயற்சிகளில் பல நாட்டு விஞ்ஞானிகளும் இரவு பகலாக தீவிரமாக களமிறங்கி, பல்வேறு ஆராய்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர். கொரோனாவுக்கு விரைவில் தடுப்பு மருந்து கண்டுபிடித்து விடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே மக்கள் கவலைபட வேண்டாம். இவ்வாறு கூறினார்.


Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X