அமெரிக்காவை விட சிறப்பாக கொரோனாவை கையாள்கிறோம்: புடின்

Updated : ஜூன் 14, 2020 | Added : ஜூன் 14, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
Putin, Russia, coronavirus, superior, US, Vladimir Putin, novel coronavirus epidemic, United States, america, coronavirus outbreak, covid-19 pandemic, corona, covid-19, corona treatment, corona control, புடின்,விளாதிமிர் புடின்

மாஸ்கோ: கொரோனா வைரஸ் தொற்றை கையாள்வதில் அமெரிக்காவை விட சிறப்பாக செயல்பட்டு வருவதாக ரஷ்ய அதிபர் புடின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்து 28 ஆயிரத்து 964 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் ரஷ்யாவில் இதுவரை 6,948 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா உள்பட பல நாடுகளை ஒப்பிடுகையில், ரஷ்யாவில் இறப்பு விகிதம் மிகவும் குறைவாக பதிவாகியுள்ளது.

இந்நிலையில், ரஷ்ய அதிபர் புடின் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, 'நாங்கள் கொரோனா வைரஸ் தொற்றை நம்பிக்கையுடனும், குறைந்த இழப்புகளுடனும் இந்த சூழ்நிலையிலிருந்து வெளியே வருகிறோம். ஆனால் அமெரிக்காவில் அது நடக்கவில்லை. ரஷ்ய அரசியலமைப்பு, கொரோனா நெருக்கடியை அமெரிக்காவை விட சிறப்பாக கையாண்டு வருகிறது.


latest tamil news



கூட்டாச்சி மற்றும் மாகாண அரசுகளில் பணியாற்றும் அதிகாரிகள், அமெரிக்காவை போன்று கருத்து வேறுபாடு இல்லாமல் ஒரு குழுவாக பணியாற்றினர். இந்த விஷயத்தில் அமெரிக்காவில் பிரச்னை என்னவென்றால், ஒட்டுமொத்த சமூகத்தின் , மக்களின் நலனை விட கட்சியின் நலன் மேலாக வைக்கப்படுவதே ஆகும். அமெரிக்க அதிபர் டிரம்பின் தேர்தல் வெற்றிக்கு முந்தைய உள் நெருக்கடியையும், நியாயத்தின் மதிப்பை குறைக்க முயற்சிக்கும் போட்டியாளர்களின் முயற்சியையும் கொரோனா தொற்றை அம்பலப்படுத்தியுள்ளது.

மேலும், அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றம் கொண்டுவந்து அதிபர் பதவியில் சர்வாதிகாரத்தை வலுப்படுத்துவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ள புடின், அரசியலமைப்பு மாற்றத்திற்கு பின் பார்லிக்கு முக்கியமான பங்கு இருப்பதாக தெரிவித்தார்.

ரஷ்யா முழுவதும் அரசியலமைப்பை சட்டத்தை நடைமுறைப்படுத்துதற்கான ஓட்டெடுப்பு வரும் 25ம் தேதி துவங்கி ஜூலை 1 வரை நடைபெறவுள்ளது. இதற்கு ஒப்புதல் அளிக்கப்படும் பட்சத்தில், 1999ம் ஆண்டு முதல் பதவியில் உள்ள 67 வயதாகும் புடின், 2024க்கு பின் மீண்டும் 2 முறை (6 ஆண்டுகள் பதவிக்காலம்) அதிபராக தொடர முடியும்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
14-ஜூன்-202023:16:31 IST Report Abuse
தல புராணம் ஆஹா, ரஷியா பிரமாதமாக கொரோனோ தொற்றையும், சாவு எண்ணிக்கையையும் கையாள்கிறது. ஹா. ஹா.. மெடலு கொடுத்துடலாம்..
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
14-ஜூன்-202023:14:47 IST Report Abuse
தல புராணம் சர்வாதிகாரி புடின் மோடியின் ஆப்த நண்பர்.
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
14-ஜூன்-202021:43:57 IST Report Abuse
sundarsvpr விவஸ்தை இல்லாத போட்டி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X