கொரோனாவில் இருந்து பிழைத்தவருக்கு ஷாக் கொடுத்த மருத்துவமனை 'பில்'

Updated : ஜூன் 14, 2020 | Added : ஜூன் 14, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement

வாஷிங்டன் : அமெரிக்காவில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்த 70 வயது நோயாளிக்கு மருத்துவமனையில் சிகிச்சை கட்டணமாக 1.1 மில்லியன் டாலர்கள் விதிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்த நாடுகளில் அமெரிக்கா முன்னிலையில் உள்ளது. நாட்டில் நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் மைக்கேல் புளோர் என்ற 70 வயதான முதியவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மார்ச்.,4 ல் வாஷிங்டன்னில் உள்ள ஒரு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டார். பல நாட்கள் தீவிர சிகிச்சையில் இருந்தவர், உயிர் பிழைப்பது கடினம் என்ற தருணத்தில் அவரது குடும்பத்தாரும் வந்து பார்த்து பேசி சென்றனர். பின் சில நாட்களில் நோய் தொற்றில் இருந்து குணமடைந்து விட்டார். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனவருக்கு பில் மூலமாக காத்திருத்தது அடுத்த அதிர்ச்சி.


latest tamil news



பொதுவாக மருத்துவமனை பில் ஒரு தாள் (பக்கம்) வரும். ஆனால் இவருக்கோ 181 பக்கம் கொண்ட நோட்டு பில்லாக அனுப்பப்பட்டது. அதில் மொத்தமாக 1.1 மில்லியன் டாலர் ( $1,122,501.04) இந்திய மதிப்பில் தோராயமாக 8,35,52,700 ரூபாய் பில் ஆகும். அதில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு நாளொன்றுக்கு 9,736 டாலர்கள் எனவும், வென்டிலேட்டர் பயன்படுத்தியதற்காக 82,000 டாலர்கள் மற்றும் , தீவிர சிறப்பு சிகிச்சைகளுக்காக 2 நாட்களுக்கு1 லட்சம் டாலர்கள் என பில் தீட்டப்பட்டிருந்தது. ஆனால் அரசின் காப்பீடு புளோருக்கு உதவியது. ஆனால் ப்ளோர் வரிசெலுத்துவோரின் பணம் தனக்காக பயன்படுத்தப்பட்டது தனக்கு குற்ற உணர்வை உருவாக்குகிறது என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
14-ஜூன்-202023:52:14 IST Report Abuse
Vena Suna மனுஷனை மனுஷன் சாப்பிடறாண்டா தம்பி பயலே...இது மாறுவது எப்போ தீருவது எப்போ தம்பி பயலே ....என்று பட்டுக்கோட்டையார் பாடி வைத்தார்...அப்போதே
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
14-ஜூன்-202023:03:30 IST Report Abuse
தல புராணம் இந்தியாவில் அந்த காலம் வரும் நாள் அதிக தூரத்தில் இல்லை. மோடி காப்பீடு, முதல்வர் காப்பீடுன்னு சொல்லி மெடலு குத்திகிறவன் எல்லாம் லம்ப்பா கமிஷன் வாங்கிட்டு, ஓரமா போயி குந்திக்குவான். இன்சூரன்ஸ்காரன் பிரீமியத்தை பிடுங்கிட்டு பிச்சிக்கிட்டு ஓடிருவான்.. இந்த பில் எல்லாம் நம்ம தலையில் இடிபோல விடியும்.. தொங்க வேண்டியது தான்.. இன்சூரன்ஸ் புகுந்த மருத்துவத்துறை இனி நரகம் நோக்கி தான் செல்லும்.
Rate this:
Cancel
SIVA G india - chennai,இந்தியா
14-ஜூன்-202022:31:23 IST Report Abuse
SIVA G  india ஆனால் அரசின் காப்பீடு புளோருக்கு உதவியது. ஆனால் ப்ளோர் வரிசெலுத்துவோரின் பணம் தனக்காக பயன்படுத்தப்பட்டது தனக்கு குற்ற உணர்வை உருவாக்குகிறது என்றார்.இப்படியும் கூச்சபடும் மனிதர்கள். ஆனால் இங்கே பணம் எப்படி கேவலமான முறையில் வந்தாலும் போதும், என பறக்காவெட்டி பல கொள்ளையர்களும், உழைக்க விரும்பாத பிச்சைகாரர்களும் மயானத்திலும் காத்திருப்பார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X