சட்டீஸ்கர் வனப்பகுதியில் 3 யானைகள் உயிரிழப்பு: 4 வனத்துறையினர் பணியிடைநீக்கம்

Updated : ஜூன் 14, 2020 | Added : ஜூன் 14, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

ராய்பூர்: சட்டீஸ்கர் மாநில வனப்பகுதியில் கர்ப்பமாக இருந்த யானை உட்பட 3 யானைகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளன. இதையடுத்து 4 வனத்துறையினர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்



latest tamil news



மாநிலத்தின் பால்ராம்பூர் மாவட்டத்தின் வனப்பகுதியில் சில நாட்களுக்கு முன் பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது. சூரஜ்பூர் மாவட்டத்திலும் கடந்த 8 ம் தேதி கர்ப்பிணி யானையும் மற்றொரு யானையும் இறந்தநிலையில் கிடந்தன. இதையடுத்து வனப்பகுதியையும், உயிரினங்களையும் சரியாக பராமரிக்காத காரணத்தால் 4 வனத்துறை அதிகாரிகள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.


latest tamil news



ஒரு யானை மாரடைப்பால் உயிரிழந்ததாகவும், மற்றொன்று தொற்றின் காரணமாகவும், 3வது யானையின் நச்சுத்தன்மை வாயந்த பொருட்கள் இருந்ததாகவும் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. எனினும் யானைகளின் மரணம் குறித்து விசாரிக்க மாநில வனத்துறை அமைச்சர் முகமது அக்பர் குழு ஒன்றை அமைத்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajesh Rajan - Bangalore,இந்தியா
15-ஜூன்-202010:13:06 IST Report Abuse
Rajesh Rajan மோட்ச தீபம் எப்போது ????
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
14-ஜூன்-202023:56:04 IST Report Abuse
தமிழ்வேல் எனது பழைய அனுபவத்தை ஞாபகப் படுத்திவிட்டீர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X