சிங்கப்பூரில் 40 ஆயிரத்தை கடந்தது கொரோனா

Updated : ஜூன் 14, 2020 | Added : ஜூன் 14, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

சிங்கப்பூர் : கொரோனா பாதிப்பு அதிகரித்து சிங்கப்பூரில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 347 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சிங்கப்பூரிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து கூடிக்கொண்டே செல்கிறது. நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 347 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதனால் சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 40,197 ஆக அதிகரித்தது. புதிதாக பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 2 பேர் சிங்கப்பூர் குடிமக்கள். மற்ற 345 பேர் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து தங்கி பணிபுரியும் தொழிலாளர்கள் என தெரிய வந்துள்ளது.


latest tamil news



இதுவரை கொரோனா தொற்றுக்கு 26 பேர் பலியாகியுள்ளனர். சிங்கப்பூரில் ஒரே நாளில் 768 பேர் நோயிலிருந்து மீண்டனர். நாட்டின் மொத்த நோய் தொற்றில் இருந்து 28,808 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் தற்போது கொரோனா பாதித்த 19 நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து சோதனை முறையில் வழங்கப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Uthiran - chennai,இந்தியா
15-ஜூன்-202007:13:30 IST Report Abuse
Uthiran தமிழகத்திற்கு சென்னை.சென்னைக்கு ராயபுரம், சிங்கப்பூருக்கு இந்தியாவில் இருந்து சென்ற தொழிலாளர்கள்.
Rate this:
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
15-ஜூன்-202001:08:38 IST Report Abuse
elakkumanan அம்பது லச்சமும் சொச்சமும் மக்கள் தொகை கொண்ட, பொறுப்பான, ஓசி காசுக்கு வரிசையில் நிற்காத, ஒழுங்கான , மக்களை கொண்ட, சட்டம் ஒழுங்கின் உச்சமான சிங்கப்பூரில், நாற்பதாயிரம் பேருக்கு வியாதி பரவியுள்ளது..... எங்க ஊரில், நூற்றி முப்பது கோடி மக்கள், ஓசி காசுக்கு வரிசை, ரேஷன் இலவசம், டாஸ்மாக் வரிசை........மூணு லச்சம் பேருக்கு வியாதி......ஆனால், எங்கள் ஊரின் மிக பொறுப்பான மக்களும், எதிர் கட்சிகளும் மோடி அவர்களை குறை கூறி, தங்களின் அறிவீனத்தை வெளிச்சம் போட்டு காட்டுவதும், நேரலையில் காசுக்கு மாரடிப்பதும் .....நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்? மூளையை முனியாண்டி விலாஸில் தேடுவோர் பதிலளிக்கவும்......
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
14-ஜூன்-202020:58:48 IST Report Abuse
sundarsvpr செய்தியில் கொரோனா அதிகரிப்பு என்ற செய்திகள் மட்டும் இருக்கின்றன. ஒரு மாறுதலுக்கு கொரோனா இந்த இந்த நாடுகளில் குறைந்துள்ளன என்ற செய்தியினை வந்தால் அதன் விளைவாக குறைந்துள்ளது என்ற செய்திகள் வரலாம். பரீட்சை செய்து பார்க்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X