பொது செய்தி

இந்தியா

டில்லியில் புதிய உச்சம்; ஒரே நாளில் 2,224 பேருக்கு கொரோனா

Updated : ஜூன் 14, 2020 | Added : ஜூன் 14, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
Delhi, coronavirus, covid-19, corona, coronavirus outbreak, coronavirus update, covid-19 pandemic, new corona cases, positive cases, corona patients, corona spread, corona news, corona in delhi, india, டில்லி, கொரோனா

புதுடில்லி: தலைநகர் டில்லியில், புதிய உச்சமாக இன்று(ஜூன் 14) ஒரே நாளில் 2,224 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 56 பேர் பலியாகினர்.

டில்லியில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் கெஜ்ரிவால், டில்லி துணை நிலை கவர்னர் அனில் பைஜால் ஆகியோருடன், மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித் ஷா, இன்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப்பின், டில்லியில் கொரோனாவை கட்டுப்படுத்த அடுத்த 6 நாட்களில், பரிசோதனை 3 மடங்கு அதிகரிக்கப்படும் என அமித் ஷா தெரிவித்துள்ளார்.


latest tamil news



இந்நிலையில், டில்லியில் புதிய உச்சமாக இன்று ஒரே நாளில் 2,224 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது; 56 பேர் பலியாகினர். இதனையடுத்து டில்லியில் மொத்த பாதிப்பு, 41,182 ஆக உயர்ந்தது. மொத்த பலி எண்ணிக்கை 1,327 ஆனது. இதுவரை 15,823 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்; 24,032 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை டில்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaran vaidyanathan - Coimbatore,இந்தியா
15-ஜூன்-202009:59:46 IST Report Abuse
sankaran vaidyanathan கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதும் சமூக பரவல் மற்றும் ஹெர்ட் இம்யூனிட்டி எனப்படும் சமூக நோய் எதிர்ப்பு கூட்டுத் திறன் ஆகியன பற்றிய கேள்விகள் முன் வரத் தொடங்கின. ஆனால் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கொரோனா வைரஸ் சமூக பரவல் என்னும் நிலையை இந்தியா இன்னும் எட்டவில்லை என்கிறது.சமூகத்தில் ஒரு நோய் அதிக நபர்களுக்கு பரவும்போது, மனிதர்களிடமுள்ள நோய் எதிர்ப்பு திறன் அந்த நோய் மேலும் பரவாமல் இருக்க உதவும். நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முழுமையாக குணமடைந்து நோய் எதிர்ப்பு திறனை தங்களுக்குள் கொண்டிருப்பார்கள். அதாவது அவர்களுக்கு இயற்கையாகவே நோயை எதிர்க்கும் எதிர்ப்பு திறன் உருவாகியிருக்கும்.அதிக மக்கள் நோயால் பாதிக்கப்பட்டு நோய் எதிர்ப்பு திறன் கொண்டிருந்தால் மேலும் நோய் பரவுவது தடுக்கப்படும். இதன் மூலம் நோயால் பாதிக்கப்படாமல் இருப்பவர்களுக்கும் நோய் பரவுவதை தடுக்கலாம்.உண்ண உணவில்லாமல் குடும்பம் பசி பட்டினியால் வாடிய நிலையில் தீரா கஷ்டத்தில்பசி பட்டினி, பிணியால் உழல வேண்டி இருப்பது தான் இன்றய நிலை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X