திட்டவட்டம்! காலாபானி,லிபுலெக் இந்தியாவின் பகுதி தான்: நில ஆவணங்களை உறுதி செய்து அறிவிப்பு

Updated : ஜூன் 16, 2020 | Added : ஜூன் 14, 2020 | கருத்துகள் (11) | |
Advertisement
பித்ரோகர்ஹ்:'உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள காலாபானி, லிபுலெக் ஆகியவை தன் எல்லைக்குட்பட்டது' என, அண்டை நாடான நேபாளம் கூறி வருகிறது. இதற்காக தேசிய வரைபடத்தில் திருத்தம் செய்யும் மசோதாவும் பார்லிமென்டில் நிறைவேறியுள்ளது. ஆனால், இந்த பகுதிகள் இந்திய எல்லைக்கு உட்பட்டவை என்பதை அரசின் நில ஆவணங்கள் உறுதி செய்கின்றன.கைலாஷ் - மானசரோவர் புனித யாத்திரை மேற்கொள்வதற்கு, சீனா
திட்டவட்டம்! காலாபானி,லிபுலெக் இந்தியாவின் பகுதி தான்: நில ஆவணங்களை உறுதி செய்து அறிவிப்பு

பித்ரோகர்ஹ்:'உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள காலாபானி, லிபுலெக் ஆகியவை தன் எல்லைக்குட்பட்டது' என, அண்டை நாடான நேபாளம் கூறி வருகிறது. இதற்காக தேசிய வரைபடத்தில் திருத்தம் செய்யும் மசோதாவும் பார்லிமென்டில் நிறைவேறியுள்ளது. ஆனால், இந்த பகுதிகள் இந்திய எல்லைக்கு உட்பட்டவை என்பதை அரசின் நில ஆவணங்கள் உறுதி செய்கின்றன.

கைலாஷ் - மானசரோவர் புனித யாத்திரை மேற்கொள்வதற்கு, சீனா வழியாக செல்ல வேண்டியுள்ளது. இதற்கு அதிக பயண நேரம், செலவு ஆகிறது. இதை குறைக்கும் வகையில், லிபுலெக் வழியாக, நம் எல்லையில், புதிய சாலை அமைக்கப்பட்டது.மேலும், எல்லைப் பகுதிக்கு ராணுவம் விரைந்து செல்லும் வகையில், அப்பகுதிகளில் பல்வேறு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.அதையடுத்து, நம் அண்டை நாடான சீனா, லடாக்கில் படைகளை நிறுத்தி பிரச்னை ஏற்படுத்த முயன்றது. நம் படைகளும் விரைந்து சென்று, சீனாவுக்கு பதிலடி கொடுத்தது.இந்த நிலையில், உத்தரகண்ட் மாநிலத்தில், நம் எல்லையில் உள்ள, காலாபானி, லிபுலெக் ஆகியவை, தன் எல்லைக்குட்பட்டவை என, மற்றொரு அண்டை நாடான, நேபாளம் திடீரென உரிமை கொண்டாடியது.இந்தப் பகுதிகளை உள்ளடக்கி, தேசிய வரைபடத்தை திருத்த, நேபாளம் முன்வந்துள்ளது. இதற்காக அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யும் மசோதா, அந்த நாட்டு பார்லிமென்டின் கீழ் சபையில் நிறைவேறியுள்ளது.ஆனால், நேபாளத்தின் இந்த நடவடிக்கைக்கு, நம் அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.'லிபுலெக் உள்ளிட்டவை, இந்திய எல்லைக்குட்பட்டவை. திடீர் உரிமை கோரும் நேபாளத்தின் முயற்சியை ஏற்க முடியாது' என, தெள்ளத் தெளிவாக கூறப்பட்டுஉள்ளது.இந்த நிலையில், உத்தரகண்ட் மாநில அரசு அதிகாரிகள் கூறியுள்ளதாவது:அரசின் நில ஆவணங்களின்படி, காலாபானி, லிபுலெக் ஆகியவை, உத்தரகண்ட் மாநிலம் பித்ரோகர்ஹ் மாவட்டம் தர்ச்சுலாவில் உள்ள கர்பியாங்க் மற்றும் குஞ்சி ஆகிய இரண்டு கிராம மக்களுக்கு சொந்தமானவை. காலாபானி மற்றும் நபிதாங்க்கில் உள்ள, 190 ஏக்கருக்கு மேற்பட்ட நிலம், கர்பியாங்க் கிராமத்தைச் சேர்ந்த மக்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.லிபுலெக் பாஸ் என்ற சாலை, குஞ்சி கிராம மக்களின் பொது பயன்பாட்டுக்கான நிலமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.கடந்த, 1962ல் நடந்த, இந்தியா - சீனா போருக்கு முன், கர்பியாங்க் கிராமத்தில் விவசாயம் நடந்து வந்தது. போருக்குப் பிறகு, லிபுலெக் வழியாக, இந்தியா - சீனா வர்த்தகம் மற்றும் காலாபானியில் விவசாயம் செய்வது நிறுத்தப்பட்டது.காலாபானிக்கு அருகில் உள்ள, மவுன்ட் அபிக்கு அருகில் உள்ள நிலங்களும், கர்பியாங்க் கிராமத்தைச் சேர்ந்ததாக இருந்தது.ஆனால், 1816ல் பிரிட்டிஷ் அரசும், நேபாளமும் செய்து கொண்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, அந்தப் பகுதியை பயன்படுத்துவதை மக்கள் நிறுத்தினர். நேபாளம் மற்றும் இந்தியாவின் எல்லையாக, காளி நதியை மக்கள் ஏற்றனர்.உத்தரகண்ட் அரசின் நில ஆவணங்களின்படி, நீண்ட காலமாக, இந்தப் பகுதிகள், நம் எல்லைக்குள் உள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.மேல்சபை ஒப்புதல்காலாபானி, லிபுலெக் ஆகிய பகுதிகளை உள்ளடக்கி தேசிய வரைபடத்தை திருத்தி அமைக்கும் வகையில், அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதா, நேபாள பார்லிமென்டின் பிரதிநிதிகள் சபையில் ஏற்கனவே நிறைவேறியது. மொத்தமுள்ள, 275 உறுப்பினர்களில், சபையில் ஆஜரான, 258 பேரும் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்திருந்தனர்.இந்த நிலையில், அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யும் மசோதாவை தாக்கல் செய்வதற்கு, அந்த நாட்டு பார்லி.,யின் மேல்சபையான, நேஷனல் அசெம்ப்ளி, நேற்று ஒப்புதல் அளித்தது.மேல்சபையின் சட்டவிதிகளின்படி, கீழ் சபையில் நிறைவேறிய மசோதா மீது, ஏதாவது திருத்தங்கள் செய்வதற்கு, மேல்சபைக்கு, 72 மணி நேரம் அவகாசம் அளிக்க வேண்டும். மேல்சபையில், ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சிக்கு, மூன்றில் இரண்டு பங்கு பலம் உள்ளது. அதனால், இந்த மசோதா நிறைவேறுவது உறுதி என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரச்னைக்கு தீர்வு என்ன?இந்தியா - நேபாளம் இடையே எல்லைப் பிரச்னை ஏற்பட்டுள்ளது குறித்து, வெளியுறவுத் துறை நிபுணர்கள் கூறியதாவது:எல்லைப் பிரச்னை தீவிரமடைந்ததற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. முதலில், இந்தப் பிரச்னை குறித்து பேசுவதற்கு, நேபாளம், கடந்தாண்டு நவம்பரில் அழைப்பு விடுத்தது. ஆனால், சில காரணங்களால் அது தள்ளி போனது. பின், 'கொரோனா பிரச்னை முடிந்த பிறகு பேசலாம்' என, நம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு இழுத்தடிப்பு செய்தது, நேபாளத்துக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கலாம்.இந்தியாவின் தயவு குறைந்த நிலையில், நேபாளத்துக்கு சீனா தானாக முன்வந்து பல உதவி களை செய்யத் துவங்கியது. நேபாளத்தில் சாலைகள் அமைப்பது, ரயில் பாதைகள் அமைப்பது என, சீனா மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்துடன், நேபாளத்தை இணைக்க பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. தற்போதைய பிரச்னையை, சீனா தூண்டியிருக்க வாய்ப்பில்லை. ஆனால், சீனாவின் ஆதரவு உள்ளது, நேபாளத்துக்கு சாதகம்.ஒரு பக்கம் சீனா, மற்றொரு பக்கம் பாகிஸ்தானுடன் எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது. நேபாளத்துடன், திறந்த எல்லையை பகிர்ந்து வருகிறோம். இரு தரப்பு மக்களும் பரஸ்பரம் சென்று வர எந்தத் தடையும் இல்லாமல் இருந்தது. அதனால், நேபாளத்துடனும் எல்லைப் பிரச்னை உருவாகாமல் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.நேபாள பிரதமர், கே.பி. சர்மா ஒலிக்கு, உள்நாட்டு அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது தான், தற்போதைய பிரச்னைக்கு காரணம்.கொரோனா விவகாரத்தையும், பொருளாதார பிரச்னைகளையும் அவர் சரியாக கையாள வில்லை என்ற அதிருப்தி அந்த நாட்டில் உள்ளது. கம்யூனிஸ்ட் கட்சியிலும் தலைமையை மாற்றுவதற்கான பேச்சு துவங்கியது. அதனால், தன்னுடைய நிலையை உறுதி செய்து கொள்வதற்காக, எல்லைப் பிரச்னை அவர் எடுத்துக் கொண்டார். அதில், வெற்றியும் பெற்றுள்ளார்.உடனடியாக, நேபாளத்துடன் பேசியாக வேண்டிய நிலை, நமக்கு ஏற்பட்டுள்ளது.ஆனால், பார்லியில் மசோதா நிறைவேற்றும் வரை சென்றுள்ளதால், நேபாளம் உடனடியாக இறங்கி வருமா என்பது சந்தேகமே. எல்லை தொடர்பாக சிறிய பிரச்னையாக இருந்தது, தற்போது பூதாகாரமாகி விட்டது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivagiri - chennai,இந்தியா
15-ஜூன்-202016:43:34 IST Report Abuse
Sivagiri காங்கிரஸ்+கம்யூனிஸ்ட்+திமுக - கூட்டணி என்றாலே ஆக்கிரமிப்பு + அடாவடி + தேசதுரோகம்.
Rate this:
Cancel
Srinivas.... - Chennai,இந்தியா
15-ஜூன்-202012:47:20 IST Report Abuse
Srinivas.... கூர்க்கா சப்பைமூக்கனின் பிடியில் விழுந்துவிட்டான். அவனும் கம்மி...இவனும் கம்மி...டிசைன் இரண்டும் ஒத்துப்போகும். கூர்க்கா சொந்தமாக சிந்திக்கும் திறமை இல்லாதவன். நயவஞ்சக சூழ்ச்சி செய்து வலையில் விழவைத்து தனக்கு அடிமையாக ஆகிவிட்டான். இனி கூர்க்கா அவன் பிடியிலிருந்து வெளிவரமுடியாது.
Rate this:
Cancel
Swamy - pondicherry,இந்தியா
15-ஜூன்-202011:39:19 IST Report Abuse
Swamy காத்மாண்டு நமது எல்லைக்குள் வருகிறது என்று , ஒரு அரசனை வெளியிடுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X