அரசியல் செய்தி

தமிழ்நாடு

பிரேத பரிசோதனைக்கு ரூ.2,000 லஞ்சம் என புகார்

Added : ஜூன் 14, 2020
Share
Advertisement

பெரம்பலுார்; பிரேத பரிசோதனை செய்ய, பெரம்பலுார் அரசு மருத்துவமனையில், 2,000 ரூபாய் லஞ்சம் வாங்குவதாக, மக்கள் நீதி மையம் கட்சி பிரமுகர் குற்றம் சாட்டியுள்ளார்.

பெரம்பலுாரைச் சேர்ந்தவர் சாதிக்பாஷா. மக்கள் நீதி மையம் கட்சி நிர்வாகி. இவர், சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள 'வீடியோ'வில் கூறியிருப்பதாவது: பெரம்பலுார், தம்மை கிராமம் அருகே, 4ம் தேதி நடந்த விபத்தில், என் தங்கை மகள் பலியானார். இவரது உடல், பெரம்பலுார் அரசு மருத்துவமனையில், 5ம் தேதி பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.அங்கு பணியில் இருந்தவர், பிரேத பரிசோதனை செய்ய, என்னிடம், 2,000 ரூபாய் லஞ்சம் வாங்கினார். என்னிடம் இருந்தது; கொடுத்தேன்.

ஏழைகளால் எப்படி கொடுக்க முடியும்?பணமில்லை என்பதற்காகவே, ஏழைகள் அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். இதேபோல, உடலை எடுத்துச் செல்ல அமரர் ஊர்தி இருந்தும், இல்லை என தெரிவித்தனர்.என் நண்பர், திருச்சி ஐ.ஜி.,க்கு போன் செய்த பின், மூன்று வாகனங்கள் வந்தன. இப்பிரச்னையில், தமிழக அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, வீடியோவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X