பொது செய்தி

தமிழ்நாடு

நோய் எதிர்ப்பு சக்தி தரும் நெல் சாகுபடியை அதிகரிக்க ஏற்பாடு

Added : ஜூன் 14, 2020
Share
Advertisement

சென்னை; நோய் எதிர்ப்பு சக்தி தரும், பாரம்பரிய நெல் சாகுபடியை அதிகரிப்பதற்கான முயற்சிகளை, வேளாண் துறையினர் மேற்கொண்டுள்ளனர்.கொரோனா பாதிப்பை தவிர்க்க, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், உணவு பொருட்களை சாப்பிட வேண்டும் என, மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

தற்போது, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட, டெல்டா மாவட்டங்களில், குறுவை பருவ நெல் சாகுபடி துவங்கியுள்ளது. இம்மாவட்டங்களில், 3.50 லட்சம் ஏக்கரில் சாகுபடிக்கு, அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. கடைமடை பகுதிகளில்உள்ள விவசாயிகள் பலர், பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

பாரம்பரிய நெல் ரகங்களில், நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்துள்ளது. சர்க்கரை நோய் உள்ளிட்டவற்றையும், சில பாரம்பரிய அரிசி ரகங்கள் கட்டுப்படுத்துகின்றன. எனவே, கடைமடை விவசாயிகளிடம், பாரம்பரிய நெல் சாகுபடியை மேற்கொள்ளுமாறு, வேளாண் துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.இது குறித்து, வேளாண் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில், காட்டுயானம், கறுப்பு கவுனி, சிவப்பு கவுனி, அறுவதாம் குறுவை, குள்ளக்கார், கருடன் சம்பா, மாப்பிள்ளை சம்பா, தங்க சம்பா, கிச்சிலி சம்பா, சீரக சம்பா, குழியடிச்சான், குடவாழை, துாயமல்லி உள்ளிட்ட, பாரம்பரிய நெல் ரகங்கள் உள்ளன.

இது போன்ற, பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடியை ஊக்குவிக்க, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இவற்றை சாகுபடி செய்து, அதிக மகசூல் பெறும், மூன்று விவசாயிகளுக்கு, 1 லட்சம் ரூபாய், 75 ஆயிரம் ரூபாய், 50 ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்படுகின்றன. இதற்கு, 'எம்.ஜி.ஆர்., பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருது' என, பெயர் சூட்டப்பட்டு உள்ளது. தேவையை கருத்தில் கொண்டு, இந்த பாரம்பரியநெல் சாகுபடியை ஊக்குவிக்க, டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி, அனைத்து மாவட்டங்களிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X