சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

மாற்றம் வருமா?

Added : ஜூன் 15, 2020
Share
Advertisement
 மாற்றம் வருமா?

'அடடே... இந்த பையன் கில்லாடியாக இருக்கிறாரே... இவருக்கு பிரகாசமான அரசியல் எதிர்காலம் உண்டு' என, காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர், பி.வி.ஸ்ரீனிவாசை பாராட்டுகின்றனர், அரசியல் கட்சியினர்.

ஸ்ரீனிவாஸ், கடந்தாண்டு ஆகஸ்டில், காங்., இளைஞர் அணி தலைவராக நியமிக்கப்பட்டார். கொரோனாவால் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வீடுகளுக்குள் முடங்கிய நிலையில், ஸ்ரீனிவாஸ், துணிச்சலாக வெளியில் வந்து செய்யும் நிவாரண பணிகள், அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளன. டில்லியிலிருந்து பீஹார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு செல்வதற்கு புலம் பெயர் தொழிலாளர்களுக்கு வாகன வசதியை ஏற்படுத்தித் தருவதில் முழு கவனம் செலுத்தினார்.

தற்போது புலம்பெயர் தொழிலாளர் பிரச்னை குறைந்து விட்டதால், டில்லியில் உள்ள சிறு வியாபாரிகள், ஆட்டோ, டாக்சி டிரைவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான நிவாரண பொருட்களை, தானே நேரில் சென்று வழங்கி வருகிறார்; மருத்துவ வசதிகளுக்கும் ஏற்பாடு செய்து தருகிறார். இவரது செயல்பாடுகளைப் பார்த்து, ஆளும் கட்சியான பா.ஜ.,வினரே, 'யார் இந்த பையன்...' என, ஆச்சரியப்படுகின்றனர். காங்., கட்சியினரோ, 'இளம் கன்று பயமறியாதல்லவா... அதனால் தான் இவ்வளவு வேகமாக இருக்கிறார். பதவி, அதிகாரம் எல்லாம் கிடைத்ததும், தலைகீழாக மாறி விடுவார் பாருங்கள்' என்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X