அதிகரிக்கும் அறிகுறியற்ற பரவல் சீனாவில் மேலும் 66 பேர் பாதிப்பு

Added : ஜூன் 15, 2020
Share
Advertisement

பீஜிங்: சீனாவில், நேற்று முன்தினம், மேலும், 66 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அறிகுறிகள் இல்லாமல் நோய் பரவல் அதிகரித்து உள்ளதால், அதிகாரிகள் அச்சம் அடைந்துள்ளனர்.கொரோனா வைரசை, உலகிற்கு அறிமுகம் செய்த அண்டை நாடான சீனாவில், மிகப்பெரிய போராட்டங்களுக்கு மத்தியில், தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

தற்போது, அந்நாட்டில் மீண்டும் வைரசின் ஆதிக்கம் தலைதுாக்கி வருகிறது. அங்கு, நேற்று முன்தினம் மட்டும், 66 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.இதுகுறித்து, சீன தேசிய சுகாதார ஆணையம், நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: நாட்டில், நேற்று முன்தினம், 57 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. அத்துடன், அறிகுறிகள் இல்லாத ஒன்பது பேரும் வைரசால் பாதிக்கப்பட்டது, பரிசோதனையில் உறுதியானது. இதுபோல், அறிகுறிகள் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள, 103 பேர், தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.எவ்வித அறிகுறிகளும் இல்லாமல் பாதிக்கப்பட்டவர்களால், தொற்று வேகமாக பரவும் வாய்ப்புகள், மிக அதிகமாக உள்ளன. தலைநகர் பீஜிங்கில், சில நாட்களில், 46 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது, அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

நாடு முழுதும், இதுவரை பாதிக்கப்பட்ட, 83 ஆயிரத்து, 132 பேரில், 4,634 பேர் இறந்துள்ளனர்; 129 பேர் சிகிச்சை பெறுவதுடன், 78 ஆயிரத்து, 369 பேர் குணமடைந்துள்ளனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.கடந்த சில நாட்களில், பீஜிங்கில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை உயர்வால், போர்க்கால நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளன. இங்குள்ள, ஜின்பாடி மொத்த மார்க்கெட் மூலம் வைரஸ் பரவி இருப்பதால், மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் ஜின்பாடி மட்டுமின்றி, மேலும் ஆறு மார்க்கெட்டுகள் நேற்று முன்தினம் முழுமையாக மூடப்பட்டன; ௧௧ குடியிருப்பு பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X