பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தை தொழிலாளர் பணிக்கு அமர்த்தினால் இரு ஆண்டு சிறை

Added : ஜூன் 15, 2020
Share
Advertisement

குன்னுார்:'நீலகிரியில் குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தினால், இரு ஆண்டு சிறை தண்டனைவிதிக்கப்படும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை யொட்டி,தொழிலாளர் நலத்துறை சார்பில், மாவட்டத்தில் உள்ள, 37 கடைகள் மற்றும் உணவகங்களில், ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து குழந்தை தொழிலாளர் தடுப்பு வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.அதில், 'குழந்தை தொழிலாளர் சட்டப்படி, 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை பணியில் அமர்த்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. சட்டத்தை மீறி வேலை கொடுக்கும் நிறுவன உரிமையாளருக்கு, 50 ஆயிரம் அபராதம், 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்,' என, தெரிவிக்கப்பட்டது.தொழிலாளர் உதவி ஆணையர் சதீஷ்குமார், உதவி ஆய்வாளர் வசந்தா, முத்திரை ஆய்வாளர் அனந்தகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.முன்னதாக, ஊட்டியில் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, குன்னுார் தொழிலாளர் இணை ஆணையர் தங்கவேல் தலைமையில், குழந்தை தொழிலாளர் தடுப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X