பொது செய்தி

தமிழ்நாடு

உண்டியல் சேமிப்பு பணம் ஏழைகளுக்கு நிவாரணம்

Added : ஜூன் 15, 2020
Share
Advertisement

ஊட்டி:ஊட்டியை சேர்ந்த ஏழை சிறுமி ஒருவர், தான் சேமித்து வைத்த பணத்தில், 15 ஏழைகளுக்கு நிவாரணம் வழங்கி அனைவரின் பாராட்டை பெற்றார்.ஊட்டி பழைய அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் சமந்தா,9. இவர், தான் உண்டியலில் சேமித்து வைத்த, 2,500 ரூபாய் பணத்தில், 15 குடும்பங்களுக்கு, 10 வகையான காய்கறிகளை வழங்கினார். இதனை வாங்கிய மக்கள், சிறுமியை வாழ்த்தி சென்றனர்.அவரின் தாய் கீதா கூறுகையில்,'' நாங்கள் ஏழையாக இருந்தாலும், சிறு வயது முதலே, சமந்தாவுக்கு பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை உள்ளது. தான் சேர்த்து வைத்த பணத்தில், இப்பகுதியில் அவதிப்படும் மக்களுக்கு உதவ வேண்டும் என எங்களிடம் தெரிவித்தார். ஏற்பாடுகளை செய்தோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X