பொது செய்தி

தமிழ்நாடு

கல்வி உதவித் தொகையில் நிவாரணம் வழங்கல்

Added : ஜூன் 15, 2020
Share
Advertisement

செஞ்சி : செஞ்சி அருகே கல்லுாரி மாணவர் தனக்கு வந்த கல்வி உதவித் தொகையைக் கொண்டு ஊராட்சி துாய்மை பணியாளர்களுக்கு உதவி பொருட்களை வழங்கினார்.

செஞ்சி அடுத்த கணக்கன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் மகன் பிரவீன்ராஜ், 21; கோயமுத்துார் அடுத்த ஈச்சனாரியில் தனியார் கல்லுாரியில் எம்.எஸ்சி., இயற்பியல் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது தந்தை சேகர் ராணுவத்தில் கேப்டனாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தற்போது கண்டாச்சிபுரம் போலீசில் கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.மாணவர் பிரவீன்ராஜ் கல்லுாரியில் என்.சி.சி.,யில் உள்ளார்.

இந்த ஆண்டு தனக்கு வந்த 10 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகையைக் கொண்டு கணக்கன்குப்பம் ஊராட்சியைச் சேர்ந்த துாய்மைப் பணியாளர்கள், துாய்மைக் காவலர்கள், டேங்க் ஆப்ரோட்டர்கள், ஊராட்சி செயலர் ஆகியோருக்கு தலா 5 கிலோ அரிசி, காய்கறி, முகக்கவசம், பிளாஸ்டிக் கூடை போன்றவற்றை வழங்கினார். முன்னாள் ஊராட்சி தலைவர் முருகன் உடனிருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X