சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புறவழிச்சாலையில் எள் பதர்கள் எரிப்பு

Added : ஜூன் 15, 2020
Share
Advertisement

விருத்தாசலம் : விருத்தாசலம் புறவழிச்சாலையில் மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்திய எள் கழிவுகளை, தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி அணைத்தனர்.

விருத்தாசலம் விருத்தாம்பிகை ஐ.டி.ஐ.,யிலிருந்து மணவாளநல்லுார் கிராம பிரிவு சாலை வரை, புறவழிச்சாலை செல்கிறது. கடலுார், சிதம்பரம், சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலுார், கும்பகோணம் மார்க்கமாக செல்லும் கனரக மற்றும் நெடுந்துார வாகனங்கள் செல்கின்றன.இதில், சுற்றியுள்ள கிராமங்களில் அறுவடை செய்யப்படும் நெல், எள், உளுந்து உள்ளிட்ட வேளாண் விளைபொருட்களை விவசாயிகள் உலர்த்துகின்றனர். பின்னர், அதன் கழிவுகளை சாலையோரம் திறந்தவெளியில் வீசிவிட்டு செல்கின்றனர்.இதனால் புறவழிச்சாலையோரம் முழுவதும் விளைபொருட்களின் கழிவுகள் தேங்கி, காற்று வீசும்போது பறந்து வந்து வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கின்றன.

மேலும், மர்ம நபர்கள் கழிவுகளை தீயிட்டு எரித்து செல்கின்றனர். அதன்படி, நேற்று பகல் 11:00 மணியளவில் புறவழிச்சாலையோரம் எள் பதர்கள் மளமளவென தீயில் கருகின.அப்போது புகை மூட்டம் உருவாகி, சாலையை மறைக்கும் அளவுக்கு பரவியதால் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டது. தகவலறிந்த விருத்தாசலம் தீயணைப்பு நிலைய அலுவலர் மணி தலைமையிலான வீரர்கள் சென்று, ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.மேலும், சாலையோரம் வைக்கப்பட்ட மர கன்றுகள் தீயில் கருகி, நாசமாகின.

எனவே, சாலையில் விளை பொருட்கள் உலர்த்திவிட்டு, அதன் கழிவுகளை விட்டுச் செல்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X