பொது செய்தி

தமிழ்நாடு

மக்காச்சோளத்தில் படைப்புழுவை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு வேளாண் துறை ஆலோசனை

Added : ஜூன் 15, 2020
Share
Advertisement

கடலுார், : மக்காசோளத்தில் படைப்புழுவை கட்டுப்படுத்த வேளாண் துறை விவசாயிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை கூறியுள்ளது.

மாவட்ட வேளாண் இணை இயக்குனர் முருகன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:கடலுார் மாவட்டத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்யும் விவசாயிகள், அதில், அமெரிக்கன் படைப்புழு வராமல் தடுக்கவும், வந்தபின் கட்டுப்படுத்தி பாதுகாக்கவும், கீழ்கண்ட ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை கடைப்பிடிக்க வேளாண் துறை கேட்டுக்கொண்டுள்ளது.கோடை மழையினை பயன்படுத்தி ஜூன் மாதத்தில் உழவு செய்வதன் முலம் மண்ணில் உள்ள புழுக்கள் வெளியே கொண்டு வரப்பட்டு, பறவைகள் மூலம் அழிக்கப்படுகிறது.

அனைத்து விவசாயிகளும் ஒரே சமயத்தில் விதைத்தல் மற்றும் பயிர் இடைவெளி பராமரித்தல், விதைப்பு போன்ற பணிகளை மேற்கொள்ள வெண்டும்.பல்வேறு நிலைகளில் விதைப்பு செய்தால் மக்காச் சோளப் பயிர்களில் படைப்புழு அதிக அளவில் தாக்கும். அடுத்தடுத்து விதைக்கப்படும் பயிர்களில் தாவி தொடர் சேதத்தை ஏற்படுத்தும். எனவே, சீரான விதைப்பு செய்ய அறிவுறுத்தபடுகிறது.பயிர் சுழற்சி முறையைப் பின்பற்ற வேண்டும். வேப்பம் புண்ணாக்கு ஏக்கருக்கு 100 கிலொ கடைசி உழவின் பொது இடுவதால் மண்ணில் உள்ள கூட்டுபுழுக்களை அழிக்கலாம்.

மானாவாரி மக்காச்சோளத்திற்கு வரிசைக்கு வரிசை 15 செ.மீ மற்றும் 20செ.மீ., இடைவெளி விட்டு பயிரிட வெண்டும்.நுண்ணுயிர் பூச்சிக்கொல்லியான பெவேரியா பேசியானா 1 கிலொ விதைக்கு 10 கிராம் வீதம் கலந்து விதை நேர்த்தி செய்வதன் மூலம் பூச்சி தாக்குதலை குறைக்கலாம். அல்லது ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் தயாமீதாக்சைம் 30 சதவீதம் கலந்து விதைத்தால் புழுக்களை அதன் இளம்பருவத்திலேயே கட்டுப்படுத்தி தாக்குதல் 15-20 நாட்கள் வரை பரவுதலை தடுக்க இயலும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X