சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சென்னையில் கொரோனா நோயாளிகள் 277 பேர் மாயம்

Updated : ஜூன் 15, 2020 | Added : ஜூன் 15, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
chennai, corona patients, chennai news, coronavirus, covid 19, coronavirus tamil nadu, சென்னை, கொரோனா

சென்னை: சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மாயமான 277 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னையில் அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. பரிசோதனை செய்ய வருவோர் பலர் தங்களுடைய பெயர் முகவரி தொலைபேசி எண்களை போலியாக அளிக்கின்றனர். அதேபோல அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் பலரும் தவறான முகவரியை அளித்து சிகிச்சை பெறுகின்றனர்.

அதில் சிலர் சிகிச்சையை பாதியில் கைவிட்டு தப்பி சென்றனர். அதன்படி சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் மட்டும் 20க்கும் மேற்பட்டோர் தப்பிச் சென்றுள்ளனர். அதேபோல் தனியார் ஆய்வகங்களில் பலர் போலியான முகவரி, தொலைபேசி எண் அளித்து பரிசோதனை செய்துள்ளனர். அவ்வாறு பரிசோதனை செய்த பலருக்கு தொற்று உறுதியானது.


latest tamil news


அந்த முகவரிக்கு சென்று மாநகராட்சி அதிகாரிகள் விசாரித்தபோது போலி என தெரிய வந்துள்ளது. ஆபத்தில்லாத நோயாளிகள் வீட்டில் தனிமைப் படுத்தப்பட்ட நிலையில் அவர்களில் பலர் போலி முகவரி அளித்துள்ளனர். இதுபோன்று சென்னை மாநகராட்சி முழுவதும் 277 பேர் மாயமாகி உள்ளனர்.

இதையடுத்து பரிசோதனை செய்ய வருபவர்கள் அனைவரும் 'ஆதார்' எண் அளிக்க வேண்டும் என மாநகராட்சி அறிவித்தது. அத்துடன் மாயமான 277 பேரை கண்டுபிடிக்கும்படி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.சென்னை போலீசார் 'சைபர் கிரைம்' பிரிவு உதவியுடன் தேடலில் இறங்கி உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - Paris,பிரான்ஸ்
15-ஜூன்-202015:32:47 IST Report Abuse
Baskar ஸ்டாலினிடம் சொல்லுங்கள் அவரிடம் என்னவோ ஆதாரம் இருக்கிறதாம். உடனே கண்டு பிடித்து கொடுப்பர்.
Rate this:
Cancel
moorthy - CHENNAI,இந்தியா
15-ஜூன்-202015:28:05 IST Report Abuse
moorthy மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இருக்கும் பொது அரசை எப்படி குறை கூற முடியும்...... ஓவஒருவரையும் கயிறு கட்டி வைக்க முடியுமா என்ன..... மக்கள் மீது தான் தவறு இருக்கிறது.
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
15-ஜூன்-202012:35:19 IST Report Abuse
Visu Iyer ஆதார் இருந்தால் தான் சிகிச்சை என்றால் அதுவரை சிகிச்சை அல்லது பரிசோதனை கிடையாதா..? ஆதார் இருந்தாலும் முகவரி மாறி இருந்தால்.. அதை கண்டுபிடிப்பது எப்படி சாத்தியமாகும்.. ஆதாரும் இவருடையது தானா அது உண்மை தானா என அறிவது எப்படி... ஆக.. மக்கள் உண்மையை சொல்ல வில்லை என்றால்.. தவறு.. அந்த பக்கம் தானே இருக்க முடியும்.. மக்கள் பக்கம் தவறு என சொல்வது சரியா..?
Rate this:
g g - ,
15-ஜூன்-202015:55:56 IST Report Abuse
g g makkal seiyavadhu thavara nu kekara. poli address kuduthu treatment paathurukkanga.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X