இந்தியா

கொரோனா தொற்று 194 ஆக உயர்வு

Added : ஜூன் 15, 2020
Share
Advertisement

புதுச்சேரி : புதுச்சேரியில் கொரோனா தொற்று பாதித்தோரின் எண் ணிக்கை 194 ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரியில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றுமுன்தினம் வரை 176 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். மேலும், அரும்பார்த்தபுரம், முத்தியால்பேட்டை, முதலியார்பேட்டை, பீமன் நகரை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.புதிய தொற்று இந்நிலையில் நேற்று புதிதாக 18 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது பரிசோதனையில் உறுதி ஆனது. இதனால் மாநிலத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 194 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக பாதிக்கப்பட்டுள்ள 18 பேரில் 13 பேர் கதிர்காமம் கோவிட் மருத்துவமனையிலும், 3 பேர் ஜிப்மரிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாகியில் ஒருவரும், காரைக்காலை சேர்ந்த ஒருவர் மகாராஷ்டிராவிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.டிஸ்சார்ஜ்தொற்றினால் பாதிக்கப்பட்ட 194 பேரில் 91 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டனர். 99 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.புதுச்சேரி பிராந்தியத்தில், கதிர்காமம் கோவிட் மருத்துவமனையில் 61 பேரும், ஜிப்மரில் 30 பேரும், புதுச்சேரிக்கு வெளியே இரண்டு பேர் என 93 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் காரைக்காலில் 2 பேரும், மாகியில் 4 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

காத்திருப்புஇதுவரை புதுச்சேரியில் 10,008 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 9,636 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 183பேருக்கு பரிசோதனை முடிவு வரவில்லை.ஆண்களே அதிகம் மாநிலத்தில் கொரானாவில் பெண்களை விட ஆண்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் கொரோனாவில் பாதிக்கப்பட்ட 194 பேரில் 131 பேர் ஆண்களாவர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X