பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டட பணி தீவிரம்

Added : ஜூன் 15, 2020
Share
Advertisement

ஓமலூர்: அரசு மருத்துவமனை, கூடுதல் கட்டடம் கட்டும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது. ஓமலூர் அரசு மருத்துவமனையில், நவீன வசதிகளுடன், கூடுதல் கட்டடம் தேவை என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனால், 2018, செப்., 10ல், 5 கோடியே, 16 லட்சம் ரூபாய் மதிப்பில், தரைத்தளத்தில் வரவேற்பு, பிரசவ வார்டு, பெண்கள், மின்சாரம், மருந்து, செவிலியர், டாக்டர் அறைகள்; முதல் தளத்தில், அறுவை அரங்கம், முதல்வர் காப்பீடு பிரிவு; இரண்டாம் தளத்தில், ஆண்கள், பெண்கள் தனித்தனி பிரிவு, அனைத்து தளங்களில் கழிப்பறையுடன் கூடிய கட்டடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. அதே ஆண்டு, டிசம்பரில், முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். அதற்காக, ஆங்கிலேயர் காலத்தில் செயல்பட்ட பழமையானவை உள்பட பல கட்டங்கள் இடிக்கப்பட்டன. 2019 பிப்ரவரியில் கட்டுமானப் பணி தொடங்கியது. இரு மாடி கட்டப்பட்ட நிலையில், 'கொரோனா' பரவலை தடுக்க, இரு மாதமாக பணி நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது கட்டுமானப் பணிக்கு தளர்வால், சில நாளாக கூடுதல் பணியாளர்களுடன், இறுதிக்கட்ட பணி நடந்து வருகிறது. ஒரு மாதத்தில் பணி முடித்து, கட்டடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X