சம்பவம் செய்தி

தமிழ்நாடு

5 ஆண்டு காதலித்தும் திருமணம் நடக்காத வேதனை: காதலன், காதலி அடுத்தடுத்து தற்கொலையால் 'பகீர்'

Added : ஜூன் 15, 2020
Share
Advertisement

மொடக்குறிச்சி: கொடுமுடி அருகே, திருமணத்துக்கு ஏற்பாடு செய்த நிலையில், மாயமான காதலன் தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்த காதலியும் தற்கொலை செய்து கொண்டதால், இருவரின் உறவினர்களும், பலத்த அதிர்ச்சி அடைந்தனர்.
கொடுமுடி, தாமரைப்பாளையம் அருகேயுள்ள நடுப்பாளையம், பஜனை மடத்து வீதியை சேர்ந்தவர் சண்முகம், 49, கூலி தொழிலாளி. இவரின் மகள் கிருத்திகா, 25, பி.ஏ., பட்டதாரி. ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் உதவியாளராக பணிபுரிந்தார். அதே பகுதியிலுள்ள வடக்குப்புதுப்பாளையம், கம்பங்காட்டுகளத்தை சேர்ந்த பழனிசாமி மகன் கேசவன், 28; கோவை தனியார் மருத்துவமனையில் பிஸியோதெரபிஸ்ட்டாக பணிபுரிந்தார். இருவரும் ஐந்தாண்டாக காதலித்தனர். திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, பெற்றோர்களிடம் தங்கள் காதலை, கடந்த மாதம் தெரிவித்தனர். கிருத்திகா வேறு தரப்பை சேர்ந்தவர் என்பதால், கேசவனின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கிருத்திகாவின் பெற்றோர் சம்மதத்துடன், கடந்த, 3ல் கிளாம்பாடியில் திருமணம் நடத்த ஏற்பாடு நடந்தது. கடந்த, 2ம் தேதி மாலை, வெளியில் சென்ற கேசவன், மறுநாள் வரவில்லை. திருமணம் நடக்காததால், கிருத்திகா விரக்தியடைந்தார். நேற்று முன் தினம் மாலை, கோவையில் கேசவன் தற்கொலை செய்து கொண்டதாக, தகவல் கிடைத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கிருத்திகாவை, உறவினர்கள் ஆறுதல்படுத்தி தேற்றினர். அன்று மாலையே, பெற்றோர் வெளியில் சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த கிருத்திகா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரத்தில் வீடு திரும்பிய பெற்றோர், மகளின் சடலத்தை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து மலையம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர். திருமணம் நடக்காத ஏக்கத்தில், காதலன், காதலி அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டது, நடுப்பாளையம், வடக்கு புதுப்பாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X