சிதிலமடைந்த தண்ணீர்தொட்டி; குடிநீரை விலைக்கு வாங்கும் மக்கள்

Added : ஜூன் 15, 2020
Share
Advertisement

மல்லசமுத்திரம்: கரட்டுபாளையத்தில், சிதிலமடைந்து காணப்படும் தண்ணீர் தொட்டியால், பகுதியினர் தண்ணீரின்றி அவஸ்தைப்படுகின்றனர்.
மல்லசமுத்திரம் ஒன்றியம், சர்கார்மாமுண்டி பஞ்சாயத்திற்குட்பட்ட, கரட்டுபாளையம் அருந்ததியர் தெருவில், 136 வீடுகளில், 300க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், 2005ம் ஆண்டில், 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவில் தண்ணீர்தொட்டி கட்டப்பட்டது. 2012-13ம் ஆண்டில் புனரமைப்பு செய்யபட்டது. கடந்த சில ஆண்டுகளாக மழை, வெப்பம் போன்றவைகளால், தொட்டி சிதிலமடைந்து விட்டது. இதன் தன்மையை உணர்ந்த பஞ்சாயத்து அதிகாரிகள், ஓராண்டுக்கு முன்னரே தொட்டியில் தண்ணீர் ஏற்றுவதை தவிர்த்துவிட்டனர். இதனால், பகுதியினர் குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்காமல் அவதிக்குள்ளாகின்றனர். வேறுவழியின்றி, குடிநீரை விலைக்கு வாங்கி குடித்து வருகின்றனர். இப்பகுதியினர் பெரும்பாலும் கூலிதொழிலாளர்கள் என்பதால், குடிநீரை விலைக்கு வாங்கி குடிக்க மிகவும் சிரமபடுகின்றனர். எனவே, தொட்டியை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X