பழைய காவேரி பாலம் சேதம் ஏற்படாமல் இருக்க இரும்பு தடுப்பு அமைக்க வேண்டும்| Dinamalar

பழைய காவேரி பாலம் சேதம் ஏற்படாமல் இருக்க இரும்பு தடுப்பு அமைக்க வேண்டும்

Added : ஜூன் 15, 2020
Share

குமாரபாளையம்: குமாரபாளையம், பழைய காவேரி பாலம் சேதமாகாமலிருக்க, இரும்பு தடுப்புகள் அமைக்க வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, குமாரபாளையத்தில் பழைய காவேரி பாலம், காவேரி நகர் புதிய பாலம் ஆகிய இரு பாலங்கள் அடைக்கப்பட்டு, சில நாட்கள் முன்பு திறக்கப்பட்டது. பழைய காவேரி பாலத்தில் சாலை மிகவும் மோசமாக இருத்ததால், புதிய தார்ச்சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததின் பேரில், நெடுச்சாலைத்துறையினர் புதிய சாலை அமைத்தனர். சாலை அமைக்கும் பணிக்காக, பலமிழந்த இந்த பாலத்தின் நுழைவுப்பகுதியில் கனரக வாகனங்கள் செல்லாதிருக்க, அமைக்கப்பட்ட இரும்பு தடுப்பு அகற்றப்பட்டது. நீண்ட காலம் இந்த பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உழைத்திட, பாலத்தின் முன்பு இரும்பு தடுப்பு அமைக்க வேண்டும், என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X