பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை உள்பட 4 மாவட்டத்தில் 12 நாள் முழு ஊரடங்கு

Updated : ஜூன் 15, 2020 | Added : ஜூன் 15, 2020 | கருத்துகள் (62)
Share
Advertisement
சென்னை: கொரோனா பரவலை கட்டுப்படுத்த சென்னை,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் வரும் 19ம் தேதி முதல் ஜூன் 30 வரை 12 நாட்களுக்கு முழுஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.மீண்டும் முழு ஊரடங்குஇது தொடர்பாக முதல்வர் இ.பி.எஸ்., வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு ஜூன் 19 நள்ளிரவு 12 மணி முதல்
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், முழு ஊரடங்கு, தமிழக அரசு, அமல்

சென்னை: கொரோனா பரவலை கட்டுப்படுத்த சென்னை,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் வரும் 19ம் தேதி முதல் ஜூன் 30 வரை 12 நாட்களுக்கு முழுஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


மீண்டும் முழு ஊரடங்கு

இது தொடர்பாக முதல்வர் இ.பி.எஸ்., வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு ஜூன் 19 நள்ளிரவு 12 மணி முதல் ஜூன் 30 இரவு 12 மணி வரை 12 நாட்களுக்கு
*பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும்,
*திருவள்ளூர் மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் , திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகளிலும் மற்றும் பூவிருந்தவல்லி, ஈக்காடு மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும்

*செங்கல்பட்டு மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் நகராட்சிகளிலும், நந்திவரம்- கூடுவாஞ்சேரி பேரூராட்சியிலும் மற்றும் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும்

* காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்டப்பட்ட பகுதிகளில் மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.


தளர்வுகள்

அதே நேரத்தில் கீழ்கண்ட அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் தளர்வு அளிக்கப்படுகிறது.

1. மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக்கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள்

2. வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படாது. எனினும் அவசர மருத்துவ தேவைகளுக்கு மட்டும் வாடகை, ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படும்.

3. மாநில அரசு துறைகள் 33 சதவீத பணியாளர்களுடன் செயல்படும். அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் தலைமை செயலகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, காவல்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மின்சாரத்துறை, கருவூலத்துறை, ஆவின் , உள்ளாட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தொழிலாளர் நலத்துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை போன்ற துறைகள் தேவைப்படும் பணியாளர்களுடன் செயல்படும்

4. மத்திய அரசு அலுவலகங்கள் 33 சதவீத பணியாளர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படுவார்கள். அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் மத்திய அரசு அலுவலகங்கள் தேவையான பணியாளர்களுடன் பணிபுரிய அனுமதிக்கப்படும்.

5. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பணியாளர்கள் பணிக்கு வர தேவையில்லை.

6. வங்கிகள் 33 சதவீத பணியாளர்களுடன் 29 மற்றும் 30 தேதிகளில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். ஏடிஎம் இயந்திரங்கள் மற்றும் அது சம்பந்தப்பட்ட வங்கிப்பணி மற்றும் போக்குவரத்து வழக்கம் போல் செயல்படும்

7. பொது விநியோக கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும். பொது விநியோக திட்டத்திற்கு தொடர்புடைய இந்திய உணவுக்கழகம் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகள் மற்றும் அதைசார்ந்த போக்குவரத்து அனுமதிக்கப்படும்.

8. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் செயல்படும் பொது விநியோக கடைகள் இயங்காது. அந்த பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு அரசு அறிவித்த நிவாரணங்கள், அக்கடை பணியாளர்களால் நேரடியாக வழங்கப்படும்.


latest tamil news
9. காய்கறிகடைகள், மளிகைக்கடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகள் உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு சமூக இடைவெளியுடன் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். அதேபோல், காய்கறி,பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்ய நடமாடும் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணிவரை செயல்பட அனுமதிக்கப்படும். அத்தியாவசிய பொருட்களை வாங்கும் பொது மக்கள், வாகனங்களை பயன்படுத்தாமல் தாங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே அதாவது 2 கி.மீ., தொலைவில் மட்டும் நடந்து சென்று பொருட்களை வாங்க அறிவுறுத்தப்படுகின்றனர்.

10. உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சல் மட்டும் அனுமதிக்கப்படும். தேநீர் கடைகள் இயங்க அனுமதியில்லை.

11. முதியோர், மாற்றுத்திறனாளி, ஆதரவற்றோர் இல்லங்கள், வீட்டில் தங்கியிருக்கும் முதியோர்/நோயாளிகளுக்கு உதவி புரிவோர் ஆகியோருக்கு அனுமதி வழங்கப்படும்.

12. அம்மா உணவகங்கள் மற்றும் ஆதரவற்றோருக்காக அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் சமையல் கூடங்கள் தொடர்ந்து செயல்படும்.

13. பொது மக்களுக்கு உதவி செய்யும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் சம்பந்தப்பட்ட அரசு அலுவலரின் உரிய அனுமதியோடு இயங்கலாம்

14. அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள்

15. நீதித்துறை மற்றும் நீதிமன்றங்கள்

16. மேற்கண்ட 12 நாட்களுக்கு பணியிட வளாகத்திலேயே தங்கியிருந்துபணிபுரியும் தொழிலாளர்களை கொண்ட கட்டுமான பணி அனுமதிக்கப்படும்.

17. சரக்கு போக்குவரத்திற்கும், அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கும் தடை கிடையாது.

18. சென்னையில் இருந்து திருமணம், மருத்துவம், இறப்பு ஆகிய காரணங்களுக்காக பிற மாவட்டங்களுக்கு செல்ல தகுந்த ஆதாரங்களை சமர்ப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் இ-பாஸ் அனுமதி வழங்கப்படும்.

19. வெளி மாநிலத்தில் இருந்து வருகின்ற ரயில்களுக்கும், விமானங்களுக்கும் அதேபோல வெளிநாட்டில் இருந்துவருகின்ற விமானங்களுக்கும் கப்பல்களுக்கும் தற்போதுள்ள நடைமுறையே தொடரும்


2 நாட்களுக்கு தளர்வு கிடையாது


ஜூன் 21 மற்றும் 28 ஆகிய இரு ஞாயிற்றுக்கிழமைகளில் மேற்கண்ட எந்த வித தளர்வும் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். இவ்விரு நாட்களிலும் பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்து கடைகள், மருத்துவமனை ஊர்திகள் , அவசர மற்றும் அமரர் ஊர்திகள் தவிர வேறு எந்தவிதமான செயல்பாடுகளுக்கும் அனுமதி கிடையாது. அவசர மருத்துவ உதவிகளுக்கு மட்டுமே தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படுகிறது. கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்தவிதமான செயல்பாடுகளும் அனுமதிக்கப்பட மாட்டாது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் காலத்தில் இது மிகவும் தீவிரமாக்கப்பட்டு கண்காணிக்கப்படும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள வீடுகளுக்கும் மற்றும் தனிமபடுத்தப்பட்ட வீடுகளுக்கும் அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்யும். இந்த பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு ஒரு நாளைக்கு இரு முறை தெளிக்கப்படும்.


ஒருங்கிணைப்பு


ஊரடங்கின் போது,
* 104( கட்டுப்பாட்டறை) மற்றும் 108(அவசர கால ஊர்தி) ஆகிய சேவைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும்.

* அத்தியாவசிய பொருட்கள் வழங்குதல் மற்றும் ஆபத்து கால மருத்துவ உதவி ஆகியவற்றை சிறப்பு கட்டுப்பாட்டு அறைகள் மூலம் ஒருங்கிணைக்கப்படும்.


ஆயிரம் ரூபாய் நிவாரணம்

ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு
* பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளிலும்

* திருவள்ளூர் மாவட்டத்தில், சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிபூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகளிலும் மற்றும் பூவிருந்தவல்லி , ஈக்காடு மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும்,

* செங்கல்பட்டு மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்ககுட்பட்ட பகுதிகள், செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் நகராட்சிகளிலும், நந்திவரம்- கூடுவாஞ்சேரி பேரூராட்சியிலும் மற்றும் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும்

* காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும். அதேபோன்று, மேற்குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கும் மற்றும் பல்வேறு துறைகளிலுள்ள பிற நலவாரிய உறுப்பினர்களுக்கும் ஆயிரம் ரூபாய் நிவாரணமாக அரசு வழங்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
16-ஜூன்-202011:03:41 IST Report Abuse
Thiagarajan Kodandaraman ராணுவத்தை நாடாவிட்டால் மக்களை கட்டுப்படுத்தமுடியாது .கூட்டம் கூடுவதை தடுக்க ராணுவ பாதுகாப்பு கண்டிப்பாக தேவை காவல்துறைக்கு மக்கள் பயப்படுவது போல் தெரியவில்லை
Rate this:
Cancel
15-ஜூன்-202022:04:24 IST Report Abuse
rasheed காப்பாற்றுவதற்கு. ஜோசியம். கேளுங்க
Rate this:
Cancel
15-ஜூன்-202022:01:49 IST Report Abuse
rasheed அதிர்ச்சி.செய்தி. கடவுள். காப்பாற்ற. வேண்டும். எங்கள். உயிர். அல்லவா. இந்த. மாவட்ட .எங்களுக்கு. சோறு. போட்டது.. தமிழக. முதுகு எலும்பு. அல்லவா.. கோடிகள். வருமானம். தரும் மாவட்டம் மக்கள். நீங்க. உஷார்.. அரசு. சொல்வது. கேளுங்க அதான். பின்பு. நாம். கேட்கல ஒட்டு. போட்டு. உள்ளது. நீங்க. தான். காப்பத்துனு .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X