சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

பசுமையான நினைவுகள்!

Added : ஜூன் 15, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
பசுமையான நினைவுகள்!'இப்படிப்பட்ட மனிதரை பார்த்ததே இல்லை; என்ன ஒரு அபார ஞாபக சக்தி' என, பிரதமர் மோடியை பாராட்டுகின்றனர், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள, அவரது பழைய நண்பர்கள். மோடி, 1980களுக்கு முன், ஆர்.எஸ்.எஸ்., மற்றும் ஜனசங்கத்தில் இருந்தபோது, நாட்டில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று, சேவையில் ஈடுபட்டுள்ளார். மேற்கு வங்க மாநிலத்திலும் கணிசமான காலம் இருந்தார். அப்போது,
 பசுமையான நினைவுகள்!

பசுமையான நினைவுகள்!

'இப்படிப்பட்ட மனிதரை பார்த்ததே இல்லை; என்ன ஒரு அபார ஞாபக சக்தி' என, பிரதமர் மோடியை பாராட்டுகின்றனர், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள, அவரது பழைய நண்பர்கள். மோடி, 1980களுக்கு முன், ஆர்.எஸ்.எஸ்., மற்றும் ஜனசங்கத்தில் இருந்தபோது, நாட்டில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று, சேவையில் ஈடுபட்டுள்ளார். மேற்கு வங்க மாநிலத்திலும் கணிசமான காலம் இருந்தார்.
அப்போது, ஆர்.எஸ்.எஸ்., மற்றும் ஜன சங்கத்தில் இருந்த பலர், மோடிக்கு நண்பர்களாயினர். கால சுழற்சியில் மோடி, குஜராத் முதல்வராகி, தற்போது பிரதமராகி விட்டார்.'பிசி' யான அரசியல் வாழ்க்கை மற்றும் நிர்வாக பணிகளின் காரணமாக, பழைய நண்பர்களுடன், அவருக்கு தொடர்பு இல்லாமல் போய் விட்டது. அவரது நண்பர்களும், மோடி, தங்களை மறந்து விட்டதாக நினைத்திருந்தனர். ஆனால் சமீபத்தில், மேற்கு வங்கத்தில் உள்ள, தன் பழைய நண்பர்களுடன் தொலைபேசி வாயிலாக பேசி, அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார் மோடி.ஒவ்வொருவரையும், அவர்களது பெயரைச் சொல்லி அழைத்து, 'எப்படி இருக்கீங்க... பழைய நினைவுகள் ஞாபகமிருக்கிறதா?' எனக் கேட்டு, நீண்ட நேரம் சுவாரசியமாக பேசினார். இறுதியில், 'கொரோனா காலத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வீட்டை விட்டு தேவையில்லாமல் வெளியில் வர வேண்டாம்' என, அன்புடன் அறிவுறுத்தவும் செய்தார்.
'உயர்ந்த பதவியில் இருந்தாலும், பழைய நினைவுகளை மறக்காத எளிமையான மனிதர்' என, மோடியை புகழ்கின்றனர், அவரது நண்பர்கள்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thomas - Al Khor,கத்தார்
16-ஜூன்-202013:10:10 IST Report Abuse
Thomas இப்படி புகழுகிற செய்தியை எங்கும் பார்கவில்லேயே. நல்ல வடை
Rate this:
Cancel
Rajavel - Ariyalur,இந்தியா
16-ஜூன்-202006:29:13 IST Report Abuse
Rajavel 10 லட்சம் மதிப்புள்ள கோட் போடும் நபர் எளிய மனிதரா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X