பாக்.,கில் ஜூலைக்குள் 10 லட்சம் பேர் பாதிக்கப்படுவர்

Updated : ஜூன் 15, 2020 | Added : ஜூன் 15, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement

பாகிஸ்தானில் மக்கள் சமூக இடைவெளியை கண்டுகொள்ளாததால், ஜூலை இறுதிக்குள் 10 லட்சம் பேர் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவர் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.latest tamil newsநம் அண்டை நாடான பாகிஸ்தானின் மக்கள்தொகை 21.2 கோடியாக உள்ளது. அதில் தற்போது 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்த பரிசோதனை காரணமாக கொரோனா உயிரிழப்பு 2,700 ஐ கடந்துள்ளது.
கடந்த மே மாதத்தில் பண்டிகை காலம் என்பதால் பாக்.,அரசின் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி மசூதிகள் மற்றும் சந்தைகளுக்கு மக்கள் சிலர் சென்று வந்தனர். அதன் பாதிப்பால் கடந்த 2 வாரங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாக்., திட்டத்துறை அமைச்சர் ஆசாத் உமர் , 'கொரோனா கட்டுப்பாடு நடைமுறைகளை எளிதாக எடுத்துகொண்டதால், ஜூன் மாத இறுதிக்குள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சம் வரை உயரக்கூடும் என நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். அடுத்த மாத இறுதிக்குள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 12 லட்சமாக அதிகரிக்க கூடுமென அஞ்சுகிறோம்'இவ்வாறு அவர் கூறினார்.
பாகிஸ்தானில் பெரும்பாலானோர் சமூக இடைவெளி நடைமுறைகளை பின்பற்றாததுடன், கிருமிநாசினியால் கைகளை கழுவது போன்ற தடுப்பு நடவடிக்கைகளை கண்டுகொள்வதில்லை. ஒருநாளைக்கு 25 ஆயிரம் பேருக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இது ஆயிரம் பேரில் 4 பேருக்கு மட்டும் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. உண்மையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.40 லட்சத்தை விட அதிகமாக இருக்குமென கூறப்படுகிறது.


latest tamil newsபுதிய இடைப்பட்ட ஊரடங்கை அமல்படுத்தாவிட்டால், ஜூலைக்குள் 8 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவர் என உலக சுகாதார அமைப்பு பாகிஸ்தானுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏப்.1ம் தேதி விதித்த ஊரடங்கு விதிகளை மே 22ம் தேதி பாகிஸ்தான் அரசு, தளர்த்தியதற்கு உலக சுகாதார அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balakrishnan Kamesh - tiruvarur,இந்தியா
16-ஜூன்-202010:07:33 IST Report Abuse
Balakrishnan Kamesh பாகிஸ்தானிய தீவிரவாதிகள் எல்லோரும் CORONA வந்து அழிந்து விட்டால் .. கெட்டதிலேயும் ஒரு நல்லது ..
Rate this:
Cancel
Raj - Tirunelveli,இந்தியா
16-ஜூன்-202009:26:30 IST Report Abuse
Raj நம்ம பொழப்பை பாருங்கய்யா முதல.
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
16-ஜூன்-202008:00:46 IST Report Abuse
VENKATASUBRAMANIAN In India because of them it is aggravated. We know that they were not co operatkng with health officials in many states especially TN, Karnataka, etc.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X