நம்மூருல கொரோனா கிராப் ஏறுது | Dinamalar

நம்மூருல கொரோனா 'கிராப்' ஏறுது

Added : ஜூன் 16, 2020
Share
ரே ஸ்கோர்ஸ் சுற்றுவட்டச் சாலையில், 'வாக்கிங்' செல்ல தடை விதித்திருப்பதால், வீட்டு மொட்டை மாடியில், சித்ராவும், மித்ராவும் நடை பயிற்சி செய்து கொண்டிருந்தனர்.''அக்கா, ரேஸ்கோர்ஸ் பகுதியை, 'மாதிரி சாலை'யா மாத்தப் போறாங்களாமே,'' என, ஆரம்பித்தாள் மித்ரா.''ஆமா மித்து, ரூ.40.67 கோடி 'ஒதுக்கி'யிருக்காங்க. பூமி பூஜைக்கு போயிருந்தேன். ஆளுங்கட்சி கொடி கட்டியிருந்தாங்க;
 நம்மூருல கொரோனா 'கிராப்' ஏறுது

ரே ஸ்கோர்ஸ் சுற்றுவட்டச் சாலையில், 'வாக்கிங்' செல்ல தடை விதித்திருப்பதால், வீட்டு மொட்டை மாடியில், சித்ராவும், மித்ராவும் நடை பயிற்சி செய்து கொண்டிருந்தனர்.''அக்கா, ரேஸ்கோர்ஸ் பகுதியை, 'மாதிரி சாலை'யா மாத்தப் போறாங்களாமே,'' என, ஆரம்பித்தாள் மித்ரா.''ஆமா மித்து, ரூ.40.67 கோடி 'ஒதுக்கி'யிருக்காங்க. பூமி பூஜைக்கு போயிருந்தேன். ஆளுங்கட்சி கொடி கட்டியிருந்தாங்க; பிளக்ஸ் பேனர் வச்சிருந்தாங்க. 'கொரோனா' வைரஸ் பரவல் பத்தி துளியும் கவலைப்படாமல், சமூக இடைவெளியின்றி, கட்சிக்காரங்க நெருக்கமா நின்றிருந்தாங்க.''கொரோனாவுக்கு தி.மு.க., - எம்.எல்.ஏ., ஒருத்தரு இறந்துட்டாரு; ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,வுக்கு தொற்று இருக்கறது உறுதியாகியிருக்கு. இதெல்லாம் தெரிஞ்சிருந்தும், அடிக்கடி விழா நடத்தி, கூட்டம் சேர்க்குற வேலையை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் தொடர்ந்து செஞ்சுக்கிட்டு இருக்கு,''''கொரோனாவை வென்ற கோவைன்னு, ஊரெல்லாம் போஸ்டர் ஒட்டியிருக்காங்களே,''''மித்து, நம்மூர்ல உண்மை நிலவரத்தை வெளிப்படையா சொல்றதில்லை. சென்னையில இருந்து வந்த, 28 வயது இளைஞர் இறந்திருக்காரு; இன்னும் ஆய்வு முடிவு வரலைன்னு, 'ஹெல்த் டிபார்ட்மென்ட்'டுக்காரங்க, சப்பைக்கட்டு கட்டுறாங்க.''வெளியூர்ல இருந்தும், வெளிமாநிலத்துல இருந்து வந்தவங்க தொடர்புல இருந்தவங்களுக்கும் நோய் பரவியிருக்காம். கார்ப்பரேஷன்ல இருந்து, 'டெய்லி', 10 பேர் வீட்டுலயாவது, 'தனிமைப்படுத்திய வீடு'ன்னு, 'ஸ்டிக்கர்' ஒட்டுறாங்களாம். இனிமே வெளியே போகும்போது, ஜாக்கிரதையா இருக்கணும். இன்னும் கொஞ்ச நாளைக்கு, பொது போக்குவரத்தை பயன்படுத்தாம இருக்கறது நல்லதுன்னு சொல்றாங்க,'''ரேஸ்கோர்ஸ் போலீஸ்காரங்க, பாராட்டு மழையில நனைஞ்சாங்களாமே,''''அதுவா, 'கவர்மென்ட்' ஆஸ்பத்திரியில, பச்சிளம் குழந்தையை கடத்திட்டு போன தம்பதியை, 24 மணி நேரத்துக்குள்ள மீட்டாங்க. ஸ்டேஷன் போலீஸ்காரங்களை உயரதிகாரிங்க பாராட்டுனாங்க,'' என்றாள்.''அதிருக்கட்டும், ஆளுங்கட்சி வி.ஐ.பி.,யை விமர்சனம் செய்த, தென்றலுக்கு சொந்தக்காரர், ஜெயிலில் வாடிக் கிடக்குறாராமே,'' என, கிண்டலாக கேட்டாள் மித்ரா.''ஆமாம், நானும் கேள்விப்பட்டேன். ஏற்கனவே ஒரு தடவை ஜாமின் மனு, 'ரிஜக்ட்' ஆகிடுச்சு. மறுபடியும் மனு செஞ்சிருக்காரு; ஆட்சேபனை தெரிவிக்காதீங்கன்னு, ஆளுங்கட்சிக்காரங்களிடம் கெஞ்சிக்கிட்டு இருக்காராம்,''''போலீஸ் அதிகாரி ஒருத்தரு, 'டிரான்ஸ்பர்' ஆர்டரை கேன்சல் பண்ண வச்சிட்டாராமே,'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள்.''அடடே, ஒனக்கும் தெரிஞ்சு போச்சா. மூன்றெழுத்து 'லேடி' போலீஸ் அதிகாரியை, பி.ஆர்.எஸ்.,க்கு 'டிரான்ஸ்பர்' செஞ்சிருக்காங்க. தன்னுடைய அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, அந்த உத்தரவை கேன்சல் செஞ்சிட்டாங்களாம். போலீஸ் வட்டாரத்துல, அந்த அதிகாரிதான், 'பவர் சென்டரா' இருக்காராம்,'' என்றபடி, 'வாக்கிங்'கை நிறைவு செய்து, தரைதளத்துக்கு இறங்கி வந்தாள் சித்ரா.அன்றைய நாளிதழ்கள் வந்திருந்தன. அதை எடுத்து படித்த மித்ரா, ''கொரோனா நிவாரணத் தொகையை, ஆளுங்கட்சி 'மாஜி' கவுன்சிலர், அவருடைய வங்கி கணக்குல வரவு வச்சிட்டாராமே,'' என, கிளறினாள்.''அதுவா, ஏழை எளிய மக்களுக்கு நிவாரணப் பொருள் கொடுக்குறதுக்கு, பிரபலமான 'டிபார்ட்மென்ட் ஸ்டோர்' பொறுப்பாளர்களை அணுகியிருக்காங்க. மூணு லட்ச ரூபாய்க்கு பொருள் கொடுக்குறதுக்கு ஒத்துக்கிட்டாங்களாம். அதை வாங்கப் போன, 'மாஜி' கவுன்சிலர், ஒரு லட்சம் ரூபாய்க்கு பொருள் கொடுத்தா போதும்; மீதமுள்ள இரண்டு லட்ச ரூபாயை, வங்கி கணக்குல வரவு வைக்கச் சொல்லிட்டாராம். ஆளுங்கட்சி தரப்புல பேசிக்கிட்டாங்க,'' என்றபடி, சமையலறைக்குள் நுழைந்த சித்ரா, காபி போடுவதற்கு, பால் சூடுபடுத்தினாள்.பின்தொடர்ந்து சென்ற மித்ரா, ''ஆளுங்கட்சி பிரமுகருக்கு பெருந்தொகையை கொடுத்திட்டு, தி.மு.க.,வினர் வெளியே ஜாலியா இருக்காங்களாமே,'' என, பழையதை கிளறினாள்.''மித்து, நீ, எதை கேட்க வர்றேன்னு தெரியுது. பழைய ரூபாய் நோட்டுகளை மாத்தி தர்றதா சொல்லி, கோடிக்கணக்குல தி.மு.க., பிரமுகர் சுருட்டுனாரே, அந்த வழக்குதானே! குற்றம் சுமத்தப்பட்ட எல்லோருமே, ஜாமின் வாங்கிட்டு, வெளியே இருக்காங்க.''குற்றப்பத்திரிகை தயாரிக்கிற வேலை நடந்துக்கிட்டு இருக்காம்; முக்கியமான தடயம் கெடைச்சிருக்குன்னு போலீஸ் தரப்புல சொல்லிட்டு இருக்காங்க. ஆளுங்கட்சி பிரமுகருக்கு பெரிய தொகையை கொடுத்திட்டு, தி.மு.க.,காரங்க ஜாலியா இருக்குறதாவும் சொல்றாங்க,'' என்றபடி, காபி கோப்பையை நீட்டினாள் சித்ரா.அதை வாங்கி உறிஞ்சிய மித்ரா, ''விளாங்குறிச்சியில, விநாயகபுரம் சாலை இருக்கு; அங்குள்ள ஒரு பேக்கரியில, சாயங்காலத்துக்கு மேல, டபுள் ரேட்டுல, கூல் பீர் விக்கிறாங்களாம்,'' என்றபடி, வராண்டாவில் அமர்ந்தபடி, நாளிதழ்களை புரட்ட ஆரம்பித்தாள்.கல்வித்துறை சார்ந்த செய்தியை படித்த மித்ரா, ''பாரதியார் பல்கலையில, 'வாகன மேற்பார்வையாளர்'ன்னு, போஸ்டிங் இல்லையாம். ஆனா, ஒரு டிரைவர், துணைவேந்தர் பெயரை தவறா பயன்படுத்தி, மத்தவங்களை மிரட்டிட்டு இருக்காராம். 'சூபர்வைசர்' போல் நடந்துக்கிறாராம்; மத்தவங்களை வேலை வாங்கிட்டு, 'ஓபி' அடிக்கிறதுல கில்லாடியாம்,''''அக்கா, கார்ப்பரேசன்ல, ஒவ்வொரு ஆபீசருக்கும் ஏகப்பட்ட உதவியாளர்கள் நியமிச்சிருக்காங்க. வருவாய் பிரிவு உதவி கமிஷனர் அலுவலகத்துல, ஆறு பேர் வேலை பார்க்குறாங்க. டீ வாங்க மட்டும் மூணு பேர் இருக்காங்களாம். ஒவ்வொருத்தருக்கும், 50 ஆயிரத்துல இருந்து, ஒரு லட்சம் ரூபாய் வரைக்கும் சம்பளமாம்.''இன்னொரு ஆபீசருக்கு, 13 உதவியாளர்கள் இருக்காங்களாம். மக்களின் வரிப்பணம் எப்படியெல்லாம் வீணாப் போகுது. ஒருத்தருக்கு ஒரு உதவியாளர் போதாதா? மத்தவங்களை, அந்தந்த பணியிடங்களுக்கு திருப்பி அனுப்புனா, நல்லாயிருக்கும்,''''அதெல்லாம் சரி, கார்ப்பரேஷன்ல இருக்குற ஒரு அதிகாரி, மூணு இடத்துல, 'ரூம்' போட்டு, கல்லா கட்டுறாராமே,''''மித்து, அந்த அதிகாரிக்கு, அரசு தரப்புல குவார்ட்டர்ஸ் ஒதுக்கியிருக்காங்க. இரண்டு அடுக்குமாடி குடியிருப்புல, வீடு இருக்காம். அங்க வச்சுதான், 'டீல்' பேசி முடிப்பாராம். அவிநாசி ரோட்டுல, புதுசா துவக்குன ஓட்டலில், 'ரூம்' போட்டு குடிக்கிறாராம். ஆளுங்கட்சி தரப்புக்கு விசயம் தெரிஞ்சு, ஆபீசர்களை உளவு பார்க்க ஆரம்பிச்சிருக்காங்களாம்,''''அதெல்லாம், மேலிடத்து சமாசாரம். இப்ப, கிராம ஊராட்சியிலும் அரசியல்வாதிகள் தலையீடு ரொம்ப அதிகமாயிடுச்சுன்னு கேள்விப்பட்டேனே,'' என, 'ரூட்' மாறினாள் மித்ரா.''மத்வராயபுரம்னு ஒரு ஊராட்சி இருக்கு. அங்க இருக்குற, 'லேடி' கவுன்சிலரின் கணவர், 'தலை'யீடு ஜாஸ்தியாகிருச்சாம். 'ஆக்டிங் சேர்மன்' மாதிரி நடந்துக்கிறாராம்; எதுவா இருந்தாலும், தன்னை கேக்காம செய்யக்கூடாதுன்னு ஆர்டர் போடுறாராம். கவுன்சிலரது கணவரா இருந்துட்டு, இவ்ளோ அழிச்சாட்டியம் செய்றாருன்னு, ஆபீசர்ஸ் புலம்புறாங்க,'' என்றபடி, சமையலறைக்குள் நுழைந்தாள் சித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X