மலேரிய மருந்தை பயன்படுத்துவதற்கான அனுமதி வாபஸ்

Updated : ஜூன் 16, 2020 | Added : ஜூன் 16, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
வாஷிங்டன்: கொரோனா அவசர சிகிச்சைக்கு பயன்படுத்த மலேரியா கூட்டு மருந்துக்கு அளித்த அனுமதியை திரும்ப பெறுவதாக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு அறிவித்துள்ளது.அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கொரோனா தொற்று சிகிச்சைக்கு குளோரோகுவின் மற்றும் ஹைட்ராக்ஸி குளோரோகுவின் மருந்துகள் உடனடியாக

வாஷிங்டன்: கொரோனா அவசர சிகிச்சைக்கு பயன்படுத்த மலேரியா கூட்டு மருந்துக்கு அளித்த அனுமதியை திரும்ப பெறுவதாக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு அறிவித்துள்ளது.



latest tamil news



அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கொரோனா தொற்று சிகிச்சைக்கு குளோரோகுவின் மற்றும் ஹைட்ராக்ஸி குளோரோகுவின் மருந்துகள் உடனடியாக பலனளிக்கவில்லை. கொரோனா சிகிச்சைக்கு வாய் வழியாக குளோரோகுவின் , ஹைட்ராக்ஸி குளோரோகுவினை எடுத்து கொள்வது பயனுள்ளதாக இருக்குமென நீண்ட காலம் நம்ப முடியாது.கூடுதலாக, தீவிரமாகி வரும் இதயம் தொடர்பான பாதகமான அம்சங்கள் மற்றும் தீவிரமான பக்க விளைவுகள் வெளிவரும் நிலையில், மலேரியாவுக்கான மருந்தை பயன்படுத்துவதில் நன்மைகளை விட அபாயங்களே அதிகமாக இருக்கின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் கொரோனாவுக்கு தடுப்பு மருந்தாக மலேரியா தடுப்பு மருந்து செயல்படுவதற்கு மருத்துவ ரீதியாக ஆதாரம் இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். தொடர்ந்து கொரோனா நோயாளிகளுக்கு மலேரிய மருந்தை பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து அமைப்பு அனுமதி அளித்தது.


latest tamil news



ஹைட்ராக்ஸி குளோரோகுவினுடன் ஆன்டிபாடி மருந்தான அசித்ரோமைசினை பயன்படுத்துவது, மருத்துவ வரலாற்றில் மிகப்பெரிய திருப்பு முனையாக இருப்பதற்கு வாய்ப்புள்ளதாக டிரம்ப் அறிவித்திருந்தார். வெள்ளை மாளிகையில் பணியாற்றிய இரு அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து, தினமும் ஹைட்ராக்ஸி குளோரோகுவின் மருந்தை தானும் எடுத்து கொள்வதாகவும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathaiyyan - Kolkata,இந்தியா
16-ஜூன்-202017:12:07 IST Report Abuse
Loganathaiyyan தெனோம் தெனோம் இதே தண்டமா போச்சு ஒரு நாள் இதை உபயோகியுங்கள் ட்ரம்ப் கூட உபயோகிக்கின்றார் என்பது அடுத்த நாள் இதை உபயோகிக்கக்கூடாது என்பது, போயி வேறே நல்ல வேலை ஏதாவது இருந்தால் செய்யுங்கள்.
Rate this:
Cancel
Maatram makkalidathil irundhu varavendum - chennai,இந்தியா
16-ஜூன்-202010:43:30 IST Report Abuse
Maatram makkalidathil irundhu varavendum இந்த மாதிரி செய்தி வரும்னு எதிர்பார்த்தது தானே. ஹைட்ரொஸ்ய்க் கோளாறோக்கின்கு sponsors இல்ல அதுனால அந்த மருந்தை முடக்கி ரெம்பேசிவர் விளம்பர படுத்துனாதான் Bill Gatesகு லாபம் வரும். அதுக்கு தான் இந்த மருந்து மேல இப்படி ஒரு புகார் போடுறாங்க. ஏற்கனவே ரெமிடீஸிவேர் மக்கள் மேல சோதிக்க நிறைய நாட்டு அரசாங்கம் அனுமதி கொடுத்திடுச்சி (இந்தியாவும் இதில் அடங்கும்). எப்படியோ வெளிநாடு மருந்து கம்பெனி காசு பார்க்க எல்லாநாடு மக்களையும் வெச்சி விளையாட போறாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X