பொது செய்தி

தமிழ்நாடு

இன்னொரு கோயம்பேடாக உருவாகிறதா மதுரை?

Updated : ஜூன் 16, 2020 | Added : ஜூன் 16, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
மதுரை: மதுரை பரவை மார்க்கெட்டில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்னொரு கோயம்பேடாக பரவை உருவெடுக்கிறதா என்ற அச்சம் தொற்றியுள்ளது.மாவட்டத்தில் இம்மாதம் துவக்கம் முதல் கொரோனா பாதிப்பு எகிறி வருகிறது. தினமும் சராசரியாக 15 பேர் பாதிக்கப்படுகின்றனர். ஒரு வாரத்தில் மட்டும் 120க்கும் மேற்பட்டோரை கொரோனா தாக்கியுள்ளது.
Paravai market, Madurai,மதுரை, பரவை மார்க்கெட், கொரோனா, covid 19

மதுரை: மதுரை பரவை மார்க்கெட்டில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்னொரு கோயம்பேடாக பரவை உருவெடுக்கிறதா என்ற அச்சம் தொற்றியுள்ளது.

மாவட்டத்தில் இம்மாதம் துவக்கம் முதல் கொரோனா பாதிப்பு எகிறி வருகிறது. தினமும் சராசரியாக 15 பேர் பாதிக்கப்படுகின்றனர். ஒரு வாரத்தில் மட்டும் 120க்கும் மேற்பட்டோரை கொரோனா தாக்கியுள்ளது. படிப்படியாக தொற்று தீவிரமடைவதால் துாங்கா நகருக்கும் தலைநகர் நிலை வந்துவிடுமோ என்ற அச்சம் தொற்றியுள்ளது. இதை மெய்ப்பிப்பதாக மதுரை பரவை மார்க்கெட்டில் ஒரே சமயத்தில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மார்க்கெட்டின் ஒரு மொத்தக்கடை உரிமையாளர் மற்றும் குடும்பத்தினருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டது. சோதித்ததில் உரிமையாளர் உட்பட குடும்பத்தினர் 4 பேருக்கு தொற்று உறுதியானது. இவர்கள் விளாங்குடி சி.ஏ.எஸ்.காலனியை சேர்ந்தவர்கள். சந்தேகத்தின் பேரில் உரிமையாளருடன் தொடர்பில் இருந்த ஊழியர்கள், பக்கத்து கடைக்காரர்களுக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் நரிமேட்டை சேர்ந்த 35 வயது ஆண், விளாங்குடியை சேர்ந்த 45 வயது ஆண் உட்பட 7 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இதில் ஒருவர் கடையின் மேலாளர் ஆவார். சென்னையில் இன்று கொரோனா தலைவிரித்தாடுவதற்கு கோயம்பேடு மார்க்கெட் தான் காரணம் என சொல்லப்படும் நிலையில், பரவை மார்க்கெட் விவகாரம் பூதாகரமாகியுள்ளது.


என்ன செய்ய வேண்டும்?


மார்க்கெட்டிற்கு கொரோனா ஹாட்ஸ்பாட் பகுதிகளான மகாராஷ்டிரா, சென்னையில் இருந்தும் காய்கறி லோடுகள் வருகின்றன. இதுவே பாதிப்பிற்கு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. அப்படியென்றால், மார்க்கெட்டின் பிற கடைக்காரர்கள், ஊழியர்களுக்கும் தொற்று இருக்கும் அபாயம் உள்ளது. எனவே மார்க்கெட் கடை உரிமையாளர்கள், ஊழியர்கள், சரக்கு வாங்கி சென்றவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்வது அவசியம். இல்லையென்றால் மதுரையின் ஒரு பகுதி முழுவதும் கொரோனாவால் பாதிக்கக்கூடும்.

பரிசோதனை மேற்கொள்ளப்படும் வரை பரவை மார்க்கெட் கடை உரிமையாளர்கள், ஊழியர்கள், அங்கு பொருட்கள் வாங்கியவர்கள் தங்களை வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கான அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் வெளியிட வேண்டும். இதில் ஒரே ஒரு ஆறுதல், வியாபாரிகள் தாமாக முன்வந்து மார்க்கெட்டை மூடியது தான். மறு அறிவிப்பு வரும் வரை மீண்டும் மார்க்கெட் திறக்கப்படாது. அதற்குள் அனைவருக்கும் பரிசோதனையை முடிக்க வேண்டும். இல்லையென்றால் பரவை இன்னொரு கோயம்பேடாக உருவெடுப்பதை யாராலும் தடுக்க முடியாது.


latest tamil news
அனைவருக்கும் பரிசோதனை:


கலெக்டர் உத்தரவுகலெக்டர் டி.ஜி.வினய் பிறப்பித்துள்ள உத்தரவு:

* மறு உத்தரவு வரும் வரை பரவை மார்க்கெட்டை திறக்கக்கூடாது. உத்தரவை மீறும் கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும். பேரிடர் மேலாண்மை சட்டம் பாயும். இன்று முதல் மார்க்கெட் வளாகத்தை தினமும் இரு முறை கிருமி நாசினியால் சுத்தம் செய்ய மாநகராட்சி 1வது மண்டல உதவி கமிஷனருக்கு உத்தரவிடப்படுகிறது.

* அனைத்து உரிமையாளர், ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைவருக்கும் கபசுரகுடிநீர், ஜிங்க், விட்டமின் சி மாத்திரைகள் வழங்க பரவை மொத்த காய்கறி வியாபாரிகள் சங்கம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

* மார்க்கெட் மூடப்பட்டு சீலிடப்படுவதை கண்காணித்து அறிக்கை அளிக்க மதுரை ஆர்.டி.ஓ., வடக்கு தாசில்தாருக்கு அறிவுறுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மாட்டுத்தாவணி மார்க்கெட்டிலும் பாதிப்பு:


மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் வேலை செய்த 37 வயது லோடுமேன், பழ மார்க்கெட் கடை ஒன்றில் வேலை செய்த 17 வயது வாலிபர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இப்படி மார்க்கெட்டுகளில் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்படுவது மதுரைக்கு பெரும் சவாலாகவும், அச்சுறுத்தலாகவும் உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
16-ஜூன்-202017:05:24 IST Report Abuse
தமிழவேல் நடைபாதையை மறைத்து கடைவிரிப்பதால், பாதை சுருங்குகின்றது. அதனால் மக்களின் நெருக்கம் அவசியமாகின்றது. இதை போட்டோகளில் பார்க்க முடிகின்றது. இதை அதுவும் இந்த சமயத்தில் காவல்துறை எப்படித்தான் அனுமதிக்கின்றதோ.
Rate this:
Cancel
Rengaraj - Madurai,இந்தியா
16-ஜூன்-202013:35:08 IST Report Abuse
Rengaraj அரசு அனுமதித்த அளவு ஆட்டோ பயணிகளை ஏற்றுவதில்லை. பயணியரும், ஓட்டுனரும் முக கவசம் அணிவதில்லை. சமூக இடைவெளி விட்டு பயணியர் அமர்வதில்லை. சோப்பு, சானிடைஸர் இருப்பதில்லை. குறைந்தபட்சம் கைகழுவ தண்ணீரும் இல்லை. பயனியரிடம் கூடுதல் கட்டணம் வேறு வசூல். டீக்கடைகளில் சர்வ சாதாரணமாக நாலுபேர் அல்லது கூட்டம் கூட்டமாக நின்று அரட்டை அடிக்கிறார்கள். அவை மீட்டிங் ஸ்பாட் போன்று மாறிவிட்டது. மதுரை காளவாசல் பைபாஸ் ரோட்டில் இருக்கும் ரோட்டோர கடைகளை பார்த்தால் தெரியும். முக கவசத்தையும் முழுவதும் மறைக்காமல் பேருக்கு அணிந்து கொண்டு செல்கிறார்கள். எல்லா கடைகளிலும் நுகர்வோருக்கு சோப்பு தண்ணீர் அல்லது சானிடாயிஸர் தருவதில்லை. தெருவோர பழக்கடைகள், தள்ளுவண்டியில் காய்கறி விற்பவர்கள் சமூக இடைவெளி என்பதை மறந்து வியாபாரம் செய்கிறார்கள். ஒருவர் பக்கத்தில் மற்றவர்களை நிற்க அனுமதிக்கிறார்கள். பெரிய பெரிய சூப்பர் மார்க்கட் அல்லது டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் அரசின் உத்தரவுகளை மதிக்கிறார்கள். மற்றபடி வெளியிடங்களில் மதிப்பதில்லை. இவற்றை மாவட்ட அல்லது மாநகராட்சி நிர்வாகம் கவனிக்க வேண்டும் அல்லவா? கடுமை காட்டி தண்டனையை அதிகப்படுத்தினால் மட்டுமே இவர்கள் திருந்துவார்கள். அரசாங்கம், காவலர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் இந்த நோயோடு நடத்தும் போராட்டம் இவர்கள் கண்ணுக்கு தெரிவதில்லை. பத்து நாட்கள் அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்தால்தான் தெரியும்.
Rate this:
Cancel
PR Makudeswaran - Madras,இந்தியா
16-ஜூன்-202010:05:14 IST Report Abuse
PR Makudeswaran சங்கம் வளர்த்த மதுரை .அது அந்த பொன்னான காலத்தில் இன்று கொரோன வளர்க்கிறது கழக ஆட்சிக் காலத்தில்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X