பொது செய்தி

இந்தியா

காஷ்மீரில் 17 நாளில் 27 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Updated : ஜூன் 16, 2020 | Added : ஜூன் 16, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
J&K, Terrorist, Killed, Dilbag Singh, Jammu & Kashmir, DGP,  பயங்கரவாதிகள், பாகிஸ்தான், காஷ்மீர், கொலை, தில்பாக்சிங்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் கடந்த 17 நாள்களில் 27 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக டிஜிபி தில்பாக் சிங் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவலும், பாதுகாப்பு படையினர் மீதான தாக்குதலும் தொடர்ந்துக் கொண்டே செல்கிறது. இந்திய பாதுகாப்பு படையினரின் தொடர் தாக்குதலால், பயங்கரவாதிகளின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஜம்மு - காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங், தோடா மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காஷ்மீரில் அமைதியை உறுதி செய்வதற்கு, கடந்த 17 நாளில் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய பயங்கரவாத இயக்கங்களை சோ்ந்த 27 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.


latest tamil news



இதனால் நிலைகுலைந்துள்ள பயங்கரவாதிகள், தற்போது அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இது அரசுக்கு மட்டுமன்றி காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்கள் இடையிலும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. தோடா மாவட்டத்தில் ஒரு பயங்கரவாதி மட்டும் தற்போது பதுங்கியுள்ளார். அவரும் விரைவில் பிடிபட்டதும், இந்த மாவட்டம் பயங்கரவாதத்தில் இருந்து விடுபடும். கடந்த 5 மாதங்களில் அதிகளவிலான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனாலும், ஜம்மு-காஷ்மீரில் வன்முறையை அதிகரிக்க, பாக்., தொடர்ந்து பயங்கரவாதிகளை அனுப்பி வருகிறது. அவர்களின் ஊடுருவலை முறியடிக்க எல்லை கட்டுப்பாட்டு பகுதிகளில் பாதுகாப்பு பலமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suppan - Mumbai,இந்தியா
16-ஜூன்-202017:19:01 IST Report Abuse
Suppan ராகுல், ஒவாய்சி, ஜிவாஹருல்லாஹ், சீமான் வகையறாக்கள் கூவவில்லையே "அய்யோ எங்கள் "சுதந்திரம்" பறிபோகிறதே என்று"? அப்புறம் இந்த உதவாக்கரை ஜவாஹர்லால் நேரு பல்கலை, ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலை "மாணவர்கள்" என்று சொல்லிக் கொள்ளும் தேசத்துரோகிகள் ??
Rate this:
Cancel
16-ஜூன்-202013:23:58 IST Report Abuse
tata sumo 27 pathadhu 22 kodi venum(whole pakistan)
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
16-ஜூன்-202012:51:20 IST Report Abuse
Ramesh Sargam இது போன்ற நல்ல விஷயங்களை ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் பல மோடி விரோதிகள் பேசவே மாட்டார்கள். பெட்ரோல் விலை கூடி போச்சு, அது அப்படி, இது இப்படி என்று ஏதாவது தேவையில்லாத குற்றச்சாட்டுகள்தான் அவர்கள் பேச்சில் எப்பொழுதும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X