எல்லையில் தொல்லை: சீன ராணுவம் சுட்டு 3 இந்திய வீரர்கள் வீரமரணம்; சீன வீரர்கள் 5 பேர் பலி

Updated : ஜூன் 16, 2020 | Added : ஜூன் 16, 2020 | கருத்துகள் (78)
Share
Advertisement
லடாக், சீனா, இந்தியா, எல்லை, பிரச்னை, வீரர்கள், வீரமரணம், Indian Army officer, jawans, killed, violent face-off, Chinese troops, Galwan Valley, ladakh, india, china, border dispute

லடாக்: லடாக் எல்லையில் சீனா ராணுவத்துடனான மோதலில் இந்திய ராணுவ அதிகாரி உட்பட 3 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 5 பேர் பலியானதாக தெரிகிறது.

லடாக் எல்லையில் சில வாரங்களாக இந்தியா - சீனா இடையே பதற்றம் நீடித்து வருகிறது. இரு நாட்டு படைகளை திரும்பப் பெறுவது தொடர்பாக கல்வான் பள்ளத்தாக்கு மற்றும் ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதிகளில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இரு நாட்டு ராணுவத்தின் படைப்பிரிவு தளபதிகள் அளவிலான பேச்சுவார்த்தையை தொடர்ந்து, இரு நாட்டு படைகளும் திரும்பப் பெறப்பட்டு வருகின்றன.


latest tamil news


இந்நிலையில், கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய படைகள் மீது சீன ராணுவம் திடீரென அத்துமீறியது. இரு நாடுகளுக்கிடையே நடந்த மோதலில் இந்திய ராணுவ அதிகாரி மற்றும் 2 வீரர்கள் என 3 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்திய வீரர்கள் கொடுத்த பதிலடியில் சீனா தரப்பிலும் சில வீரர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால், தங்கள் தரப்பு சேத விபரத்தைத சீனா வெளியிடவில்லை.


சீனா குற்றச்சாட்டு:


இதற்கிடையில் தங்கள் எல்லைக்குள் இந்தியா தான் ஊடுருவியதாக சீனா குற்றம்சாட்டியது. தன்னிச்சையாக எந்த செயலிலும் ஈடுபட வேண்டாம் என்றும் சீனா கேட்டுக்கொண்டுள்ளது.


சீன தரப்பில் 4 பேர் பலி?


இந்த மோதலில் சீன தரப்பில் 3 முதல் 4 பேர் வரை இறந்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு தரப்பிலும் பல வீரர்கள் காயமடைந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.


இந்திய ராணுவம் விளக்கம்


இதனிடையே இந்திய ராணுவம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து சீன வீரர்கள் வெளியேறும் போது வன்முறை வெடித்தது. அதில், இரு தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
இதனிடையே, மோதல் காரணமாக இரு தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டதை தொடர்ந்து,கல்வான் பள்ளத்தாக்கு, லடாக் மற்றும் சில பகுதிகளி ல் நிலவும் வன்முறையை குறைக்க இந்திய- சீன ராணுவ மேஜர் ஜெனரல்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.


தமிழர்


சீன ராணுவத்தால் சுடப்பட்டு வீரமரணம் அடைந்த 3 இந்திய வீரர்களில் ஒருவர் பெயர் பழனி. இவர் ராமநாதபுரத்தை சேர்ந்தவர் ஆவார். 22 ஆண்டுகளாக பணிபுரியும் இவர், ஹவில்தாராக உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (78)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
l vijayaraghavan - CHENNAI,இந்தியா
18-ஜூன்-202015:18:40 IST Report Abuse
l vijayaraghavan நாம் பாகிஸ்தானை டீல் செய்வது போல் இந்த சனியனை டீல் பண்ண முடியாது என்பதை அனைவரும் உணர வேண்டும். அது அவ்வளவு எளிதும் அல்ல. சீனாவை முன்னிட்டு இது வரை நாம் செய்து வந்திருக்கும் கட்டமைப்பே மிகவும் பெரிய விஷயம். இப்போ புரிகிறதா உள்கட்டமைப்புப் பணிகள் எ6வ்வளவு முக்கியம் என்று ? ஆனால் இங்கு உள்ள துரோகிகள் கூச்சலிட்டுக் கொண்டேயிருந்தால் என்ன செய்ய ?
Rate this:
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
16-ஜூன்-202022:24:54 IST Report Abuse
Chandramoulli வரும் செய்திகளை பார்த்தால் வீர மரணம் அடைந்த இந்தியர்களின் எண்ணிக்கை அதிகம் ஆகா உள்ளது . துப்பாக்கி சண்டையில் இறந்தவர்கள் அதிகம் என்றும் இரும்பு கம்பியால் தாங்கியதில் மரணம் என்று உள்ளது . எது உண்மை என்று தெரியவில்லை .
Rate this:
Cancel
Balamurugan Balamurugan - cuddalore,இந்தியா
16-ஜூன்-202022:23:26 IST Report Abuse
Balamurugan Balamurugan மோடி அவர்கள் சீனாவை சின்னாபின்னமாக்க வேண்டும் மக்கள் எப்பொழுதும் தேசத்திற்கு துணை நிற்ப்பார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X